கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 TNEA Rank List



2025-2026 கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


2025-2026 Engineering Admissions Rank List


தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். 


145 பேர் 200க்கு 200 கட் ஆஃப் எடுத்துள்ளனர்; 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம்.


தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும்.


சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடக்கம் - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு.



>>> Click Here to Download Rank List...



Karur District - Vacancy Details - Union wise

 

 

கரூர் மாவட்டம் - காலிப் பணியிடங்கள் விவரம் - ஒன்றியங்கள் வாரியாக


Karur District - Block wise Vacant Places 


>>> கரூர் ஒன்றியம்...


>>> தாந்தோணி ஒன்றியம்...


>>> க.பரமத்தி ஒன்றியம்...


>>> அரவக்குறிச்சி ஒன்றியம்...


>>> கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்...


>>> குளித்தலை ஒன்றியம்...


NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு



NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு


திருச்சி மாவட்டம் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் (National Means-cum-Merit Scholarship-NMMS) வெற்றி பெற்றுள்ளார்கள்.


இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ராணி அவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் திருமிகு.மணிகண்டன் அவர்களையும் திருச்சியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கெளரவித்தோம்.


SLAS அறிக்கை - தர்மபுரியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4 தர்மபுரியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்த மறுநாளே, மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.


அந்த வரிசையில் 4-ஆவது ஆய்வுக் கூட்டத்தை தர்மபுரியில் நடத்தினோம். “தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு எனும் ஒற்றை குறிக்கோளை நோக்கி ஓராண்டு பயணிப்போம். தங்களின் முயற்சிகளும், உற்சாகமும் பெரும் நம்பிக்கை அளிக்கிறது” என உரையாற்றினோம்.


#SLAS அறிக்கையை கையிலெடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ளோம். இப்பயணம் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது!


SLAS அறிக்கை - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 3ஆவது சந்திப்பு ஓசூரில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். #SLAS அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை முன்வைத்து, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.


“அடுத்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கற்றல் அடைவுகளில் முன்னேறியுள்ளது என #SLAS அறிக்கையின் முடிவுகளில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே மேற்கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - நாகையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2 நாகையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து 2ஆவது மாவட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினோம்.


மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட கற்றல் அடைவு #SLAS அறிக்கையை முன்வைத்து இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். 2 கல்வி வட்டாரங்களில் இருந்து மொத்தம் 170 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு, கற்பித்தல் முறைகளில் தாங்கள் அடுத்து மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.


‘நாகை மாவட்டம் கற்றல் கற்பித்தலில் முன்னேறியுள்ளது’ என அடுத்தாண்டு #SLAS அறிக்கை தெரிவிக்க வேண்டும்’ என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.


மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...