கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (29-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 29, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவனக்குறைவினால் அலைச்சல்கள் உண்டாகும். கருத்துக்களை கூறும் பொழுது நபர்களின் தன்மையை அறிந்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.


கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 29, 2022



எந்தவொரு செயல்பாடுகளிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் நீங்கி உறவுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். விவசாயம் சார்ந்த பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 29, 2022



வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் கைகூடும். சிக்கலான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கையை உண்டாக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தேவைகள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.


திருவாதிரை :  நம்பிக்கை உண்டாகும்.


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 29, 2022



இணைய பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்படவும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். பயணத்தின்போது மிதவேகம் அவசியமாகும். நெருக்கமானவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். புதிய வகை உணவினை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் மந்தத்தன்மை ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : காலதாமதமான நாள்.


பூசம் : புரிதல் உண்டாகும்.


ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 29, 2022



வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபம் குறைவாக கிடைக்கும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களுடன் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மறதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : லாபகரமான நாள்.


பூரம் : விரயங்கள் உண்டாகும்.


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 29, 2022



வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தாய்வழி உறவுகள் ஆதரவாக செயல்படுவார்கள். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.


அஸ்தம் : ஆதரவான நாள்.


சித்திரை : உதவி கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 29, 2022



செய்கின்ற செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சாதுரியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.





அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : மாற்றம் ஏற்படும். 


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


விசாகம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 29, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நகைச்சுவையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.


கேட்டை : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 29, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சஞ்சலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : தெளிவு பிறக்கும். 


பூராடம் : முயற்சிகள் ஈடேறும். 


உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 29, 2022



குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஆடம்பரமான செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். பணிகளில் தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சகோதரிகளின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.


திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும். 


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 29, 2022



உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான சூழல் அமையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் சார்ந்த விஷயங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். தனவரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும். 


சதயம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 29, 2022



வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செய்கின்ற பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களின் விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நேர்மையற்ற வழிமுறைகளை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு நல்லது. வாகனம் தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி? (How to verify Service Registers)...

  மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி? (How to verify Service Registers)


உங்களின் பணிப்பதிவேட்டில் (Service Register) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்...



>>> மின்னணு பணிப் பதிவேடு சரிபார்ப்பு படிவம் (E - SR verification Format)...


முதலில் ஒரு அல்லது இரண்டு குயர் கோடு போட்ட பெரிய நோட்டு (Long Size) வாங்கிக் கொள்ள வேண்டும். 

தரமான தாள்களை கொண்ட பைண்டிங் நோட்டு வாங்குவது நல்லது. 


பிறகு மேற்கண்ட PDF file ல் உள்ளவாறு, நோட்டின் முதல் இரண்டு தாள்களில், தலைப்பு எழுதிக் கொள்ள வேண்டும்.


பிறகு பணிப் பதிவேட்டுன் தொடக்கம் முதல் பக்கம் முதல், கடைசியாக பதிவு செய்யப் பட்ட பக்கம் வரையிலான பதிவுகளை, பணிப்பதிவேட்டில் உள்ளபடி, வரிசை மாறாமல், தற்போது வாங்கிய புதிய நோட்டில், உரிய தலைப்புகளுக்கு ஒதுக்கப் பட்ட பக்கங்களில், எழுத வேண்டும்.


அனைத்து தலைப்புகளிலும், பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்கள், நோட்டில் எழுதப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.


நம்மிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு, பணிப்பதிவேட்டில் அனைத்து விவரங்களும் இன்றைய தேதி வரை சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.


விடுப்புகள், ஊதிய உயர்வு, ஒப்படைப்பு விடுப்பு, இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு, முதல் பணி நியமனம், தகுதிகாண் பருவம் நிறைவு செய்தல், பதவி உயர்வுகள், பணியிட மாறுதல், பணி விடுவிப்பு & பணியில் சேர்ந்த விவரம், வாரிசு தாரர் நியமனம், குடும்ப விவரம், ஊதிய உயர்வுகள், ஊக்க ஊதியம், தேர்வு நிலை, சிறப்பு நிலை பதிவுகள், உயர் கல்விக்கான முன் அனுமதி, பின்னேற்பு, கல்வித் தகுதிகள், உண்மைத் தன்மை சான்றுகள், போராட்ட கால பதிவுகள் &


முறை படுத்துதல் பதிவுகள், ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணய விவரம், பணிக்காலம் சரிபார்த்தல் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.


நம் நோட்டில் உரிய தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விவரங்கள் அனைத்தும், மின்னணு பணிப் பதிவேட்டின் நகலில் உள்ளதா என்பதை கவனமாக சரி பார்க்க வேண்டும்.


தகவல்கள் ஏதேனும் பணிப் பதிவேடு அல்லது மின்னணு பணிப் பதிவேட்டில் முரண் பட்டாலோ, விடுபட்டிருந்தாலோ, அவற்றை தனியாக குறித்து, உரிய ஆவணங்களுடன் இவற்றை சரிசெய்ய உரிய எழுத்தர் மற்றும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


முரண்பட்ட அல்லது விடுபட்ட தகவல்கள் நம் பணிப்பதிவேடு மற்றும் மின்னணு பணிப் பதிவேட்டில் சரி செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு சரி பார்த்த பின், அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


2017-18, 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Direct PG) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 74020 / டபிள்யு2 / இ1/ 2022, நாள்: 27-12-2022 & 74021/ டபிள்யு2/ இ2/ 2022, நாள்: 27 & 28-12-2022 (Proceedings of Joint Director of School Education (Higher Secondary Education) to issue General Regularisation order to Physics, Chemistry, Mathematics, Biology, Botany, Zoology Post Graduate Teachers (Direct PG) selected by Teacher Recruitment Board for the year 2017-18, 2018-19 and 2019-20 No: 74020 / W2 / E1/ 2022, Dated: 27-12-2022 & 74021/ W2/ E2/ 2022, Dated: 27 & 28-12-2022)...



>>> 2017-18, 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Direct PG) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 74020 / டபிள்யு2 / இ1/ 2022, நாள்: 27-12-2022 & 74021/ டபிள்யு2/ இ2/ 2022, நாள்: 27 & 28-12-2022 (Proceedings of Joint Director of School Education (Higher Secondary Education) to issue General Regularisation order to Physics, Chemistry, Mathematics, Biology, Botany, Zoology Post Graduate Teachers (Direct PG) selected by Teacher Recruitment Board for the year 2017-18, 2018-19 and 2019-20 No: 74020 / W2 / E1/ 2022, Dated: 27-12-2022 & 74021/ W2/ E2/ 2022, Dated: 27 & 28-12-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


06-01-2023 வரை பணிப்பதிவேடுகளை அனைத்து அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் உரிய அலுவலகங்களில் / பள்ளிகளில் பார்வையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் - 07-01-2023 அன்று சிறப்பு முகாம் - பள்ளிக்கல்வி ஆணையாளர் & தொடக்க்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் (All Govt / Aided Primary / Middle / High / Higher Secondary School teachers and staff may inspect and verify the Service Registers till 06-01-2023 in respective offices / schools - Special Camp on 07-01-2023 - Joint proceedings of Commissioner of School Education & Director of Elementary Education)...

 

>>> 06-01-2023 வரை பணிப்பதிவேடுகளை அனைத்து அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் உரிய அலுவலகங்களில் / பள்ளிகளில் பார்வையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் - 07-01-2023 அன்று சிறப்பு முகாம் - பள்ளிக்கல்வி  ஆணையாளர் & தொடக்க்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் (All Govt / Aided Primary / Middle / High / Higher Secondary School teachers and staff may inspect and verify the Service Registers till 06-01-2023 in respective offices / schools - Special Camp on 07-01-2023 - Joint proceedings of Commissioner of School Education & Director of Elementary Education)...



>>> ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேட்டில் (S.R.) சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் நாளது தேதி வரை மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை 06.01.2023 தேதிக்குள் உறுதி செய்தல் வேண்டும்..


 CoSE & DEE ஆகியோரது இணை செயல்முறைகள்...




இன்றைய (28-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (28-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 28, 2022



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும்.


பரணி : உதவி கிடைக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 28, 2022



அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டாகும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : தடைகள் குறையும். 


ரோகிணி : விரயங்கள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 28, 2022



தந்தையின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தடைபட்ட சில பணிகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அனுகூலமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். 


புனர்பூசம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 28, 2022



வியாபார முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். மனதில் இனம்புரியாத சில கவலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். அதிகார பதவியில் இருப்பவர்களின் பேச்சுக்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். பயணங்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


பூசம் : அலைச்சல்கள் உண்டாகும். 


ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 28, 2022



எந்தவொரு செயல்பாடுகளிலும் தைரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான உதவி கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




மகம் : தைரியம் மேம்படும்.


பூரம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரம் : திட்டமிட்டு செயல்படவும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 28, 2022



எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கணித துறையில் பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இழுபறியான தனவரவு வசூலாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திரம் : மாற்றம் உண்டாகும். 


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 28, 2022



வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்து கொள்ளவும். வெளிவட்டாரங்களில் நட்பு மேம்படும். நுட்பமான சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். வெளியூர் நபர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் சுபகாரியம் கைகூடும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : காலதாமதம் உண்டாகும். 


சுவாதி : நட்பு மேம்படும். 


விசாகம் : மாற்றமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 28, 2022



குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். போட்டி, பந்தயங்கள் சாதகமாக முடியும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விவசாயம் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 


அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கேட்டை : தடைகள் குறையும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 28, 2022



செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் தோன்றி மறையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் மேன்மையான சூழல் அமையும். சகோதரர்களின் வழியில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மறதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்




மூலம் : குழப்பம் மறையும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


உத்திராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 28, 2022



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி கற்றலில் ஆர்வம் அதிகரிக்கும். மனையை விற்பது மற்றும் வாங்குவதன் மூலம் லாபம் அடைவீர்கள். வாக்கு சாதுரியம் வெளிப்படும். உறவினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : ஒற்றுமை மேம்படும். 


திருவோணம் : லாபகரமான நாள்.


அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 28, 2022



உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சிறு தூர பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நினைத்தது ஒன்றாகவும் செயல்கள் வேறு விதமாகவும் அமையும். எதிர்பார்த்த சில முடிவுகளில் மாற்றம் உண்டாகும். சஞ்சலங்களை குறைத்து கொள்வதன் மூலம் மனநிம்மதி ஏற்படும். அசதிகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




அவிட்டம் : அனுசரித்து செல்லவும். 


சதயம் : விவேகத்துடன் செயல்படவும்.


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------



மீனம்

டிசம்பர் 28, 2022



தேவையற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. தனவரவில் காலதாமதம் உண்டாகும். தொழில் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். வெளியில் உணவு உண்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நண்பர்களிடம் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தனவரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.


உத்திரட்டாதி : பயணங்கள் அதிகரிக்கும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக கூட்டுறவு துறையால் வழங்கப்படும் டோக்கனின் மாதிரிகள்(Token Samples issued by Co-operative Department for receiving Pongal Gift Package)...

 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக கூட்டுறவு துறையால் வழங்கப்படும் டோக்கனின் மாதிரிகள்(Token Samples issued by Co-operative Department for receiving Pongal Gift Package)...




சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (Teachers continue hunger strike demanding equal pay for equal work)...

 சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (Teachers continue hunger strike demanding equal pay for equal work)...



இரவிலும் தொடரும் போராட்டம்...







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Authorization for the month of December 2024 salary for 94 vocational teacher posts

  94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு டிசம்பர்‌ 2024 மாதத்திற்கான பள்ளிக்‌ கல்வித்...