கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRB மூலம் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் - பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...

 

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் - பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 26, நாள்: 24-01-2024 வெளியீடு - Direct Appointment of Graduate Teacher by TRB - Issue of Ordinance Fixing Deadline for Conducting Surplus and General Transfer Counselling - G.O. (Ms) No: 26, Dated: 24-01-2024...



>>> அரசாணை (நிலை) எண்: 26, நாள்: 24-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை ஆண்டுதோறும் பணி நிரவல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தேதிகள் அறிவித்தல், தேர்வு நடத்துவதற்கான உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை...


இறந்த அரசு ஊழியரின் குழந்தைகள் கல்வி தொடர உதவி - உரிய அரசாணைகள்...

 


அன்பு நண்பர்களே...          

இறந்த அரசு ஊழியரின் குழந்தைகள் கல்வி தொடர உதவி - உரிய அரசாணைகள்...

1)கல்லூரியில் படிக்கும் இறந்தவரின் குழந்தைகளுக்கு டிகிரி முடிக்கும் வரை கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குண்டு. தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால்  போதும்... (G.O.Ms.No.1699 Education Dt.14-9-1978)                         

2) ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தாலும் கட்டணம் (Tuition Fees) செலுத்தத் தேவையில்லை. G.O. Ms. No. 864, Education Dt.21-05-1980.                

3) இறந்தவரின் அனைத்து குழந்தைகளுக்கும் இச்சலுகை உண்டு.             

4) விடுதியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு விடுதிக் கட்டணம் திரும்பக் கிடைக்கும்.(see also Govt.Lr. 109168/RA2/ 82-2.Education Dt.09-04-1983)       

5) சொந்த ஊரிலிருந்து கல்லூரி 2 கீ.மீக்கு அதிகமான தூரத்தில் இருந்தால் விடுதியில் தங்கியும் படித்து,விடுதிக் கட்டணமும் ஈடு செய்யலாம். கல்லூரியும் வீடும் நகர எல்லைக்குள் இருந்தால் விடுதி கட்டணம் கிடைக்காது. Govt. Lr.No. 109168/RA2/87-2.dt 09-04-1983.                  

6) விதிகள் தெரியாமையால் கல்லூரி / விடுதி கட்டணம் செலுத்தி விட்டவர்கள் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப்பெறலாம்.ஒராண்டிற்குள் இதற்கு மனு செய்ய வேண்டும். Govt.Lr. No. 21710/79-6. Education dt 05-10-79, Govt.Lr.No.109168/RA.2/ 82-2.Education dt.09-04-83 and Govt.Lr.1275, Education dt: 07-08-87.             

7) மாலை நேரக் கல்லூரியில் படிப்பவருக்கும் தொகை கிடைக்கும். ஆனால் படிக்கும் பொழுது எந்த வேலையிலும் இருக்கக்கூடாது. G.O.Ms.No.2098,Education dt.22-09-76.                 

8) அரசு அங்கீகாரம் செய்துள்ள பள்ளிகளில் பயில்பவர்கள் அனைவருக்கும் இச்சலுகை உண்டு. Fee Levying School -ல் படித்தால் இச்சலுகை கிடைக்காது. பிற மாநிலங்களில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படித்தாலும் இந்த உதவி கிடைக்கும்.              

9) Professional Course படிப்பவர்களுக்கும் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் இரண்டும் கிடைக்கும்.              

10) தேர்வில் தோல்வி அடைந்தால் இச்சலுகை நிறுத்தப்படும். தேர்ச்சி பெற்ற பின்னரே இச்சலுகை தொடரும்.            

11) இச்சலுகையோ அல்லது ஏதேனும் அரசிடம் கிடைக்கக் கூடிய சலுகையோ இதில் மாணவர் விரும்பியது பெறலாம். Govt.Memo.No.50491/SI/78-3, Education dtm07-12-78, Govt. Lr.No.110253/k3/86-3, Education dt.19-06-87, G.O.No.888 Finance dt.12-05-82, Govt.Lr.No.110253/k3/86-3, Education dt.19-06-87.                      

12)  இதற்கென அமைந்த படிவத்தில் மனு செய்யவேண்டும். Govt. Ms.1699, Education dt.14-09-78, Govt. Lrm No.64187/RA2/83-17, Education, dt: 28-10-86.           

13) ஒரு மாணவருக்கு ஒரு பட்டப்படிப்பிற்கு மட்டும் இச்சலுகை கிடைக்கும். இரண்டு பட்டப்  படிப்பிற்கு கிடைக்காது. Govt.lr.(Ms.) No.1275 dt.07-08-87.              

14) மனுவுடன் பட்டியல்கள் இணைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள்  கல்விக் கட்டணத்திற்கான பட்டியல்களை தொலைத்து விட்டாலும் டூப்ளிகேட் பட்டியல்கள் இணைத்தனுப்பி தொகை பெறலாம். Govr. Lr.(Ms) No. 1275 dt.07-08-87.                                                              

கல்விக் கட்டணம் செலுத்துவது குறித்து...

1) கல்வி கற்கும் குழந்தைகள் இந்த உதவி பெறுவதற்கு  ஏதுவாக ஓய்வூதியம் ஒப்பளிக்கும் அதிகாரி Eligibility -cum Entitlement Card ஒன்று வழங்குவார். இந்த அடையாள அட்டையை மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தில்   சமர்ப்பித்து கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறலாம்.                       

2) கட்டணம் செலுத்திய தொகையை மீளப் பெறுவதற்கு  குறிப்பிட்டுள்ள படிவத்தில் துறைத் தலைவருக்கு மனு செய்ய வேண்டும். அவர் தொகை ஒப்பளிப்பார்.             

3) ஒரு கல்வியாண்டின் இடையில் ஒரு மாணவன் வேறு பள்ளி/ கல்லூரிக்கு மாறினால் புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.           


சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம்...


சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன?


முதல் வித்தியாசம்...


பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் .


அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,


இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று...


கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்.


இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..


இரண்டாவது   வித்தியாசம்...


சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. 


அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். 


குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, 


அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. 


இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..


குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  .


அரசியல் சட்டத்தின் 

தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..


மூன்றாம் வித்தியாசம்...


சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது


குடியரசு தினத்தன்று டில்லி ராஜபாதையில் கொடி பறக்கவிடப்படுகிறது....


12105 பகுதி நேர பயிற்றுநர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு...


 12105 பகுதி நேர பயிற்றுநர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 24-01-2024 வெளியீடு...


 Hike in consolidated pay of 12105 part-time instructors from Rs.10,000 to Rs.12,500 Ordinance G.O.(Ms) No: 23, Dated: 24-01-2024 Issued...


பகுதி நேர பயிற்றுனர்களின் ஊதியம் 10000 இல் இருந்து 12500 ஆக அதிகரித்து ஆணை (G.O.Ms.No.23, Dated: 24-01-2024) வெளியிடப்பட்டுள்ளது...



>>> அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 24-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு


பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு...


10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழ்நாடு அரசு


நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு...


மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்...



 திருவள்ளூர் மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை மாற்றி வரும் நடப்பாண்டில், அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் வாகைசூட வேண்டுமென மாவட்ட கலெக்டர் கல்வித்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, அம்பத்துார், ஆவடி, பொன்னேரி என ஐந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 944 துவக்கப்பள்ளிகள், 265 நடுநிலைப்பள்ளிகள், 145 உயர்நிலைப்பள்ளிகள், 118 மேல்நிலைப்பள்ளிகள் என 1,472 அரசு பள்ளிகள் உள்ளன. சில தினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து அரசு உயர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு 2022-23ம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் 2023-24ம் ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.



கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:


கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை கொண்டு செயலாற்ற வேண்டும். எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் கல்வி நிலை உயர வேண்டும். நடப்பு கல்வியாண்டில் குறைந்தபட்சம் நம் மாவட்டத்தில் 25 மாணவர்கள் மருத்துவர்களாக அரசு மருத்துவக்கல்லுாரிகளில் சேரக்கூடிய நிலையில் அவர்களை ஆசிரியர்களாகிய நீங்கள் தயார்ப்படுத்த வேண்டும். அதேபோல் குறைந்தபட்சம் 250 மாணவர்களை முதல் 10 இடத்தில் முதன்மை நிலையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில் சேரக்கூடிய அளவிற்கு வெற்றி பெற வைக்க வேண்டும்.மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைத்து தலைமையாசிரியர்களும் கடினமாக உழைக்க வேண்டும். அதனடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதற்காக 10 பள்ளிகளுக்கு ஒரு உயர் அதிகாரி என 25 பள்ளிக்கல்வித்துறை அல்லாத உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி செயல்படுவார்கள். குறுகிய காலம் உள்ளதால் இடைநிற்றல் மாணவர்களை தேர்வெழுத வைத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற வகையில் மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். போதைப்பழக்கம் உள்ள மாணவர்கள் குறித்த விவரம் தெரிவித்தால் அம்மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்களை கொண்டு உடனடியாக ஆலோசனைகள் வழங்கப்படும். 100 சதவீதம் தேர்ச்சி என்ற நம் இலக்கை அடையும் வகையில் இந்த திட்டத்திற்கு வாகை சூடுவோம் என்ற இலச்சினையை அறிவித்துள்ளேன். இவ்வாறு கலெக்டர் பேசினார்.



தலைமையாசிரியர்கள் புலம்பல்

அரசு பள்ளிகளில் அலுவலக பணியாளர், உதவியாளர், உடற்பயிற்சி ஆசிரியர், காவலாளி, துப்புரவு பணியாளர்கள் போன்ற பணியாளர்களும் காலியாக உள்ளன. சில பள்ளிகளில் ஆசிரியர்களே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில பள்ளிகளில் துப்புரவு பணிகளை மாணவ, மாணவியரும் செய்து வருவது மாணவர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியாற்ற வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி மாணவர்களின் 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.


தொடர்வண்டி ஓட்டுநராகிய "லோகோ பைலட்" ஆக வேண்டுமா?



தொடர்வண்டி ஓட்டுநராகிய "லோகோ பைலட்" ஆக வேண்டுமா?


அதற்கு நீங்கள் என்ன செய்யனும்?


அதற்கு நீங்கள் தற்போது இந்தியன் இரயில்வே வெளியிட்டுள்ள உதவி ஓட்டுநர் (Assistant Loco Pilot) ஆள்சேர்ப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பபது?


அதற்கான இணையதள முகவரியினுள் சென்று இணையவழியில் (online mode) விண்ணப்பிக்க வேண்டும்.


தெற்கு ரயில்வேக்கான இணையதள முகவரிகள் என்ன?


www.rrbchennai.gov.in

www.rrbthiruvananthapuram.gov.in


இதுக்கு விண்ணப்பிக்க என்ன படிச்சிருக்கனும்?


இதுக்கு இரண்டு வருட ஐ.டி.ஐ படிப்பு படிச்சிருந்தா போதும்.


அல்லது


எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் மூன்று வருட டிப்ளமோ படிப்பு

அல்லது

அதே துறைகளில் பொறியியல் (BE) படிப்பு.


இதுக்கு விண்ணப்பிக்க எத்தனை வயசு இருக்கனும்?


பொது (UR) : 18 - 30

இ.பி.வ (OBC) : 18 - 33

ப.வ/ப.ப.(SC/ST) : 18 - 35


இதுக்கு ஏதாவது உடற்தகுதி இருக்கனுமா?


ஆமாம். கண்ணாடி இல்லாமல் கண்பார்வை 6/6 விகிதத்தில் இருக்கணும். விண்ணப்பிக்கும் போதே கண் மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று சேர்த்து அனுப்பனும்.


மேலும், இரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி எல்லாம் சரியாக இருக்கனும். மொத்தத்தில் A-1 fit ஆக இருக்கனும்.


விண்ணப்பக் கட்டணம் ஏதாவது உண்டா?


ஆமாம்.

எஸ்.சி/எஸ்.டி, பெண்கள், மூன்றாம் பாலினத்தோர் ஆகியோருக்கு ரூ. 250ம், மற்றோருக்கு ரூ 500ம் விண்ணப்பிக்கும் போதே ஆன்லலைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தந்துடுவாங்கனு சொல்றாங்களே.. அப்படியா?


ஆமாம். நீங்கள் தேர்வு எழுதியதும் ஆன்லைன் மூலமாகவே திருப்பி வழங்கப்படும். தேர்வு எழுதலைனா திரும்பக் கிடைக்காது.


விண்ணப்பிக்கும் போது என்னென்ன சேர்த்து வச்சு விண்ணப்பிக்கனும்?


1. கல்வித்தகுதிச் சான்றிதழ்கள்,

2. பிறந்தநாள் சான்றிதழ்

3. சாதிச் சான்றிதழ்

4. கண்பார்வைக்கான மருத்துவச் சான்றிதழ்

5. மார்பளவு புகைப்படம்

6. மாதிரிக் கையெழுத்து (ஆங்கிலத்தில்)


தேர்வு எத்தனை விதமா இருக்கும்? 

எப்படி இருக்கும்?


தேர்வு ஐந்து விதமாக இருக்கும்.


1. கணினி வழித் தேர்வு 1 (CBT 1)


2. கணினி வழித் தேர்வு 2 (CBT 2)


3. கணினி வழி உளவியல் தேர்வு  (CBAT )


4. சான்றிதழ் சரிபார்ப்பு


5. மருத்துவ பரிசோதனை 


இந்த ஐந்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று வருகிறவர்களுக்கே பணிநியமனம் வழங்கப்படும்.


தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எப்படி?


CBT -1 (75 marks)

கணிதம், மன உளவியல், பொது அறிவு


CBT - 2


CBT - 1ல் தகுதியானவர்களை 1:15 என்கிற விகிதத்தில் CBT -2 தேர்வுக்கு எடுக்குறாங்க.


CBT -2 தேர்வு PART - A; PART - B என இருவிதமா நடத்துறாங்க.


Part - A ,யில் கணிதம், உளவியல், காரணமறிதல், அடிப்படை அறிவியல், பொறியியல் பகுதுகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.


Part -B யில் விண்ணப்பதாரரின்  துறை தொடர்பான பாடங்களில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும்.


தவறாக விடையளித்தால் ஏதேனும் எதிர்மறை மதிப்பெண்கள் (negative marks) உண்டா?


ஆமாம்.

CBT - 1 & CBT - 2 ல் தவறான விடைகளுக்கு 1/3 என்ற விகிதத்தில் எதிர்மறை மதிப்பெண் (negative mark) களும் உண்டு.


எனவே விடை தெரிந்த கேள்விகளை மட்டும் எழுதுதல் நலம்.


CBT - 2 முடிஞ்சதுக்கு அப்புறம்??


அதுல தேர்ச்சி பெற்றவர்களை மூன்றாவது கட்ட தேர்வாகிய APTITUDE TEST எனும் உளவியல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


மற்ற தேர்வுகளை விட இது வித்தியாசமானது. படங்களாகவும் எண்களாகவும் கொடுத்து கேள்வி கேட்பாங்க. அதுல brick test, memory test, yes or no, numerical test அப்படி இப்படினு உண்டு.  ஒவ்வொரு testலயும் குறைஞ்சது 42 மார்க்காவது எடுக்கனும். அதற்கான மாதிரி வினாக்களை rdso.indianrailways.gov.com எனும் இணைய முகவரியில் சென்று பார்க்கலாம்.


தேர்வுப்பட்டியல் எப்படிப் போடுவாங்க??


CBT-2 மற்றும் APTITUDE TEST ல தேர்ச்சி அடைஞ்சவங்களை (70% & 30%) சராசரி மதிப்பெண்கள் போட்டு மதிப்பெண் வாரியாக தேர்வுப்பட்டியல் வெளியாகும்.


அப்புறம்??


அப்புறமா இவுங்க எல்லாம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்பட்டு பெயர் பட்டியல்  இரயில்வேயின் அந்தந்த மண்டல தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இப்போ நம்ம தெற்கு ரயில்வேனா சென்னையில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.


அப்போ மெடிக்கல் டெஸ்ட் எப்போ??


இரயில்வே மண்டல அலுவலகத்தில் இருந்து அந்த மண்டலங்களில் உள்ள கோட்டங்களுக்கு கோட்ட வாரியான காலி இடங்களைப் பொறுத்து கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன.

கோப்புகள் கோட்டங்களுக்குச் சென்றவுடன் அந்தந்த கோட்டங்களில் இருந்து மருத்துவத் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். அந்தந்த கோட்டங்களில் உள்ள இரயில்வே தலைமை மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.


மருத்துவப் பரிசோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு Pro. Assistant Loco Pilot பணி நியமனத்திற்கான பயிற்சிக்கு அனுப்பப்படுவீர்.


இரயில் எஞ்சின் ( Loco ) சம்மந்தமாக ஆவடியிலும், சிக்னல், தண்டவாளம், விதிமுறைகள் சம்மந்தமாக திருச்சியிலும் மொத்தமாக ரெண்டு மூணு மாசம் பயிற்சி பெற வேண்டி இருக்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வருபவருக்கு Assistant Loco Pilot பணி நியமன ஆணை வழங்கப்படும்.


அன்றிலிருந்து ஹா...யாக இரயில் இஞ்சினில் வலம் வரலாம்.


இதுக்கு எப்போ வரை விண்ணப்பிக்கலாம்?


இப்போ இருந்து 19.02.2024 வரைக்கும் விண்ணப்பிக்கலாம்.



>>> Click Here to Download Notification...



ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை (AEBAS) செயல்படுத்துவது தொடர்பான விளக்கங்கள்/ வழிமுறைகள் - தேசிய மருத்துவ ஆணையம்...



 NMC 25/01/2024 - Clarifications/ directions regarding implementation of Adhaar Enabled Biometric Attendance System (AEBAS) in all government and private medical colleges...



அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை (AEBAS - Biometric Attendance) செயல்படுத்துவது தொடர்பான விளக்கங்கள்/ வழிமுறைகள் - தேசிய மருத்துவ ஆணையம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருபட்பால் அதிகாரம்: புல்ல...