கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வயதுக்கேற்ற ஓய்வூதிய உயர்வு குறித்த தகவல்கள்...


 வயதுக்கேற்ற ஓய்வூதிய உயர்வு குறித்த தகவல்கள்...


♨️ 80 வயது நிறைவடைந்த 

பின்புதான்;

அதாவது 80 வயது முடிந்த பின்புதான்

20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்.


💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 

20% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு.

பெறுவார்.


💢 90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார். 


💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.

(G.O.Ms.No.313/Finance[Pay cell] Department/dated 25.10.2017.)


✅ இந்த விவரங்களை  ஒவ்வொரு ஓய்வூதியரும் தெரிந்து வைத்துக் கொள்வதோடு, மற்ற ஓய்வூதிய நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதில் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.


💢 இதனை  சேமித்து வைத்து, தேவைப்படும் பொழுது பிறருக்கு பகிரவும்  பயன்படுத்திக்  வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம். 



பணி நிறைவு பெறவுள்ள, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்...

 இந்த மாதம் 30.06.2024 அன்று பணி நிறைவு பெறவுள்ள, பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.அறிவொளி அவர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்...


 

8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 2 இணை இயக்குநர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 21-06-2024 வெளியீடு...

 

 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 2 இணை இயக்குநர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 21-06-2024 வெளியீடு...





19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் ஜனவரி - 2026க்குள் நிரப்பப்படும் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு...



19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் ஜனவரி  - 2026க்குள் நிரப்பப்படும் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு...


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110-ன் கீழ் அளித்த அறிக்கை...




>>> முதலமைச்சர் அவர்களின் அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் - முதல்வர்


ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,591 பேருக்கு வேலைவாய்ப்பு.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,000, மருத்துவத்துறையில் 3,041 பணியிடங்கள் நிரப்பப்படும்.


காலியாக இருக்கும் மற்ற பணியிடங்களையும் சேர்த்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்பணி - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி பணி விதிகளின்‌ கீழ்‌ - வகுப்பு 14 ஐச்‌ சேர்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ 2015-16 முதல்‌ 2022-23ம்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை முறைப்படுத்தி - அரளவில்‌ ஆணைகள்‌ பெறப்பட்டமை - சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்தல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.40604/அ1/இ1/2018, நாள்‌ 25.06.2024 & அரசாணை (நிலை) எண்‌. 49, பள்ளிக்‌ கல்வித்(பக1(1)) பள்ளிக்‌ கல்வி துறை. நாள்‌: 21.02.2024...

 


மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ 2015-16 முதல்‌ 2022-23ம்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை பணிவரன்முறைப்படுத்துதல் - பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ & அரசாணை...


DEO regularisation order...


DEO மற்றும் அதனை ஒத்த பணியிடங்களுக்கான regularisation Order...


 2015-2016 முதல் 2022-2023ஆம் ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு...


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்பணி - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி பணி விதிகளின்‌ கீழ்‌ - வகுப்பு 14 ஐச்‌ சேர்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ 2015-16 முதல்‌ 2022-23ம்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை முறைப்படுத்தி - அரளவில்‌ ஆணைகள்‌ பெறப்பட்டமை - சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்தல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.40604/அ1/இ1/2018, நாள்‌ 25.06.2024 & அரசாணை (நிலை) எண்‌. 49, பள்ளிக்‌ கல்வித்(பக1(1)) பள்ளிக்‌ கல்வி துறை. நாள்‌: 21.02.2024...

 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உயர் கல்வித்துறை - 15 புதிய அறிவிப்புகள்...



உயர் கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 20, புதிய அறிவிப்புகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



🔷 அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.


🔷 கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் 21 கோடி மடிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு என தனி ஓய்வறைக் கட்டிடம் 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்த எந்திரனியல் ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


🔷 திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


🔷 காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


🔷 GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.


🔷 அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்


🔷 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் ₹7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்


🔷 தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மீள்ருவாக்கம் செய்யப்படும்


🔷 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.


-பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி

தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி பெங்களூரு: Ok Credit என்ற நிற...