கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தேசிய விரிவுரையாளர் தகுதி தேர்வு : சென்னையில் 12,500 பேர் பங்கேற்பு

சென்னை உட்பட, நாடு முழுவதும் நடந்த, தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வை, 8 லட்சம் பேர் எழுதினர்.பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பில், தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), சென்னை உட்பட, நாடு முழுவதும் நேற்று நடந்தது. இந்த தேர்வில், விரிவுரையாளர் தகுதி பெற, புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.தேர்வுக்காக, மொத்தம், 77 மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், 7.8 லட்சம் பேர் பங்கேற்று, தேர்வெழுதினர். சென்னையில், எத்திராஜ் கல்லூரி உட்பட, 10 இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், 12,500 பேர் தேர்வெழுதினர். மூன்று தாள்களைக் கொண்ட தேர்வு, காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:00 மணி வரை நடந்தது.புதிய விதிமுறைஇந்த தேர்வில் விரிவுரையாளராக தகுதி பெற, புதிய விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானியக்குழு அமல்படுத்தி உள்ளது. அதன்படி, தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு, பாட வாரியாக தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து, முதல், 15 சதவீதம் பேர் மட்டுமே, விரிவுரையாளர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.இளம் ஆராய்ச்சியாளருக்கான உதவித் தொகை வழங்க, இவர்களிலிருந்து தனியாக தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.கடந்த தேர்வில், தேர்ச்சி விதிமுறைகளை மாற்றியதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இந்நிலையில், நேற்று புதிய விதிமுறைகளின்படி தேர்வு நடந்துள்ளது.தேர்வுக்கான முடிவுகள், ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என, பல்கலைக்கழக மானியக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>பணி நியமனம் குளறுபடியால் தேர்வான முதுகலை ஆசிரியர்கள் தவிப்பு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587 பணியிடங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றனர். இதில் 2308 பேருக்கு தேர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. இந் நிலையில் இந்த பட்டியலில் தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினரால் சரி பார்க்கப்பட்டது. இதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பணி நியமன ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கவுள்ளது. கோர்ட் வழக்கில் தமிழ் வழியில் பட்டம் பயின்றவர்கள், தாவரவியல் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமே பிரச்னை உள்ளது. மற்ற பாடப்பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட வேண்டும்.
பல பாடப்பிரிவுகளில் முதல் பட்டியலில் வெளியான கட்-ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் பட்டியலில் பலருக்கு மதிப்பெண் காட்டப்படாமல் தேர்வில் ஆப்சென்ட் காட்டப்பட்டுள்ளது. மதிபெண் பூஜ்யம் காட்டுகிறது.
கடினமாக உழைத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியமாக உள்ளது. பலரது வாழ்க்கை பிரச்னையை கவனத்துடன் செயல்படாமல், கண்ணா மூச்சி ஆட்டம் போல ஆடி வருவது தேர்வான ஆசிரியர்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத தேர்வான ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
தமிழாசிரியர்கள் காலிப்பணியிடம் 601. இதில் முதல் பட்டியலில் நான் தேர்வு பெற்றுள்ளேன். இரண்டாம் பட்டியலில் 538 பேர் மட்டுமே தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது.
மீதமுள்ள 63 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகிய போது தேர்வு பட்டியல் ஆன் லைனில் வெளியிடப்படும் அதுவரை காத்திருங்கள், என்கின்றனர். நிறுத்தம் செய்திருப்பதற்கான காரணங்களை தெரிவிக்க மறுக்கின்றனர். இது போன்ற குழப்பம் இல்லாமல் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும், என்றார்.

>>>கம்ப்யூட்டர் படிச்சவங்க என்னதான் வேலை பார்ப்பீங்க?

‎"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்  வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" 
– நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல  இருந்தே செய்யணும்.  இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய  தயாரா இருக்கான்."

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,  இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.  எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும் தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாமதான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"

>>>இன்றைய கூகுள் டூடுல்...

டெல்லி மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 
இன்றைய கூகுள் டூடுல் உள்ளது...

>>>டிசம்பர் 31 [December 31]....

நிகழ்வுகள்

  • 1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
  • 1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
  • 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
  • 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
  • 1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
  • 1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
  • 1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
  • 1881 - இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
  • 1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
  • 1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
  • 1946 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
  • 1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
  • 1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
  • 1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
  • 1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
  • 1986 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் உணவுசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தினால் 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.
  • 1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.
  • 1994 - பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
  • 1999 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
  • 1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
  • 1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
  • 2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
  • 2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.

பிறப்புகள்

  • 1880 - ஜோர்ஜ் மார்ஷல், நோபல் விருது பெற்ற அமெரிக்கர் (இ. 1959)
  • 1937 - அவ்ராம் ஹேர்ஷ்கோ, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்

இறப்புகள்

  • 1905 – அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)

>>>மகனும் தந்தையும்...

மகனுக்குத் தந்தைமேல் கோபம், அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை...

எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்...

‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.

‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ என்றபடி மீண்டும் கத்தினான்.

தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார்...

பிறகு மெதுவாய்ச் சிரித்தார். ‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க?’’.

தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்...

‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான்.

நானும் சொன்னேன்..ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக்கொண்டே இருந்தான்...

நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’

இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.

‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை...

மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது...!

>>>இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

 
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.
ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.
அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:

தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது.

சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
தூய இரத்தம் – 35 நாட்கள்
இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்
பிளாஸ்மா – 1 வருடம்
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றனர். தமிழ் நாட்டில் நிறைய தன்னார்வ அமைப்புகள் உள்ளன அவற்றில் சத்யா சாய் என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து தமிழ் நாட்டில் இரத்த தானத்தில் முதலிடம் வகித்தது ,ஆனால் தற்போது தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்(TNTJ ) என்ற முஸ்லிம் அமைப்பு கடந்த ஏழு வருடங்காளாக முதலிடம் வகிக்கிறது , இந்த அமைப்பின் சாராம்சம் என்னவென்றால் நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியிலும் இருந்தாலும் சரி , இவர்களுடைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி எந்த சாதி மதம் இனம் பாராமல் எந்த பொருள் செலவையும் எதிர் பாராமல் ரத்த தானம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

>>>ரம்புட்டான் பழம்

 
ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது. எலகல் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.

ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும்தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்.

>>>நாம் பெருமைப்படவேண்டிய விசயமா? இல்லை வெட்கப்படவேண்டிய விசயமா?

 
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.  அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது .

>>>10ம் வகுப்பு மாணவர்கள் விவரம்: இணையதளத்தில் பதிய காலக்கெடு நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

>>>டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

>>>ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த நாள் இன்று - டிச 30

 
'இறந்து போதல் என்றால் என்ன? அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று,

எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்.

இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று .

இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது,

மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது.

இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.

முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.

மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான்.

அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது.

அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள்.

வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது.

உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.

வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.

நன்றி....’பாலகுமாரனின் இறந்து போதல் என்றால் என்ன?’

>>>தையலை உயர்வு செய்! - சுகி.சிவம்

"பாபு ஏன் உம்முன்னு இருக்கே?" என்றார் தாத்தா.

"தாத்தா, பாய்ஸ்தானே ஒசத்தி. கேர்ள்ஸ் மட்டம்தானே! பாட்டியை விட நீங்கதானே ஒசத்தி?" என்றான். "பாபு, என்னைவிட பாட்டிதான் ஒசத்தி. அதுமட்டுமில்லை... பள்ளிக்கூடத்துல படிக்குறப்ப உன்னோட பாட்டி என்னைவிட அதிகமா மார்க் வாங்குவாங்க. ரொம்ப நல்லா பாடுவாங்க. ஆமா, உனக்கு ஏன் இப்படியரு சந்தேகம்?" என்றார் தாத்தா.

"நான்தான் எங்க கிளாஸ் லீடரா வந்துருக்கணும். ஆனா, கீதாவை டீச்சர் லீடராக்கிட்டாங்க. கேர்ள்ஸைவிட பாய்ஸ்தானே உசத்தி தாத்தா" என்று சோகமாக சொன்னான்.

சிரித்துக் கொண்டே பேசினார் தாத்தா. "வீர சிவாஜியை அவ்வளவு பெரிய ராஜாவா ஆக்கினவங்க யாரு தெரியுமா பாபு? அவங்க அம்மா ஜீஜாபாய்.

ஒருநாள் களைத்துப் போய் வந்த சிவாஜியை, சதுரங்கம் விளையாட கூப்பிட்டாங்க ஜீஜாபாய்.

"களைப்பா இருக்குதும்மா. நான் வரலே" என்றாராம் சிவாஜி.

"ஆட்சியில் இருப்பவனுக்கு ஏதுடா களைப்பு?" என அவரை சீண்டிவிட்டு விளையாட வச்சாங்க. இந்த விளையாட்டில், ஜெயிச்சவங்க கேக்கறதை தோத்தவங்க தரணும் அப்படீங்கிறதுதான் ஒப்பந்தம்! அவங்க அம்மா ஜெயிச்சுட்டாங்க. "உனக்கு என்னம்மா வேணும்? எத்தனை சாதுக்களுக்கு சாப்பாடு போடணும். எந்த கோவிலுக்கு என்ன செய்யணும்?"னு கேட்டார் சிவாஜி. அவரது கையை புடிச்சு இழுத்துக்கிட்டுப் போய் கோட்டையின் மேல்தளத்தில் இருந்து வெகு தொலைவில் தெரிந்த 'சிம்மகாட்' கோட்டையை காட்டினாங்க. அதில் பறந்து கொண்டிருந்த சுல்தானின் கொடியை காட்டி "நீ என்மகன்கிறது நிஜம்னா, நாளைக்கு சூரியன் மறையறதுக்குள்ளே அந்தக் கொடி இறங்கணும். உன் கொடி அதுல பறக்கணும்"னு உற்சாகமா சொன்னாங்க. திகைத்துப் போன சிவாஜி,"அம்மா அவன்தான் மிகப்பெரிய வீரனாச்சே..." என்றார்.

"அவனை ஜெயிச்சாதான் நீ மாவீரன்! என் பிள்ளை" என்றார் ஜீஜாபாய். இரவோடு இரவாக உடும்புகளின் வாலில் கயிற்றைக் கட்டி கோட்டை சுவர் மீது வீரர்களை ஏற வைத்து காலையில் போரை தொடங்கி மாலையில் ஜெயித்தார் சிவாஜி. அம்மாவின் ஆசைப்படியே அவரது கொடியை 'சிம்மகாட்' கோட்டையில் பறக்கவிட்டார். வெறும் சிவாஜியை வீர சிவாஜி ஆக்கியது ஒரு பெண். மகாகவி பாரதிக்கு ஞானம் ஊட்டிய நிவேதிதா தேவி ஒரு பெண். அதனால்தான் பாரதி எழுதிய புதிய ஆத்திச்சூடியில் 'தையலை உயர்வு செய்' என்று முழங்கினார்" என வரலாற்று நிகழ்வுகளை சொல்லி முடித்தார் தாத்தா.

"கரெக்ட் தாத்தா. கீதா எப்பவுமே பர்ஸ்ட் ரேங்க் எடுக்குறா. அதனாலதான் அவளை டீச்சர் லீடர் ஆக்கியிருப்பாங்க" என்று சிரித்தபடியே ஓடினான் பாபு.

>>>டிசம்பர் 30 [December 30]....

நிகழ்வுகள்

  • 1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
  • 1862 - வட கரொலைனாவில் ஐக்கிய அமெரிக்காவின் மொனிட்டர் என்ற கப்பல் மூழ்கியது.
  • 1870 - ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
  • 1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி ஜோசே ரிசால் மணிலாவில் ஸ்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
  • 1903 - சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் 600 பேர் இறந்தனர்.
  • 1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
  • 1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
  • 1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
  • 1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
  • 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
  • 1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
  • 1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
  • 1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.
  • 1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
  • 1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
  • 1996 - அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1997 - அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2000 - பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
  • 2004 - ஆர்ஜெண்டீனாவின் புவனஸ் அயரெஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
  • 2006 - நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.
  • 2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

பிறப்புகள்

  • 1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)
  • 1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)
  • 1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்
  • 1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)
  • 1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)
  • 1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)
  • 1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)
  • 1968 - ட்றிகுவே லீ, நோர்வேயின் அரசியல்வாதி (பி. 1896)
  • 1988 - இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
  • 2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937

சிறப்பு நாள்

  • பிலிப்பீன்ஸ் - ரிசால் நாள் (1896)

>>>கடவுள் பற்றி பெருந்தலைவர் காமராசர்

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும்.

தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார். விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா…. அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே…!” என்பார்.

தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு…?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர். “ஏன்ய்யா… குருக்கள்…. நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க…. இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா…? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப்போனார்கள்.

தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு… அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு…!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க…!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன்.

“கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன். “கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா…?” “இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா…?” என்றார். நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும். அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா…? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா…?இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே…?” என்றேன். “மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” என்றார் காமராசர். எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா…..? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை…?” என்று கேட்டேன். “நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி – ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே…. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே…! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்…” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா…?” எனக் கேட்டேன். “அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்… எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்….?’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்…. அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா…?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க…? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா….” ஊருக்கு நூறு சாமி… வேளைக்கு நூறு பூஜைன்னா…. மனுஷன் என்னிக்கு உருப்படறது…? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்….. வறுமை – சுகா தாரக்கேடு…. ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு…. பூஜைன் னேன்…..? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்…?” தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர்சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.

“அப்படியானா…. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா…. இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா….?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்… “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா…? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்… காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்… மதம் மனிதனுக்குச் சோறு போடுமா…? அவன் கஷ்டங்களப் போக்குமா…? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு…? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா… நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே…! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே….! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்…?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார்.

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன். “நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே… அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே…?” என்று வினாத் தொடுத்தேன். தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்… கிறுக்கா… நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்….? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்….! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா… அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”….காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க…. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல… எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல… புதுசு கட்டுனதுமில்ல… பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்…” என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்…!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே…?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல… பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா…? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்….” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா…? அதிலேருந்து எப்போ விலகுனீங்க…?” இது நான். “சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு… எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா…?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா… மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே… அதப்பத்தி….?” என்று கேட்டேன். “அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்…!” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா…?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.
-நன்றி: திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்) 

>>>நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை...

நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை

* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.

* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.

* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, "போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர்.

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...

இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

>>>கற்றது ஒழுகு! - சுகி.சிவம்

''தாத்தா, திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்பிக்கிறேன். சரியா இருக்கான்னு பாருங்க...'' என்று தமிழ் புத்தகத்தை நீட்டினான் பாபு. ''சொல்லு'' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் தாத்தா.

''கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக''

என்று வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடகடத்தான் பாபு. ''இந்த குறளுக்கு என்ன அர்த்தம் சொல்லு?'' என்று தாத்தா இடையில் கேள்வி கேட்டதும், ''இது மனப்பாடப் பகுதி, ஒப்பிச்சா போதும்... அர்த்தம் எல்லாம் கேட்க மாட்டாங்க...'' என்று நழுவினான் பாபு.

''பாபு, எதை கற்றாலும் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சு கத்துக்கணும். அதைவிட முக்கியம், அப்படி கற்ற வழியிலே நடக்கணும். இதுதான் இந்த குறளோட அர்த்தம். இது வெறும் மதிப்பெண்கள் வாங்க மட்டுமல்ல. வாழ்க்கை முழுக்க பயன்படுற திருக்குறள்'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''இப்பதான் நான் ஒரு கதை படிச்சேன். ஏசுவின் தொண்டராய் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தெய்வீக ஊழியரான புனித பிரான்சிஸ் அசிசி என்ற பாதிரியார். அவர் ஒரு துறவியர் இல்லத்தின் தலைவர். பல துறவிகள் அந்த இல்லத்தில் தங்கி, அவரிடம் பைபிள் கல்வி கற்று தொண்டர்களாக தயாராகினார்கள்.

ஒருநாள் இரவு அந்த இல்லத்தின் வாசலில் வந்த ஓர் ஏழைப் பெண், ''பசிக்கிறது, ஏதாவது பிச்சை தாருங்கள்'' என்று அழுதாள். இரக்கம் மிகுந்த புனித பிரான்சிஸ் அசிசியார் தமது இல்லத்திலிருந்த மற்றொரு துறவியிடம், ''அந்த பெண் பசியாற ஏதாவது கொண்டு வந்து தாருங்கள்'' என்றார்.

உள்ளே போய்விட்டு வெறுங்கையுடன் திரும்பி வந்த துறவி, ''இவள் மிகுந்த பாவம் செய்திருக்க வேண்டும். இரவு உணவு முடிந்துவிட்டது. உள்ளே ஒரு சின்ன ரொட்டித் துண்டு கூட மிச்சம் இல்லை'' என்றார்.

''அப்படியானால் அவளுக்கு வேறு ஏதாவது கொடுத்து அனுப்ப முடியுமா பாருங்கள்'' என்றார் புனித பிரான்சிஸ் அசிசி.

கொஞ்சம் எரிச்சலுடன் ''வேறு எதைக் கொடுப்பது? இது துறவியர் இல்லம். இங்கு வேறு என்ன இருக்கும்? வேண்டுமானால் நீங்கள் எங்களுக்கு பாடம் சொல்லுகிற வேத புத்தகம்தான் இருக்கிறது'' என்றார் அந்த துறவி.

''ஆஹா, நல்ல யோசனை! இவள் அதை விலைக்கு விற்றால் நல்ல பணம் கிடைக்கும். பிற ஊழியர்களிடம் கருணைக்காட்டு என்று ஏசுபிரான் உபதேசித்த புத்தகத்தை தினமும் நாம் வாசித்துவிட்டு இரக்கமான செயல்கள் செய்யாமல் இருப்பதைவிட படித்ததை பின்பற்றும் முகமாக இரக்க செயல்கள் செய்வதே நலம்'' என்று வேத புத்தகத்தை அப்பெண்ணுக்கு கொடுத்துவிட்டார் அவர்.

இந்த காலம் போல புத்தகங்கள் அவ்வளவு விலை மலிவாக கிடைக்காத பழைய காலம் அது. அச்சு இயந்திரங்கள் இல்லாததால் வெகு சிரமப்பட்டு கையாலேயே எழுதப்பட்ட நூல் அது. எனவே அது நல்ல விலைக்கு வாங்கப்படும். ஆனால், அதே போன்று இன்னொன்று கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட நூலை கற்பதைவிட கற்ற வழியில் நிற்பது முக்கியம் என்ற நோக்கத்தில் புத்தகத்தை கொடுத்தார் புனித பிரான்சிஸ் அசிசி.

''பாபு, இதையே பாரதியார் புதிய ஆத்திச்சூடியில், 'கற்றது ஒழுகு'என்கிறார். புரிஞ்சுதா'' என்றார் தாத்தா.

குறள் மனப்பாடம் செய்ய மட்டுமல்ல... வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் தான் என்பது பாபுக்கு புரிந்து விட்டது.

>>>டெல்லி மாணவி அமானத் மரணம். சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

டெல்லி மாணவி அமானத் மரணம். 
சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

>>>கடல் எல்லையை சுட்டிக்காட்டும் கருவி - சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

>>>பாலிடெக்னிக் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், நேற்று, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வுகள், அக்டோபரில் நடந்தது. இத்தேர்வு முடிவுகள், www.tndte.com http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டது. மறு மதிப்பீட்டிற்கான, விடைத்தாள் நகல் பெற, விரும்புவோர், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

>>>புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

கடந்தாண்டு மே, 16ம் தேதி, தலைமைச் செயலராக இருந்த மாலதியை மாற்றிவிட்டு, தேபேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம், கட்டாக் நகரைச் சேர்ந்த, தேபேந்திரநாத் சாரங்கி, 1977ல், இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் வருவாய், போக்குவரத்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட துறைகளில், முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர், இம்மாதம், 31ம் தேதி, பணி ஓய்வு பெறும் நிலையில், இவரது பணிக் காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், மாநில அரசின் பரிந்துரையை, மத்திய அரசு  தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று வெளியானது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியில், 1976ல் சேர்ந்தார். தமிழகத்தில் போக்குவரத்து துறை செயலர், அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்தாண்டு, டிசம்பர், 7ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலராக பொறுப்பேற்றார். தற்போது, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற, இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவரது கணவர் பாலகிருஷ்ணன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின்,கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர்.

டி.ஜி.பி., ராமானுஜத்தின் பதவிக்காலத்தை, இரண்டுஆண்டுகள் நீட்டிக்க, ஏற்கனவே தமிழக அரசு பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால், தலைமைச் செயலர் பதவி நீட்டிப்பு விவகாரத்தில், மத்திய அரசு நிராகரித்துள்ளது.

>>>மின்னல் ஏவுகணை

 
உலகின் அதிவேக "சூப்பர்சோனிக்' ஏவுகணையை கடலுக்கடியில் இந்தியா ஜனவரியில் பரிசோதிக்கவுள்ளது. எதிரியின் போர்க்கப்பல்களை மறைந்திருந்து தாக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கடற்படையின் பலத்தை பலமடங்கு கூட்டும்.

சிறப்புகள்
* 290 கி.மீ.,க்கு அப்பால் இருக்கும் இலக்கை 6 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் தாக்கும்.
* இந்த ஏவுகணை இந்தியா-ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பு.
* சீனாவின் "சன்பர்ன் சூப்பர்சோனிக்' ஏவுகணையை விட வேகமானது.
* அமெரிக்கா, பிரிட்டனின் "டொமாஹக்' ஏவுகணையை விட மூன்று மடங்கு வேகமானது.
* குறைவான உயரத்தில் பறக்கும் "சூப்பர்சோனிக்' உளவு விமானங்கள் கூட இதை கண்டறிவது கஷ்டம்.
* இலக்கை தாக்கும் போது கடலுக்கடியில் 10 மீட்டர் ஆழத்துக்கும் குறைவாக சென்று தாக்கும்.

தாக்கும் விதம்
1. "பான்டூன்' எனப்படும் நீர்மூழ்கி உதவியுடன் ஏவுகணை ஏவப்படும் ஆழத்துக்கு கொண்டு செல்லப்படும்.
60 மீ ஆழத்திலிருந்து ஏவப்படும்.
2. கடலுக்கடியிலிருந்து நீர்மட்டத்தை 3 வினாடியில் கடந்து வெளியேறும்.
3. கடக்கும் தூரத்துக்கேற்ப உயரம் சென்று இலக்கை நோக்கி திரும்பும்.
4. திட எரிபொருள் "சூப்பர்சோனிக்' வேகத்துக்கும், திரவ எரிபொருள் ஏவுகணையின் இன்ஜின் வேகத்துக்கும் உதவுகிறது.
5. இலக்குக்கு சிறிது தூரத்துக்கு முன்னர் கடலுக்கடியில் சென்று தாக்கும்.

எதிரி போர்க்கப்பல்:ஒரு ஏவுகணையின் மதிப்பு ரூ.8-10 கோடி மதிப்புள்ளதாகும். இது 300 கிலோ வெடிபொருள்களை சுமந்து சென்று 290 கி.மீ.,ரம் தாக்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் வேகம்2.8 மாக் வேகம் ஆகும் 1 மாக் (ஒலி) வேகம் என்பது மணிக்கு 1195 கி.மீ.,

>>>ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள் !

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது.எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவிசெய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையேதான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனிதவரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.

உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்கவேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப் பட்டிருக்கிறது. நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண்தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரியஆயுதங்களாக இருந்தன. பாலின்பத்தையும், பராமரிப்பையும் அந்த காலத்து பெண்கள்தான் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தினார்கள். திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கிறாள்.

புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன்கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள்.

தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்கிறாள். இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும்நிலையை உண்டாக்குகிறாள். தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.

பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினைத்துக்கொள்வாள். அவளது விருப்பத்துக்கு மாறாக சிறிது நடந்து கொண்டாலும், நம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய்வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்படுகிறாள்.

ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான். உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப்பெறுகிறாள்.

ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தியை அளிக்கிறது. பிறரை நேசிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் திறனை அளிப்பதோடு, ஆண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.

ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.

>>>தமிழக 'சிலந்தி மனிதன்' !

செங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல், விறு, விறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும்அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார், தமிழகத்தை சேர்ந்த வாலிபர்.

அவரது பெயர் ஜோதிராஜூ. அவர் 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான சுவரில் எந்தவித பிடிமானமும்இல்லாமல் கைகளை ஊன்றியபடி சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயரசெய்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கோட்டைகளை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிலந்திமனிதனின் சாகசத்தை பார்த்து அதிசயித்து போகிறார்கள். அவரது சாகசத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடுக்கும்பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.

இந்த சிலந்தி மனிதன் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்.

இவரது சாதனைக்கு பின்னால் சோதனையும் புதைந்து இருக்கிறது. சிறுவனாக இருந்தபோது, ஜோதி ராஜூவுக்குபடிப்பு ஏறவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பிறகு கட்டிட வேலை செய்து வந்தார். அப்போதுவிரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்கொலை முடிவை தேடினார். அதில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவேஇப்போது சாதனையாளராக உருவெடுத்து இருக்கிறார்.

கட்டிட தொழிலாளியாக இருந்த ஜோதிராஜூவுக்கு சிலந்தி மனிதன் ஆகும் வினோத ஆசை எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டால், 'நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது, குரங்குகள் வந்தால் அவற்றை கூர்ந்து கவனிக்கஆரம்பித்து விடுவேன். மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் அவற்றின் குறும்பு தனம் எனக்குபிடிக்கும். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாமும் ஏன் அவ்வாறு சுவரில் ஏறி இறங்கமுடியாது என்று. அதன் விளைவுதான் நான் சிலந்தி மனிதன் ஆன கதை' என்று சொல்லி முடித்தார், ஜோதிராஜூ

குரங்கிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஜோதிராஜூவுக்கு அந்த பகுதி பொதுமக்கள் சூட்டிய பெயர் என்னதெரியுமா? குரங்கு ராஜா.

அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம், குரங்கு ராஜா என்று கேட்டால்தான் தெரிகிறது. அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்ட ஜோதிராஜூவிடம் வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்டால், '4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரணமனிதன். அப்போது நான் சுவரில் ஏற பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் நான் சுவர் ஏறுவதை பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள்என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே எனதுஅவநம்பிக்கையை போக்கி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது' என்றார்.

அவரிடம் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், 'எனக்கு உலகளவில் சிறந்த சிலந்தி மனிதனாக உருவாகவேண்டும் என்பதே லட்சியம். இதற்காக தற்போது மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற வேண்டும்' என்று கூறிய ஜோதிராஜூஅருகில் இருந்த சுவரில் விறு, விறுவென வேகமாக ஏறினார்.

>>>டிசம்பர் 29 [December 29]....

நிகழ்வுகள்

  • 1170 - இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கெட் அவரது தேவாலயத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1690 - இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.
  • 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.
  • 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • 1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
  • 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.
  • 1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.
  • 1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
  • 1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.
  • 1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
  • 1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1972 - புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1975 - நியூயோர்க் நகர விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.
  • 1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
  • 1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
  • 1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.
  • 1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
  • 1997 - ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
  • 1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
  • 2001 - பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1937 - மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்

இறப்புகள்

  • 1924 - கார்ள் ஸ்பிட்டெலெர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து எழுத்தாளர் (பி. 1845)
  • 2004 - ஜூலியஸ் அக்செல்ரொட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1912)

சிறப்பு நாள்

  • சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

>>>அங்கோர் வாட்

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

>>>இலவசமாக ONLINE தேர்வுகள் எழுத சில தளங்கள்

>>>நல்லதை கற்றுக்கொள்! - சு.கி.சிவம்

"Home Work கணக்கு போட்டாச்சா?" என்று பாபுவை அதட்டினாள் அக்கா.

"கஷ்டமா இருக்குக்கா. ராமு எப்படியும் கணக்கு போட்டுட்டு வந்துடுவான். கோபுவும், நானும் அவனை பார்த்து காப்பி பண்ணி எழுதிக்குவோம். இதுதான் ஈஸின்னு கோபுவும் சொன்னான்" என அக்காவிடம் விளக்கமாகப் பேசினான் பாபு.

பாபுவை அருகில் அழைத்து "எங்க டீச்சர், ஒரு கதை சொன்னாங்க பாபு. அதை உனக்கு சொல்லட்டுமா?" என்றாள் அக்கா.

"ஹை, கதையா..?! சொல்லு... சொல்லு" என ஆர்வமானான் பாபு.

"காட்டில் மிகவும் சிரமப்பட்டு விறகுகளை வெட்டி ஒருவர் சம்பாதித்து வந்தார். ஒரு நாள் அவர் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு புலி கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடுவதை பார்த்தார். உடனே பாதுகாப்பாக மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டார். துரத்தி துரத்தி படாதபாடுபட்டு மானை புலி அடிச்சு... சாப்பிட்டது! ஆனால், அந்த மானை முழுமையாக சாப்பிட முடியாததால், மிச்ச இரையை அப்படியே போட்டுட்டு புலி போயிடுச்சு. பிறகு வயசான கழுதைப்புலி ஒண்ணு அங்கு நொண்டியபடியே வந்தது. அதுக்கு ஒரே சந்தோஷம். "கொழுத்த மான்! கஷ்டமே இல்லாம கடவுளா கொடுத்திருக்காரு. கடவுளுக்கு நன்றி!" என்று சொல்லிட்டு மானை முழுமையாக தின்றுவிட்டு ஏப்பம் விட்டது.

இதை பார்த்த விறகுவெட்டி, "அட உழைக்காத கழுதைப்புலிக்கு கடவுள் எவ்வளவு நல்ல உணவு கொடுத்தாரு. படாதபாடுபட்டு புலிக்கு கிடைச்ச அதே உணவு, உழைக்காமலேயே கழுதைப்புலிக்கு கிடைக்கும் படியா செஞ்ச கடவுளை நாம புடிச்சுக்கணும்னு!" நினைச்சு கோடாரியை தூக்கி வீசியெறிந்தாரு.

'இனிமேல் உழைக்கவே தேவையில்லை. கழுதைப் புலிக்கு உணவு கிடைக்கச் செய்தது போல் நமக்கான உணவையும் கடவுள் கொடுப்பாரு’ அப்படின்னு நினைச்சு மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு நேராக கோவிலுக்குப் போனார்.

சாமி சாப்பாடு கொடுக்கும்னு இரண்டு நாள் இரவு பகலாக காத்திருந்தாரு. பசி மயக்கம். கண்ணை மூடினாரு. அவரது கனவுல கடவுள் வந்தாரு.

"முட்டாளே, உழைக்காம சாப்பிடணும்ங்கிற தப்பான விஷயத்தை கழுதைப்புலி கிட்டேயிருந்து நீ கற்றுக் கொள்வதற்காகவா உனக்கு அறிவை கொடுத்தேன். உழைச்சுதான் சாப்பிட வேண்டும் என்பதை புலியிடம் இருந்து கற்றுக்கொள்" என்றார்.

கடவுள் சொன்னதைக் கேட்டு புத்தி தெளிந்தவராக மீண்டும் கோடாரியை தூக்கிக் கொண்டு உழைப்பதற்காக காட்டுக்குச் சென்றார் அந்த விறகுவெட்டி!" என்று கதை சொல்லி முடித்தாள் அக்கா.

"பாபு, இந்த கதையில வர்ற மாதிரி காப்பி அடிக்கலாம் என்ற விஷயத்தை கோபுவிடம் இருந்து கத்துக்காதே. கஷ்டப்பட்டு கணக்கு போடணும்ங்கறதை ராமுவிடம் இருந்து கற்றுக்கொள்" என்றாள் அக்கா.

>>>சத்தம் போடாதே!

வேலையில்லாத மாடசாமி வேலை தேடி ஊர் ஊராத் திரிஞ்சான். பக்கத்து ஊர்ல ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்திருக்குன்னு கேள்விப்பட்டு, அங்க... போனான். வேலை கேட்டு வந்த அவனை பாத்த சர்க்கஸ் கம்பெனி மொதலாளி, "உனக்கு வேலை தர்றேன். ஆனா அது கொஞ்சம் கஷ்டமான வேலை. உன்னால செய்யமுடியுமா..?!"ன்னார். "என்ன வேலை வேணும்னாலும் செய்வேன்"னான் மாடசாமி.

"எங்ககிட்ட இருந்த மனுஷக்குரங்கு செத்துப் போச்சு. நீ என்ன பண்றே, அந்த மனுஷக்குரங்கு மாதிரி வேஷம் போட்டு நெசமான குரங்கு மாதிரியே ஜனங்க முன்னாடி நடிக்கணும். அதான் உன் வேலை" என்றார் மொதலாளி.


"சரி"ன்னு சந்தோஷமா வேலையில் சேர்ந்தான் மாடசாமி.

குரங்கு வேஷம் போட்டுட்டு அப்படியே அச்சு அசலா... குரங்கு மாதிரியே சேட்டைகள் பண்ணினான். வயித்தையும், தலையையும் சொறிஞ்சிக் கிட்டு பிரமாதமா நடிச்சான். ஜனங்க மத்தியில ஒரே ஆரவாரம். குரங்கு போடுற குஸ்தியை பார்க்கவே கூட்டம் அலைமோதுச்சு.


ஒரு நாள் குரங்காக மாடசாமி நடிச்சுட்டு இருக்கும்போது சிங்கம் இருந்த கூண்டுக்குள்ளே தவறி விழுந்துட்டான். அவ்வளவுதான் குரங்கு வேஷத்துல இருந்த மாடசாமிக்கு பேயறைஞ்சது போல ஆயிடுச்சு..!


அவனுக்கு பக்கத்துல ரெண்டடி தூரத்துல... சிங்கம். சிங்கம் மெதுவா அவன் பக்கத்துல வந்துச்சு. பயத்துல நடுநடுங்கிப்போன மாடசாமி, "உதவி செய்ங்க"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அப்போ...," உஷ்... சத்தம் போடாதே. விஷயம் தெரிஞ்சா... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை போயிடும்னு" சொன்னது... சிங்க வேஷத்துல இருந்த ராமசாமி.

>>>மன்னிக்க வேண்டுகிறேன்… - ஓ பக்கங்கள்-ஞாநி

அன்புள்ள…..
உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.
டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.  உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.
உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.
உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.
மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.
படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.
படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.
அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.
உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.
உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.
நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.
பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.
குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.
இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….
படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.
இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.
மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.
அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.
இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.
அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.
அன்புடன்
ஞாநி
சக இந்தியர்கள் சார்பாக.
குமுதம் 26.12.2012

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of winners of Thirukkural competitions

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு List of winners of Thirukkural competitions >>> தரவிறக்கம் ச...