கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சந்திரசேகர ஆசாத்...

 
நம் இந்திய சுதந்திரம் வெறும் அகிம்சை வழியில் மட்டும் கிடைத்து விட வில்லை இவரக்ளை போன்ற எண்ணற்ற உயிர் தியாகங்கள் நாம் பெற்ற சுதந்திரத்துக்கு பின்னால் இருக்கிறது அவற்றை நாம் நினைவு கூறுவது அவசியாமான ஓன்று . இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) ஜனவரி 26 ஆம் நாள் வருகிறது . நாம் அந்த நாளில் மட்டும் தான் வாழ்த்து தெரிவித்து தேச பற்றை நினைவு கூறவது வழக்கம் . அப்படி அல்லாது நாம் சில மறைக்க பட்ட இல்லை நமக்கு தெரியாத சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி தெரிந்து கொள்ளுவோம் தினம் ஒரு தியாகிகளை பற்றி அப்படி பட்ட தியாகிகளை பற்றிய பதிவுகள் இருந்தால் நண்பர்கள் இன்று ஒரு தகவலுக்கு அனுப்பி வைக்கலாம் . நாம் பதிவு செய்யலாம் .சுதந்திரம் என்ற உடன் நமக்கு முதலில்நியாபகத்திற்கு வருவது காந்தி மட்டும் தான் . காந்தி மட்டும் தான் போராடினார்களா இல்லவே இல்லை எண்ணற்ற தியாகிகள் இருக்கிறார்கள் அவர்களை பற்றியும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மறைக்க பட்ட சில தியாகிகளும் இருக்கிறார்கள் அவர்களை பற்றிய வெளி உலகதிருக்கு தெரியபடுத்த வேண்டும் நம் சுதந்திரத்திற்காக பாடு பட்டு இறந்தவர்களுக்கு நாம் கொடுக்க கூடிய ஒரு சிறய மரியாதை அவளவு தான் அவர்களுடைய தியாகங்களுக்கு மத்தியில் ... சொல்ல வார்த்தைகள் இல்லை

ஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார். அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது. இவரது 15ஆவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்று தான் கூறினேன் என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமைடைந்து அவ்ருக்கு 15 பிரம்படி கொடுக்க கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் பாரத் மாதாகி ஜெஎனக்கூறினார். அதுவரை சந்திரசகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்கு பிறகு சந்திரசேகர ஆசாத் என்று அழைக்கப்பட்டார்.

காந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்ட பின்னரும் ஆசாத் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். முழு சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அற்பனித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்து அவரின் தேசபக்தியை வெளிப்படுத்த அதன்பின் பிசுமில் அவரை தன் அமைப்புடன் சேர்த்துக்கொண்டார். சாதி மத பணப்பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளிடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயே கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோகி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.

ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப்பயிற்சிக் கூடமாக பயன்படுத்தினார். மேலும் அவரே தன் அமைப்பினருக்கு போர்பயிற்சிகளை கற்றும் கொடுத்தார். . அப்போது தர்மபுரம்கிராமத்தின் குழந்தைகளுக்கு போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார்.

இந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடந்த ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார்.

மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குருபோன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மரூருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.

பெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவ் ராஜிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரை ஒரு வஞ்சகன் காட்டிக்கொடுத்ததால் அவரை பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவ் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தல் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.

ஆசாத் இறந்த இடமான அல்ஃப்ரெட் பூங்கா (பிற்பாடு ஆசாத் பூங்கா என பெயர் பெற்றது) பிரபலம் ஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா?

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா? - வாட்ஸ்அப் பகிர்வு சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள் என்று மேடை...