கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.10.2020 (சனிக்கிழமை)...


🌹ஒரு உண்மையான அன்பை எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்  அது உங்களை இன்னும் அதிகமாக நேசிக்குமே தவிர விட்டு விலகிச் செல்ல நினைக்காது.!

🌹🌹யோசிக்காமல் எடுத்த முடிவுகள் அனைத்தும் யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.இங்கு பலரது வாழ்க்கையில்.!!

🌹🌹🌹பக்கத்து வீட்டுக்கு பிரச்சனை வந்தா கடவுள் தண்டனை கொடுக்கிறார்ன்னு அர்த்தமாம்.

அதுபோல தன் வீட்டிற்கு பிரச்சனை வந்தால் கடவுள் சோதிக்கிறார்ன்னு அர்த்தமாம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑DEO பதவி உயர்வு - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி -மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2020-2021-ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -  நாள்: 09.10. 2020

⛑⛑ சிறுபான்மையினர் இன மாணவ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க  அரசு கடிதம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2020

⛑⛑கொரோனா தாக்கம் குறைந்த பின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

⛑⛑+1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்று தரப்படும்.

தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை.

⛑⛑CPS - மார்ச் & ஏப்ரல் 2019 மாதங்களுக்கான விடுபட்ட பதிவுகளை 15-10-2020க்குள் சரிசெய்ய அரசு தகவல் மைய ஆணையர் கடிதம் வெளியீடு.

⛑⛑பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிந்து இறந்த/ ஓய்வு பெற்ற/ பணிதுறப்பு செய்த/ பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளரின் முழு CPS தொகையை பெற அவரது அசல் பணிப்பதிவேடு அனுப்ப தேவையில்லை. பணிப்பதிவேட்டின் சான்றொப்பமிட்ட நகல்கள் அனுப்பினால் போதுமானது என்பதை அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அறிவிக்க கருவூலக் கணக்குத் துறையின் CPS பிரிவு ஆணையர் கடிதம், நாள்: 09-10-2020.

⛑⛑பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதிகள், பதவி உயர்வு/ நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வழிமுறைகள் குறித்தும், அப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு(Gazette) - நாள்: 30.01.2020.

⛑⛑பொதுமுடக்க காலத்திற்கு மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு ஊர்திப்படி வழங்க அனைத்து கருவூலங்களுக்கும் தெளிவுரை - நிதித்துறை சிறப்பு செயலாளரின் கடிதம்.

⛑⛑ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள்.08.10.2020.

⛑⛑ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த அரசாணை. (ரூ.2800 தர ஊதியம் பெற்ற 1999ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தற்போது Level:10ல் Cell:40ஐ அடைந்துவிட்டார்கள்)

⛑⛑விவசாயிகளை சந்திக்கும் திமுக

3 வேளாண் சட்டங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளிடம் நேரடியாக கொண்டு சேர்க்க திமுக முடிவு

6 பகுதிகளாக பிரித்து விவசாயிகளை சந்தித்து

துண்டு பிரச்சுரம் விநியோகம், சட்டத்தை எதிர்க்க வலியுறுத்த உள்ளனர்

திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல்.

⛑⛑அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.

⛑⛑கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும்,  மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் வருகின்ற 13,14ம் தேதியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். - முதல்வர் பழனிசாமி

⛑⛑அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழு 11 பேரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறப்படவுள்ளது. விரைவில் அதிமுக பொதுக்குழு அறிவிப்பு வெளியாகும் என தகவல்

⛑⛑கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது மகள் சவுந்தர்யாவை கடத்தி சென்றதாக தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு முடித்து வைப்பு. கணவர் பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு நீதிமன்றம் அனுமதி.

⛑⛑வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4%ஆகவே தொடரும் 

நடப்பு நிதியாண்டு இறுதிவரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது

- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்

⛑⛑மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.

⛑⛑3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு

⛑⛑மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் என ஏன் தமிழக அரசு வலியுறுத்துகிறது ? மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது என்று கூறியுள்ள நிலையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

⛑⛑பாஜகவினரும் அதிமுகவினரும் கூட்டணி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்தார்.

⛑⛑கொரோனா வைரசை பரப்பி, எல்லா நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய சீனாவை, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்' என, அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தி உள்ளார். 

⛑⛑கரூர் : வேடசந்தூர் குறும்பபட்டியில் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கரூர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் அனுப்பியுள்ளார்.

⛑⛑தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் தொலைக்காட்சி நெறிமுறைகள் சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

⛑⛑இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்யலாம்: நீதிபதி

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறு ஏதேனும் இடங்கள் அல்லது வீடு இருந்தால் அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச இடத்தில் வீடு கட்டியிருந்தால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும். சிவகங்கையை சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் பட்டா வழங்க ஆட்சியருக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

⛑⛑வேளாண் சட்டங்களால் விளை பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்.

⛑⛑கைவிரல் ரேகை அங்கீகாரம் இல்லாவிட்டால் மாற்று முறையைக் கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு.

⛑⛑தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் பிணையில்லாக் கடன். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை.

⛑⛑அதிகளவில் மாசுபடுத்தும் ஆலையாக இருப்பதால் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்

⛑⛑இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ.பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திததுப் பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். எல்லையில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

⛑⛑மத்திய தொல்லியல் துறையில் முதுநிலைப் பட்டயபடிப்பு சேர செம்மொழியான தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல் துறை இணை இயக்குனர் உத்தரவு.

⛑⛑நாட்டில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

⛑⛑ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் சராசரியாக இறந்து வரும் நிலையில் கொரோனா காரணமாக மேலும் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

⛑⛑உலக வா்த்தக அமைப்பின் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தோந்தெடுக்கப்படவுள்ளாா். உலக வா்த்தக அமைப்பின் அடுத்த தலைவரைத் தோந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்றுக்கு இரு பெண்கள் தோந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவரில் ஒருவா் உலக வா்த்தக அமைப்பின் தலைவராகத் தோந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த அமைப்புக்கு முதல் முறையாக ஒரு பெண் தலைவராகப் பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

⛑⛑சுற்றுச்சூழல் எதிா்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வுகளை அளிப்பவா்களுக்காக 'எா்த்ஷாட் பரிசு' என்ற புதிய பரிசை பிரிட்டன் இளவரசா் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளாா்.

⛑⛑இணையத்தின் மூலம் திமுகவில் எளிதாக உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். 25 நாட்களிலே 10 லட்சம் புதிய உறுப்பினர்களை நெருங்குகிறது.

⛑⛑இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம்

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட பயண டிக்கெட் பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணத்தை, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

⛑⛑தொல்லியல்துறை அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை  முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்?:

எதிர்ப்புக்குரல் எழுந்தால்தான் தமிழ் சேர்க்கப்படுமா? - உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி.

மொழிகள் உணர்வோடு தொடர்புடையவை என நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கருத்து.

⛑⛑நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

👉தமிழக அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அக்கறை காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் ரூபாய் 5000 அபராதம் விதித்துள்ளது.

⛑⛑அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விளாத்திகுளம் மார்க்கண்டேயன் திமுக-வில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்க்கண்டேயன் இணைந்தார்

⛑⛑சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு அனுப்ப இயலாது 

இங்கிலாந்து அரசு

⛑⛑காமராசர் பல்கலை. விடைத்தாள் முறைகேடு விவகாரம் : தவறு செய்யாதவர்களுக்கு ரிசல்ட் வழங்க நடவடிக்கை: துணைவேந்தர் தகவல்

⛑⛑அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புச் சேர்க்கைக்கு 10.10.2020 முதல் 20.10.2020 வரை  www.tngasapg.in அல்லது www.tngasapg.org என்ற இணைய தளங்களின் வாயிலாகப் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு. முதுகலை படிப்புகளுக்கான சான்றிதழ்களை 15 முதல் 20 ஆம் தேதி வரை www.tngasapg.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

⛑⛑தமிழ் நாட்டில் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து மத்திய தொல்லியல் துறையின் முதுகலை பட்டயப் படிப்பிற்கான அடிப்படைக் கல்வித் தகுதியில், செம்மொழிகளின் வரிசையில் தமிழ் மொழியை (M.A., Tamil) முதலாவதாகச் சேர்த்து திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

⛑⛑பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.Phil பகுதிநேர படிப்பிற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு  இன்றே கடைசி தேதி

⛑⛑சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களைச் சேர்ந்த 276 மெட்ரிகுலேஷன் பள்ளி களுக்கு, தொடர் அங்கீகார ஆணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார் 

⛑⛑ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 புதிய திட்டத்தை தொடங்கினார் ஆந்திர  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இத்திட்டத்திற்கு  அரசு ஆண்டுக்கு ரூ.650 கோடி செலவிடுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து, 34,322 மாணவர்கள் பலன் அடைவார்கள். 

⛑⛑கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசத்தின் பெருமிதம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...