கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.10.2020(வெள்ளி)...

🌹எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாததது போல் இருந்து விடுவது நல்லது. ஏனெனில் அந்த பண்பு மேலும் பலவற்றை கற்றுத் தரும்.!

🌹🌹வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்தால் அது வெற்றி...

ஏராளமான பிரச்சனைகளைக் கடந்து ஜெயித்தால் அது வரலாறு.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀மிலாது நபி இன்று கொண்டாட்டம்.. அமைதி-வளம் பெருகட்டும் என  ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🎀🎀மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கவர்னர் நேற்றுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்களை கடந்து விட்ட நிலையில் நேற்று இம்மசோதா தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்தின் வழியாக ஒரு ஆண்டுக்கு அரசு பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வரை மருத்துவ இடங்களில் கூடுதலாக சேர முடியும். இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் எழுதிய கடிதத்தில் சட்டம் குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரகால அவகாசம் தேவை எனவும், இதனை அமைச்சர்கள் குழுவிடம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு வழி வகை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

🎀🎀அதிர்ச்சி தரும் துணைத்தேர்வு முடிவுகள் 10ம் வகுப்பில் தேர்ச்சி 22% பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி 12%: மாணவர்கள், பெற்றோர் கடும் அதிருப்தி

🎀🎀2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணையினை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

🎀🎀சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி 

🎀🎀நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது - நாளிதழ் செய்தி

🎀🎀ரேசன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியத்தை பரிந்துரை செய்ய குழு -தமிழக அரசு உத்தரவு

🎀🎀டிசம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் துவங்க நிலையில் புதிதாக தொடங்கிய 10  அரசு கலைக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மாணவர்கள் அச்சம் 

🎀🎀கருணை அடிப்படையிலான நியமனம் உள்பட தொடக்க நிலைப் பணியிடங்களை நிரப்பத் தடை ஏதும் இல்லை என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

🎀🎀அனைத்து பள்ளிகள் மற்றும் அங்காடிகளில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, உள்ளாட்சிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

🎀🎀கருணை அடிப்படை பணி வழங்குவதில் நியாயமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு

🎀🎀SAI என்ற எளிய செய்தி பரிமாற்றி செயலியை இந்திய இராணுவம் உருவாக்கி உள்ளது.

WhatsApp, Telegram ஆகிய செயலிகளுக்கு மாற்றாக உருவாக்கம். விரைவில் உபயோகத்திற்கு வரும் என தகவல்.

🎀🎀 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை நிரந்தரமாக தடை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் TRB வெளியீடு

🎀🎀மண்டல பூஜை, மகரவிலக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀நேற்று முதல்வர் பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் இருந்து இருவரும் ராமநாதபுரம் செல்கின்றனர். ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

🎀🎀மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது: அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                         🎀🎀”அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள், பதிலளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் எனும் நம்பிக்கை காரணமாகவே, 

ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க தேவையில்லை என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன” - நீதிபதி கிருபாகரன் அமர்வு

🎀🎀IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல்  மைய (Govt. Data Centre) ஆணையர் கடிதம்.

🎀🎀தமிழகத்திலேயே முதல் முறை - காலையில் நுழைவுத்தேர்வு, மாலையில் முடிவுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் அசத்தல்.

🎀🎀அகவிலைப்படி கணக்கிட பழைய முறையே தொடர வேண்டும் - டிஆர்இயூ வலியுறுத்தல்.

🎀🎀போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

🎀🎀இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

🎀🎀தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை, பட்டதாரிகள்தான் உருவாகின்றனர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

🎀🎀IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு.

🎀🎀இன்ஜி., பொது கவுன்சிலிங் நிறைவு 91 ஆயிரம் இடங்களுக்கு ஆள் இல்லை

🎀🎀5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

🎀🎀தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

🎀🎀கொரோனா நிதி நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பணி நியமனத்துக்கு தடை நீக்கம் தமிழக அரசு உத்தரவு

🎀🎀ஓய்வூதியர்களே! மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களுடைய முறையீடு மாவட்ட ஆட்சியரால் நிராகரிக்கப்படும்போது, மாநில அளவிலான கமிட்டிக்குமேல்முறையீடு செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியீடு.                                                        

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...