கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


இணைப்பு : தகவல் ஆணையம் தீர்ப்பாணை நகல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 

நக எண்: 56153/RTI/2026 , நாள்: 07.10.2026


பொருள்-

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த இரா. கோபிநாத் என்பாரின் மனு (CP No 6020 / A / 2024) சார்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பொதுத் தகவல் அலுவலர் / நேர்முக உதவியாளர் 28.07.2026 அன்று மேதகு ஆணையத்தில் நடைபெற்ற நேரடி விசாரணையில் கலந்து கொள்ளப்பட்டது - மேற்காண் வழக்கு சார்பாக மேதகு தமிழ்நாடு தகவல் ஆணையரால் 24.09.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சார்பு செய்து அதன்படி செயல்பட அறிவுறுத்துதல் சார்பு.


பார்வை-

தமிழ்நாடு தகவல் ஆணைய வழக்கு எண் CP No 6020 / A / 2024 மீது பெறப்பட்ட தீர்ப்பாணை நாள் 24.09.2026 இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள் 05.10.2026


நேரடி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த திரு. இரா. கோபிநாத் என்பார் மேற்படி சட்ட உட்பிரிவு 6 (1) ன்படி 18.11.2024 நாளிட்ட கடிதம் மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் கூட்டத்தில் தான் அளித்த மனுக்கள் (எண் 637 முதல் 641 முடிய) உள்ள மனுக்களை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சார்பான தினசரி முன்னேற்ற அறிக்கை விவரங்களை 10 இனங்களில் தகவலாக கேட்டு விண்ணப்பித்துள்ளார். சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தி அளிக்கவில்லை மேதகு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளதின் அடிப்படையில் மேற்காண் வழக்கு சார்பாக சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் 28.07.2026 அன்று நேரடி விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் மனுதாரர் திரு. இரா. கோபிநாத் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திருவண்ணாலை மாவட்ட நேர்முக உதவியாளர் (மேல்நிலை) திரு. வீ. ஜெயபால் என்பாரும் நேரில் ஆஜராகி உள்ளனர். மேற்காண் வழக்கின் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த பின்னர் மேதகு தமிழ்நாடு தகவல் ஆணையரால் 24.09.2026 அன்று தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பாணையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. வருங்காலங்களில் மேற்காண் தீர்ப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் மேற்படி சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள் மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் இச்செயல்முறைக் கடிதம் மற்றும் தீர்ப்பாணை அறிவுறுத்தப்படுகிறது. கிடைக்கப்பெற்றமைக்கு ஒப்புதலை அனுப்பிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


இணைப்பு- தீர்ப்பாணை நகல் 7 பக்கங்கள்


துணை இயக்குநர்


இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) 


பள்ளிக்கல்வி இயக்குநர்



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

பிளாக் எண்.12, அரசு பண்ணை இல்லம், பேன்பேட், நந்தனம், சென்னை-600 035 தொலைபேசி எண் 044-29513590


விசாரணை நாள். 28.07.2026 , ஆணை நாள் . 24.09.2026


முன்னிலை


திரு. வி.பி.ஆர். இளம்பரிதி, எம்.ஏ., பி.எல்., எம்.பில்


மாநில தகவல் ஆணையர்


வழக்கு எண் . CP6020/A/2024


திரு. இரா கோபிநாத்

- மனுதாரர்


/எதிர்/


பொதுத் தகவல் அலுவலர் /

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்

முதன்மைக் கல்வி அலுவலகம்,

திருவண்ணாமலை 606 601.

- பொது அதிகார அமைப்பு


ஆணை


மேற்குறிப்பிட்ட வழக்கு 28.07.2026 இன்று இவ்வாணையத்தில் வைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு. இரா கோபிநாத் அவர்கள் நேரில் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு வீ. ஜெயபால், பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை), திருவண்ணாமலை மாவட்டம் அவர்கள் நேரில் ஆஜரானார்.


2. மனுதாரர் 18.11.2024 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் கூட்டத்தில் தான் அளித்த மனுக்கள் (எண் 637 முதல் 641) மேல் நடவடிக்கைக்காக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, தினசரி முன்னேற்ற அறிக்கை தொடர்பான விவரங்களை 10 இனங்களில் தகவல்களாக வழங்கக் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்...