கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு...13.12.2020 (ஞாயிறு)...

 


🌹மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்

ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள் 

இல்லையென்றால் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்.!

🌹🌹கொஞ்சம் அனுசரித்து வாழ்வது நல்ல வாழ்க்கை.

எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்வது நரக வாழ்க்கை.!!

🌹🌹🌹கோபத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை

கோபம் தீர்ந்து விடும் 

வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும் 

பிறர் மனதில் ஆறாத வலிகளாய்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘அண்ணாமலை பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி - தேர்வு முடிவுகள் வெளியீடு.                                                                    📕📘 2019-20 ஆம் கல்வியாண்டின் NTSE இரண்டாம் நிலை (Stage II ) தேர்வு 07-02-2021 அன்று நடைபெறும்.

📕📘பள்ளிக் கல்வித் துறை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (2019-20) - அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Card)வழங்குதல் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவுப் பெற்று 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் வெளியீடு.                     

📕📘TRB - கல்லூரிக் கல்வித் துறை - ஆசிரியர் தேர்வு வாரியம் - மந்தனப் பணி மேற்கொள்ள - 73 பாடப்பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து இனை இயக்குநர்கள், அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அனைத்து இணைப் பேராசிரியர்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் கோருதல் தொடர்பாக அறிவிப்பு வெளியீடு.

📕📘அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்

📕📘தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி 

📕📘இந்த ஆண்டு நீட் ( NEET ) பயிற்சியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

📕📘அண்ணா பல்கலைக்கழக பணிநிரவல் ஆசிரியர்கள் 25 பேர் துணைவேந்தரிடம் மனு

📕📘அதிக வாக்காளர்களை சேர்த்து ,ஷெல்பி எடுத்து அனுப்பும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ( BLO - Booth Level Officer ) சிறப்பு பரிசு வழங்கப்படும் -ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவல்(நாளிதழ் செய்தி)

📕📘சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

📕📘அடல் சுரங்கப் பாதையை பொறியியல் மாணவா்கள் பாா்வையிட ஊக்குவிக்க வேண்டும்: யுஜிசி

📕📘பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

📕📘10,906 காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு இன்று நடக்கிறது.

📕📘அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

📕📘உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கிவரும் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்டமாக 1995-96 - ஆம் ஆண்டு முதல் 2010-11 - ஆம் ஆண்டு வரை துவங்கப்பட்ட 14 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டது - மீதமுள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து ஆணைகள் -  வெளியிடப்படுகிறது.

📕📘IGNOU மூலம் B.ED பயின்றவர்களுக்கு , EVALUATION CERTIFICATE தேவையில்லை என்பதற்கான -அரசாணை மற்றும் செயல்முறைகள் வெளியீடு

📕📘மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் உபரி ஆசிரியர்களை மாற்றி நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு.

📕📘தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

📕📘இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 : விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். 

📕📘தமிழ்நாடு அடிப்படைப் பணி - அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

📕📘7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலாக 161 MBBS இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பின என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு 

📕📘தமிழகத்தில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், --ஜனவரியில் திறக்கப்பட உள்ளன.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. தமிழகத்தில், பள்ளிகளை தவிர, கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன - நாளிதழ் செய்தி 

📕📘'அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர் புதிய ஆசிரியர் பணியிடம் அவசியம்' - அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ள பள்ளிகளில் விகிதாசார அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் செய்ய கோரிக்கை

📕📘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியின் துணை முதலமைச்சராக உள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

📕📘100 கோடி தடுப்பூசி டோஸ்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ்.

📕📘போட்டியில் பங்கேற்க உடல் தகுதி பெற்றாா் ரோஹித் சா்மா:நாளை  ஆஸ்திரேலியா செல்கிறாா்.                                     

📕📘கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது.உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு

📕📘தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்;அமைச்சர் செங்கோட்டையன்

📕📘வரும் 16ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு !!?

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

📕📘ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை.

ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் சிறுநீரக செயல்பாடு எந்த நேரத்திலும் மோசமடையக்கூடும் என தகவல்.

📕📘ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்

மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார் - ஸ்டாலின்

👉ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள்

ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக 

- ஸ்டாலின்

📕📘தமிழகத்தில் அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்பு கூட்டத்தில் காணொலி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். தமிழகம் மீட்போம் தேர்தல் சிறப்பு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் நேற்று உரையாற்றிய போது தண்ணியில்லாத காடு ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரை மாற்றியது திமுக ஆட்சிதான் என அவர் குறிப்பிட்டார்.                     

 📕📘மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால், நிவாரணம் வந்து சேர்ந்துவிட்டதாக நிம்மதி கொள்வார்களா?

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

📕📘வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

📕📘தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

📕📘நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.                                                     📕📘பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நேற்று நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தருமபுரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பாலத்தை கடந்த போது பாரம் தாங்காமல் லாரி கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் முறிந்த லாரி வேகமாக ஓடி முன்னே சென்ற வாகனத்தை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. அந்த நேரத்தில் சாலையின் வலது பக்கத்தில் வந்து கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், கார்களை லாரியின் கண்டெய்னர் பகுதி மோதி நசுக்கியது. இந்த பயங்கர விபத்தில் வாகனங்கள் உருக்குலைந்தன. கார்களில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...