கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.01.2021(ஞாயிறு)...

 


🌹சிலருக்கு நாம் கொடுக்கும்போது நல்லவர்கள்

அதையே திரும்ப கேட்கும்போது கெட்டவர்கள்

அது பாசம் என்றாலும் சரி 

பணமென்றாலும் சரி.!

🌹🌹அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிருந்து பெறவும்கூடாது.

பிறருக்கு கொடுக்கவும் கூடாது.             ஏனெனில் இரண்டுமே வேதனையைத் தரும்.!!

🌹🌹🌹காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை.

ஆனால் காயப்படுத்தி விட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀உயர்நிலை &மேல்நிலைப் பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

🎀🎀பள்ளிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசு அறிவிப்பு

🎀🎀தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன - நாளிதழ் செய்தி 

🎀🎀தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20 -ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

🎀🎀19-ம் தேதி பள்ளிகள் திறப்பு.! மாணவர்களுக்கு தலா இரண்டு வகையான மாத்திரைகள் (மல்டி வைட்டமின் , ஜிங்க்) வழங்க அதிரடி உத்தரவு

🎀🎀வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிதி (தலா பள்ளிகளுக்கு ரூ 500)  ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

🎀🎀கொரோனா பாதிப்பு பகுதிக்கு வெளியே அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள்ளாக திறக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

🎀🎀40% இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசு பணியிடங்கள்: பட்டியல் வெளியீடு.

🎀🎀விண்ணப்பிக்க கடைசிநாள் 18-01-2020. காலியிடங்கள் 123. மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

🎀🎀நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது.

தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

-பிரதமர் மோடி.

🎀🎀கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளையும், பிரசாரங்களையும் தவிர்க்க வேண்டும் 

👉இந்தியாவின் மருத்துவ அமைப்பு அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது 

👉கொரோனாவுக்கு எதிரான நமது போர் தன்னம்பிக்கையும், தற்சார்பும் கொண்டது.

👉கடினமான இந்த போரில் நமது தன்னம்பிக்கை பலவீனம் அடைவதை அனுமதிக்க கூடாது.

👉கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி.

👉தடுப்பூசி போட்டுக்கொள்வதால் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது.

👉இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளும் மற்ற நாடுகளை விட விலை மலிவானவை.

👉முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு.

👉நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்த மக்கள் தொகையே 30 கோடிதான்.

👉முதல் தடுப்பூசிக்கு பின் அடுத்த தடுப்பூசி எப்போது என்பது குறித்து தொலைபேசிக்கு தகவல் வரும் 

பிரதமர் மோடி.

🎀🎀தமிழகத்தில் முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் Dr.செந்திலுக்கு செலுத்தப்பட்டது.

🎀🎀உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றியாளர்கள்

12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கண்ணனுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது!

9 காளைகளை பிடித்த  கருப்பணன் இரண்டாம் பரிசை தட்டிச்சென்றார்                                            8 காளைகளை பிடித்த சக்தி என்பவருக்கு 3வது பரிசு வழங்கப்பட்டது!

குருவித்துறையை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளைக்கு கார் பரிசளிக்கப்பட்டது!

719 காளைகள் வாடிவாசலில்  இருந்து சீறிப்பாய்ந்தன 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்!

ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்ற 52 வீரர்கள் காயமடைந்தனர்

🎀🎀கொரோனா தடுப்பூசி போடும் இந்த மிகப்பெரிய திட்டத்தை அறிமுகம் செய்ததற்கு இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் தரப்பில் ட்விட்டர் பதிவில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🎀🎀தடுப்பூசி போடும் முன்  ஒப்புதல் படிவம் சொல்வது என்ன?

👉மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்  கோவாக்சின் செலுத்தப்பட்ட நபருக்கு ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது!

தடுப்பூசி பெறுபவர்கள் கையெழுத்திடப்பட வேண்டிய ஒப்புதல் படிவத்தில், "ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் அல்லது கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை  வழங்கப்படும்" என்று பாரத் பயோடெக் கூறியுள்ளது!

தடுப்பூசி காரணமாக பக்க விளைவு ஏற்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை பாரத் பயோடெக் (Bharat BioTech) நிறுவனம் செலுத்தும் ”என்று ஒப்புதல் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🎀🎀டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார் (300) நடராஜன்.

ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அறிமுகம் கண்ட முதல் இந்தியவீரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

🎀🎀தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு - 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் கமல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி

🎀🎀பிப்ரவரி 8 முதல் புதிய தனியுரிமை கொள்கையை நடைமுறை படுத்த இருந்த WhatsApp மே மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு - உலகளவில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தள்ளிவைப்பு.

🎀🎀சென்னையில் உள்ள இரண்டு முக்கிய தனியார் மருத்துவமனையின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், 2 அரசு மருத்துவமனை  முதல்வர்கள்  என்று 10 தலை சிறந்த மருத்துவர்கள் இன்று தடுப்பூசி  போட்டு கொள்கின்றனர்.

🎀🎀டாக்டர். பிரதாப் C ரெட்டி, சேர்மன்

அப்பல்லோ மருத்துவ குழுமம், 

அவர்களுக்கு நேற்று காலை 11-மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இடம்: அப்பல்லோ தடுப்பு மருந்து மையம்

🎀🎀மக்களுக்கு நம்பிக்கை வர தாமே தடுப்பூசியை போட்டுக்கொள்ளத் தயார் 

-அமைச்சர் விஜயபாஸ்கர்

🎀🎀ஒரு நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் இணைந்ததால் வெளிச்சந்தையில் 4 ஆயிரத்து 813 கோடி ரூபாய் கடன் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

🎀🎀கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள்:

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.

முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின்போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.   கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது. 

நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடக்கூடாது.

🎀🎀விண்ணப்ப படிவம்

Covaxin இன்னும் பரிசோதனையில் உள்ளன என்பதை நான் அறிவேன். 

இது கொரோனாவுக்கு  எதிராக பாதுகாப்பு தரும் என ஆய்வு முடிவுகள் வரவில்லை என தெரியும். 

தெரிந்து தான் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன்.

covaxin போட்டு கொள்பவர்கள் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும்.

🎀🎀முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான அத்தனை செலவையும் மத்திய அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி  அறிவிப்பு

🎀🎀நாட்டில் உள்ள அனைத்து முன்கள மற்றும் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்கள் தடுப்பூசியை நிச்சயம் பெறுவார்கள். 

- நரேந்திர மோடி

🎀🎀கொரோனா தடுப்பூசி பிரதமரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி 

தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும் - முதலமைச்சர்

🎀🎀சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் CEO, அடார் பூனவல்லா தனது நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட COVISHEILD தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

🎀🎀பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்ட 11 சிறந்த மருத்துவர்கள்

🎀🎀விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவிற்கு பார்த்து கொள்ள முயற்சி செய்வேன் 

- மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

🎀🎀தமிழகத்தில் ராகுலுக்கு அதிக ஆதரவு

பிரதமர் மோடி - ராகுல் காந்தி

இடையிலான போட்டியில் ராகுலை அதிகம் ஆதரிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்

முதலிடம்; தமிழகத்தில் 48.26% பேர் ராகுலுக்கும், 26.62% பேர் மோடிக்கும் ஆதரவு

சி-ஓட்டர் & IANS செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

🎀🎀தமிழகத்தில் கோவிட் 19 தடுப்பூசி முதல்நாளான நேற்று 2,783 பேருக்கு செலுத்தப்பட்டதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

🎀🎀Netflix, Hotstar உள்ளிட்ட OTT தளங்களுக்கும், ஆன்லைன் செய்தி வலைதளங்களுக்கும் சுய  கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டம் 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...