கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மாணவி ஓடும் ரெயிலில் விபரீத சாகசம் - பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு (School girl Tragic Adventure on a moving train - Passengers shocked incident)…



>>> பள்ளி மாணவி ஓடும் ரெயிலில் விபரீத சாகசம் - பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய காணொளி (School girl Tragic Adventure on a moving train - Passengers shocked - Video)… 


 மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த விபரீத சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ரயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


கவரப்பேட்டையில் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரயிலில் ஏறுகின்றாள். பின்னர் அதே வேகத்தில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சக பள்ளி மாணவருடன் சேர்ந்து பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.


திருவள்ளூர் கவரப்பேட்டையில் மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவி விபரீதமாக பயணம் செய்யும் இக்காட்சி பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


>>> ஓடும் ரயிலில் அபாயகரமான சாகசம் - வீடியோ வைரலாக பரவிய நிலையில், இருவரையும் மாவட்ட எஸ்.பி. நேரில் அழைத்து அட்வைஸ்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...