கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (06-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (06-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 06, 2023




மனதில் நினைத்த பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 06, 2023




வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வெளியூரிலிருந்து வரும் மகிழ்ச்சியான செய்திகள் திருப்தியை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகளின் மூலம் விரயம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : தனவரவு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : விரயம் ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 06, 2023




செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஓய்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மிருகசீரிஷம் : மந்தத்தன்மை உண்டாகும்.


திருவாதிரை : விவேகம் வேண்டும்.

 

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 06, 2023




வியாபாரம் தொடர்பான பணிகளில் தனலாபம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உடலில் இருந்துவந்த சில வலிகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : செல்வாக்கு உயரும்.

 

பூசம் : தீர்வு கிடைக்கும்.


ஆயில்யம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 06, 2023




குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கணினி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் மூலம் மேன்மை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




மகம் : மதிப்பு அதிகரிக்கும்.

 

பூரம் : கவலைகள் நீங்கும்.

 

உத்திரம் : மேன்மையான நாள்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 06, 2023




அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனையால் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தயக்கமும், காலதாமதமும் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.


சித்திரை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 06, 2023




கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களிடம் கைமாறாக வாங்கிய பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். அரசு பணிகளில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விற்பனை சார்ந்த பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : அறிமுகம் ஏற்படும்.


விசாகம் : போட்டிகள் அதிகரிக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 06, 2023




தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பும், பணியும் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மரியாதை காலதாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் வீண் அலைச்சல்களும், விரயமும் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : பொறுப்புகள் அதிகாரிக்கும்.


அனுஷம் : விரயம் ஏற்படும்.

 

கேட்டை : விவேகம் வேண்டும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 06, 2023




நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.  பூர்வீக சொத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : பிரச்சனைகள் குறையும்.

 

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 06, 2023




பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். அறிமுகம் இல்லாத எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் செயல்படவும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத வகையில் தனவரவு கிடைக்கும். மனை தொடர்பான வில்லங்கம் விலகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் உதவி கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

 

திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 06, 2023




பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை ஏற்படும். எதிர்பாராத சில நெருக்கடிகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

 

சதயம் : ஒத்துழைப்பு மேம்படும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 06, 2023




கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபார பணிகளில் பொருளாதார உயர்வு ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தாராளமான தனவரவு உண்டாகும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : உயர்வு ஏற்படும்.


உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.

 

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்:மருந்து கு...