கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளை (08-05-2023) வெளியாகும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : இணையதள முகவரிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது அரசு தேர்வுகள் துறை(+2 exam results to be released tomorrow (08-05-2023): Department of Government Examinations has issued a notification regarding website addresses)...


நாளை (08-05-2023) வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : இணையதள முகவரிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது அரசு தேர்வுகள் துறை(+2 exam results to be released tomorrow (08-05-2023): Department of Government Examinations has issued a notification regarding website addresses)...


TamilNadu 12th Result 2023: தேர்வு முடிவுகளை 

www.dge.tn.gov.in

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in 

என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.


மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு 4,33,000 மாணவிகளும் 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் பொதுத் தேர்வினை எழுதினர்.


8.50 லட்சம் மாணவர்கள். பங்கேற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றது. அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி முடிவுகளை நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.


முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.


மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மேலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...