அரசாணை (1டி) எண்.547 , நாள். 28.10.2026 - தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
G.O. (1D) No.547 , Dated : 28-10-2026 - தீபாவளிக்கு அடுத்த நாள் 09-11-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Government Order (1D) No. 547, Dated 28.10.2026 - Declaration of a local holiday for all government offices, public sector undertakings, schools, colleges, and all educational institutions across Tamil Nadu on Monday, 09.11.2026 (the day following Deepavali)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த நாளான 09.11.2026 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) பணிநாளாகச் செயல்படும்.
அவசரப் பணிகளுக்காக மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் இயங்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
பொது (பல்வகை)த் துறை
அரசாணை (1டி) எண்.547 , நாள். 28.10.2026
பராபவ வருடம், ஐப்பசி-11 திருவள்ளுவர் ஆண்டு-2057
படிக்க:-
1. அரசாணை (நிலை) எண்.154, பொது(பல்வகை)த் துறை, நாள்: 03.09.2009.
2. அரசு கடித எண்.8585/பல்வகை/2013-7. பொது (பல்வகை)த் துறை. நாள்: 21.02.2014.
3. அரசாணை (நிலை) எண்.581. பொது(பல்வகை)த் துறை, நாள் 17.10.2025.
4. பலதரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்.
-
இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது, செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)- இன் கீழ் வரவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
எ. சுந்தரவல்லி
அரசு செயலாளர்
பெறுநர்
அனைத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள்/
முதன்மைச் செயலாளர்கள்/ செயலாளர்கள், தலைமைச் செயலகம்.
சென்னை-9
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள்.
அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள்.
முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலகம், சென்னை-9.
தனி அலுவலர். முதலமைச்சரின் தனிப்பிரிவு, சென்னை-9.
இயக்குநர். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9.
நகல்
உதிரி/இருப்பு கோப்பு.
//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது//
பிரிவு அலுவலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.