கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்ற அமைச்சர் - காலை உணவு திட்டம் குறித்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...


 காலை 8 மணிக்கே பள்ளிக்கு சென்ற  அமைச்சர் - காலை உணவு திட்டம் குறித்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



 ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்ற  அமைச்சர் - தனியாளாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 

———————————————————————————————————

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் இன்று பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 


இன்று (12-09-2024) காலை 8 மணிக்கே பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார்.


 ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராத காரணத்தால் தனியாளாக பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.


 காலை உணவு பணியாளர் திருமதி துர்கா மட்டுமே அப்போது பள்ளியில் இருந்த காரணத்தால், அவர் மட்டுமே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார்.


காலை உணவுத் திட்டத்தில் எத்தனை மாணவர்கள் சாப்பிடுகின்றார்கள்? பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு? பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் அப்போது வந்திருந்த ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்களிடம் கற்றல் குறித்து ஆய்வு செய்வதற்காக திருக்குறள், தமிழ்-ஆங்கில எழுத்துகளை சொல்ல சொல்லி ஆய்வு செய்தார் மாண்புமிகு அமைச்சர் திரு அன்பில் மகேஸ் அவர்கள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...