கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், 12ஆம் வகுப்பு படிக்கும் மகளை அடித்தே கொன்ற தந்தை கைது

 


நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், 12ம் வகுப்பு படிக்கும் மகளை அடித்தே கொன்ற தந்தை தொண்டிராம் பகவான் கைது


இவர் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்துள்ளார் 10ம் வகுப்பில் 92% மதிப்பெண்கள் பெற்ற தனது மகளின் மருத்துவக் கனவு சிதைந்துவிட்டதாக தாய் வேதனை. 


மஹாராஷ்டிராவில், 'நீட்' மாதிரித்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிளஸ் - 2 மாணவியை, தந்தையே பிரம்பால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தின் அட்பாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தொண்டிராம் பகவான் போன்ஷ்லே, 50. இவரது மனைவி ப்ரீத்தி.



இந்த தம்பதியின் மகள் சாதனா, வயது 17. பத்தாம் வகுப்பில், 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று தற்போது பிளஸ் - 2 படித்து வந்தார். இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேர விரும்பி NEET தேர்வுக்கு தயாரானார்.


இதையடுத்து, கடந்த 20ஆம் தேதி நடந்த நீட் மாதிரித்தேர்வில் சாதனா குறைந்த மதிப்பெண் எடுத்ததால், அவரை தந்தை தொண்டிராம் பகவான் போன்ஷ்லே பிரம்பால் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சாதனாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.





அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாதனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாய் ப்ரீத்தி புகார் அளித்ததை அடுத்து, தந்தை தொண்டிராம் பகவான் போன்ஷ்லேவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - Quarterly exam - QP Download schedule

  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை Middle, High &...