கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - அதிர்ச்சி சம்பவம்



 ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்


தற்கொலை தடுக்க அழையுங்கள்

மாநில அரசின் உதவி எண், 104,  டெலி மனசு எண், 14416 ஆகிய எண்களில் உதவி பெறலாம்.


உயிரை மாய்த்துக் கொண்ட சுப்பிரமணி திருச்சி RTO-வாகவும், அவரது மனைவி பிரமிளா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.


கடன் தொல்லை காரணமாக இம்முடிவை எடுத்ததாகவும், தங்களது மகள் வேறு சமுதாய இளைஞரை காதலித்ததால் விபரீத முடிவு எனவும் வேறுபட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், திருச்சியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, நாமக்கல் ஆண்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.



இந்தத் தம்பதியின் மகன் மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மேலும், மகள் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்துள்ளார். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திருச்சியில் பணியாற்றி வந்த சுப்பிரமணி நாமக்கல் வந்துள்ளார்.


இந்த நிலையில், அதிகாலையில் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு தம்பதி இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கரூர் ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அரசு ஊழியர்களான இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியின் மகள், பெற்றோரின் எதிர்ப்பை மீறி அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



 இதன் காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்த சுப்பிரமணி - பிரமிளா தம்பதி விபரீத முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-08-2025

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-08-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்