கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்குள் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு, 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு



மாணவர்களுக்குள் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு, 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், +1 மாணவர்கள் தாக்கியதில் +2 மாணவர் காயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 6, 2025) உயிரிழந்தார்;  மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 போலீசார் 15 மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். 


+1 மாணவர்கள் +2 மாணவரை கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்தது.


 காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.


 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


இந்தச் சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் வன்முறை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. 


இச்சம்பவம் குறித்த தகவல்

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.


திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூரைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும், இதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.


இந்நிலையில், கடந்த புதன்கிழமை 12-ஆம் வகுப்பு மாணவா் சக மாணவா்களுடன் மதிய உணவு நேரத்தில் கழிவறைக்குச் செல்லும்போது 11-ஆம் வகுப்பு மாணவா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு 12-ஆம் வகுப்பு மாணவா் பட்டீஸ்வரம் கோயில் அருகே தேரடி கீழவீதியில் சென்றுகொண்டிருந்தபோது 11-ஆம் வகுப்பு மாணவா்கள் அவரை வழிமறித்து மரக்கட்டையால் தாக்கியுள்ளனர்.


இதில் தலையில் பலத்த காயமடைந்த 12-ஆம் வகுப்பு மாணவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா்.


தகவலறிந்த கும்பகோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளா் அங்கிட்சிங் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், பட்டீசுவரம் போலீஸாா் 12-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை அவா்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.


இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார்.


Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு

  ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு....