கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Self-Defense Training Lessons | Implementation Guidelines | SPD Proceedings



2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி பாடங்கள் & வழங்குவதற்குரிய நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Self-Defense Training Lessons & Implementation Guidelines – Proceedings of the State Project Director


மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


மாநிலத் திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -6


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


செ.மு. எண். 1741/A1/self defense/SS/2026 , நாள்: 24.06.2026


பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குவதற்குரிய நெறிமுறைகள் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் சார்பு. வழிகாட்டுதல்


பள்ளி மாணவிகள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு மாணவியரின் உடல் வலிமையையும், மன உறுதியையும் மேம்படுத்தவும், ஆபத்தான நேரங்களில் தற்காத்துக் கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கராத்தே,ஜுடோ, டேக்வேண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக்கலைப் பயிற்சிகளை பள்ளி அளவில் மாணவிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், அவர்களது பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் அச்சமின்றி சமூகத்தில் முன்னேறவும் வழிவகுக்கிறது.


அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் 3 மாதங்கள் தற்காப்புகலைப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தற்காப்புக்கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்கு ரூ.12,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்டங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் இணைப்பு யில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குரிய நிதி மாவட்ட வாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது.


தற்காப்புக் கலை பயிற்சிகளை நடத்திடத் தேவையான நெறிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...