கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சம்பாதிக்கும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு



சம்பாதிக்கும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 


கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண் ஜீவனாம்சம் கோரமுடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


மனைவியை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது.


கணவன் மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


இந்த வழக்கு குறித்த முழுமையான விவரம்


கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர்கள் ஜீவன் மற்றும் சஹானா தேவி. இருவருக்கும் கடந்த 2024- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர். இதையடுத்து மனைவி சஹானா தேவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.


கீழமை நீதிமன்ற உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.


உயர்நீதிமன்ற விசாரணை

இந்த உத்தரவை எதிர்த்து ஜீவன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர். சில்லக்கூர் சுமலதா, இருவரின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.


நீதிமன்றக் கருத்து

கணவரின் மாத வருமானம் ரூ. 60,646 ஆகவும், மனைவியின் மாத வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தது. மனைவிக்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு உள்ளிட்ட பிற பெரிய நிதிச் சுமைகளும் இல்லை.


எனவே, பொருளாதார ரீதியாகத் தன்னைத் தானே நிர்வகித்துக் கொள்ளும் திறன் படைத்த பெண், தன்னை விடக் குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று நீதிபதி தெரிவித்தார்.


மேலும், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ரூ. 20,000 ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.


ஜீவனாம்சம் என்பது பாலின அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்றும், அது பிரிந்து வாழும் தம்பதியரில் போதிய வருமானம் இல்லாதவருக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் நோக்கம் கொண்டதாகும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...