கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. A.P.J. Abdul Kalam’s birthday as "Youth Awakening Day" (15.10.2026) – DSE Proceedings



டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் "இளைஞர் எழுச்சி நாள்" (15.10.2026) மாநில அளவில் நடத்துதல் - DSE Proceedings


State-level celebration of Dr. A.P.J. Abdul Kalam’s birthday as "Youth Awakening Day" (15.10.2026) – DSE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (நா.ந.ப) செயல்முறைகள், சென்னை 6.


ந. க. எண். 050157/எம்2/இ2/2026, நாள் : 14.10.2026.


பொருள் :


பள்ளிக்கல்வி - முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு.டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் "இளைஞர் எழுச்சி நாள்" (15.10.2026) மாநில அளவில் நடத்துதல் - சார்பு


பார்வை 1. அரசாணை (நிலை) எண். 34, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நாள். 03.08.2015.


2. சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.ந.க.எண்.062232/எம்2/இ2/2025. फ्रन 18.09.2025.


3. சென்னை-06. தமிழ்நாடு செயல்முறைகள்.ந.க.எண்.062232/எம்2/இ2/2025, फ्रानी.14.10.2025. பள்ளிக் கல்வி இயக்குநரின்


4 சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,ந.க.எண்.050157/எம்2/இ2/2026, फ्रानो . 10.09.2026.


பார்வை-01ல் காணும் அரசாணையின்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர், மேதகு. டாக்டர். A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக" கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்திடவும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும்" இளைஞர் எழுச்சி நாளான" அக்டோபர் 15 அன்று மாவட்ட அளவில் உயர்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு "இளைஞர் விழிப்புணர்வு பேரணி" நடத்திடவும். பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு.டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் தலைமையாசிரியர் /ஆசிரியர் / உள்ளூர் வல்லுநர் (Local resource person) வாயிலாக சொற்பொழுவு ஆற்றிடவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும், பார்வை-04ல் காணும் செயல்முறைகளில் செப்டம்பர் மாதம் முதலே மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை 6-8, 9-10 மற்றும் 11-12 வகுப்பு மாணவர்களை தனிக்குழுக்களாக பிரித்து மாவட்ட அளவில் கண்காட்சியினை நடத்தி ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெற்ற மூன்று


மாணவர்களை தெரிவு செய்து அக்டோபர் மாதம் 10-ம் தேதிக்குள் இவ்வியக்கக எம்2 பிரிவின் dsem2section@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு காலதாமதமின்றி அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது


தற்போது மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி இராணிப்பேட்டை மாவட்டத்தில் 29-10-2026 அன்று நடைபெறும் எனவும், நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணை இயக்குநர் (NSS)


14/10/26


பெறுநர்


முதன்மைக் கல்வி அலுவலர்கள்,


அனைத்து மாவட்டங்கள்.


நகல்


1. அரசு செயலாளர்.


பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-09


(தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)


2. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்,


பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை-06.


3. இயக்குநர், தனியார் பள்ளிகள்.


பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை-06



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. A.P.J. Abdul Kalam’s birthday as "Youth Awakening Day" (15.10.2026) – DSE Proceedings

டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் "இளைஞர் எழுச்சி நாள்" (15.10.2026) மாநில அளவில் நடத்துதல் - DSE Procee...