ஆண்டு சம்பள உயர்வு நமூனா
Annual Increment Format
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Personnel and Administrative Reforms (FR-I) Department, Secretariat, Chennai — 600 009. ,
Letter No.784/FR-I/2019 - 1, dated 04.03.2019
From
Tmt.S. Swarna, I.A.S.,
Secretary to Government.
To
All Secretaries to Government, Chennai — 600 009.
All Departments of Secretariat, Chennai — 600 009.
All Heads of Departments including District Collectors / District Judges.
The Secretary, Tamil Nadu Public Service Commission, Chennai — 600 003.
The Accountant General (I/II), Chennai — 600 018. The Accountant General, Chennai — 600 009/35.
The Director of Treasuries & Accounts, Chennai — 600 035.
The Pay and Accounts Officer. Secretariat, Chennai — 600 009.
The Pay and Accounts Officer (North/East/South), Chennai
The Registrar, High Court. Chennai — 600 104.
Sir,
Sub: Fundamental Rules — Rulings 13 (ix) under Fundamental Rules 26 (a) as amended in G.O.Ms.No.148, Personnel and Administrative Reforms (FR-II) Department, dated 31.10.2018 — Clarification — Issued.
Ref: G.O.Ms.No.148, Personnel and Administrative Reforms (FR-II) Department, dated 31.10.2018.
In the Government Order cited, amendment has been issued to ruling 13 (ix) under Fundamental Rules 26 (a) that the increment of a Government Servant which falls due in a quarter may be sanctioned on the first day of that quarter even though he retires from services or expires prior to the actual date of accrual of increment.
2) In this connection, the following Clarification is issued to the Government Order cited above:-The above ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter.
ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)...
அனுப்புநர்:
பெறுநர்:
வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள்,
வட்டாரக் கல்வி அலுவலகம்,
------------ ஒன்றியம்.
வழி :
தலைமையாசிரியர் அவர்கள்,
--------------------------------
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
பொருள்: ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிட வேண்டுதல் - தொடர்பாக
வணக்கம். அரசாணை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021- ல் Creation of additional cells in Pay level என Pay matrix level நீட்டிப்பு செய்தும் Levels of pay திருத்தியமைக்கப்பட்டும் வெளிவந்த பின்னரும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு என சொல்லப்பட்டு வந்ததால், இதுபற்றி தெளிவுபெற பெறப்பட்ட RTI தகவலில், ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை எண். 90 நிதி(ஊ.பி)த்துறை நாள்: 26.2.21 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை 10 - ல் தளம் 40 - ஐ (ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை எண்: 303 நிதித்துறை நாள்: 11.10.2017 - ன் schedule 1 மற்றும் III, அரசாணை எண். 90 நிதித்துறை, நாள்: 26.2.2021 ன் மூலம் மாற்றியமைக்கப்பட்டு ( substituted ) உள்ளதால், அதனைப் பரிசீலித்து அதனடிப்படையில் எனக்கு ஆண்டு ஊதிய உயர்வை ஆண்டுதோறும் வழங்கிட வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள
----------------------------
நாள்:
இடம்:
இணைப்பு:
1. RTI தகவல் கடித எண்.19861 / நிதி(சிஎம்பிசி)த்துறை, 2022 / நாள் : 05.05.2022
தகவல் அறியும் உரிமை சட்டம் ( RTI ) மூலம் பெறப்பட்ட தகவல்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10-ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
ஆண்டு ஊதிய உயர்வுக்கு முந்தைய நாள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - G.O.(Ms).No.98, Dated: September 21, 2021...
Fundamental Rules - Grant of notional increment to Government servants who retire on superannuation on the preceding day of due date for annual increment - Amendment to Fundamental Rules - Orders - issued.
இது ஓய்வூதிய பலனுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். 31.12.2014 முதல் அமல்படுத்தப்படுகிறது.
>>> Click here to Download G.O.(Ms).No: 98, Dated : 21-09-2021...
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்
(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)
(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)
(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)
(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...