கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Press Note லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Press Note லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு "தொடர்ந்து கற்போம்" திட்டத்தின் மூலம் 13-05-2024 முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...

4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு (Half-yearly examination will be held as scheduled in all districts except 4 districts - Press release from Director of School Education)...

>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

செய்திக்குறிப்பு

➖➖➖➖➖➖➖➖➖

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வி இயக்ககம்

➖➖➖➖➖➖➖➖

2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...

>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> 2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு...

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...

>>> பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இதுவரை CPS திட்டத்தின் கீழ் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள மொத்த வைப்பு தொகை எவ்வளவு? - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகவல் - இணைப்பு : தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு எண்: 53, நாள்: 01-06-2022 வெளியீடு (What is the total amount of deposits that have been received from employees under the CPS scheme so far? - Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan Information - Attachment: Government of Tamil Nadu Press Note No: 53, Date: 01-06-2022)...

>>> இதுவரை CPS திட்டத்தின் கீழ் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள மொத்த வைப்பு தொகை எவ்வளவு? - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகவல் - இணைப்பு : தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு எண்: 53, நாள்: 01-06-2022 வெளியீடு (What is the total amount of deposits that have been received from employees under the CPS scheme so far? - Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan Information - Attachment: Government of Tamil Nadu Press Note No: 53, Date: 01-06-2022)...

அரசின் நூறாவது நாள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை - செய்திக் குறிப்பு(Press Note) எண்:47, நாள்:14-08-2021...

சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை:

ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது; முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான் கேட்டது, அந்த சத்தம் நிம்மதியாக இருக்கவிடவில்லை, லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அரவணைப்பாக இருந்ததும்தான் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

100 நாள் ஆட்சியில் சிறந்த பெயரை பெற்றுள்ளோம்; அதனை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும்; திமுக ஆட்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது.

வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என ஏமாற்ற தயாரில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம்.

வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்து வரும் நாட்களில் 2 மடங்காக உழைப்போம்- சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

>>> அரசின் நூறாவது நாள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை - செய்திக் குறிப்பு எண்:47, நாள்:14-08-2021...

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...

>>> செய்திக்குறிப்பு எண்: 27, நாள்: 04-07-2021...

பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலமும் அளிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு...

 பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலமும் அளிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு...

பதிவுத்துறை செய்திக் குறிப்பு 

நாள் : 16.06.2021

 மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க பதிவுத்துறையில் , பொதுமக்களிடமிருந்து புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு , கட்டுப்பாட்டு அறை இன்று 16.06.2021 முதல் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 

 இக்கட்டுப்பாட்டு அறையில் வாயிலாக புகார்களை பெற ஏதுவாக பொதுமக்களிடமிருந்து தொலைபேசி 

9498452110, 

9498452120, 

9498452130 

 ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Whatsapp மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் igrregpetitioncell_2021@tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...