கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Extension லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Extension லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும்

 பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும் 

சமூக வலைதளங்களில் இத்தகவல் டிரெண்ட் ஆன நிலையில் கல்வி அமைச்சர் அமெரிக்காவில் இருந்து உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதின் படி 02/07/2026 அன்று மறு நியமன பணி ஆணை பெற்று பணியில் தொடர்கிறார்.





பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மறு நியமனம் மறுக்கப்பட்ட தி.மாரிமுத்து (யூமா வாசுகி) என்னும் கலை ஆசிரியரின் வேண்டுகோள்



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மறு நியமனம் மறுக்கப்பட்ட தி.மாரிமுத்து (யூமா வாசுகி) என்னும் கலை ஆசிரியரின் வேண்டுகோள்

--------------------------------

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் Raj Mohan அவர்களுக்கு வணக்கம். 

என் பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி எனும் பெயரில் எழுதி வருகிறேன். கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில் ஐந்தாண்டு பட்டயப் படிப்பாக ஓவியம் பயின்றேன்.


மொழிபெயர்ப்புக்காகவும் சிறார் இலக்கியத்திற்காகவும் இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருதும் ஐந்துமுறை தமிழ்நாடு அரசு விருதும் பெற்றிருக்கிறேன். மூன்று சிறார் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறேன். முப்பது ஆண்டுகளாக பத்திரிகை பதிப்பகம் சார்ந்து செயல்பட்டு வருகிறேன். 


சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதி, செண்டங்காடு (பட்டுக்கோட்டை வட்டம்) அரசு உயர்நிலைப் பள்ளியில் 25/11/2019 அன்று ஓவிய ஆசிரியராக (சிறப்பாசியராக) பணியில் இணைந்தேன். 30/06/26ல் எனக்குப் பணி ஓய்வு. ஆயினும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால் அடுத்த கல்வியாண்டுவரை (பத்து மாதங்கள்) பணியாற்றலாம் என்பது அரசு விதி. 


எனவே, 05/06/26 அன்று மறு நியமனத்துக்காக, பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். தஞ்சை CEO விடுப்பில் இருக்கிறார். எனவே திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியா தஞ்சைக்கு பொறுப்பு CEO ஆக இருக்கிறார். 


இதில் இனைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை நேற்று திருமதி சுகப்பிரியா என் பள்ளி மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கிறார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து, பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்திடக் கோரினார். நான் அவகாசம் கேட்டு பள்ளியிலிருந்து வெளியேறினேன். 


பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிப்படைய மாட்டார்கள் என்று சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார். மறு நியமனம் என்பது என்போன்ற அரசுப் பள்ளி கலையாசிரியர்களின் உரிமை. இதை திருமதி சுகப்பிரியா துச்சமாகப் புறக்கணிக்கிறார். 


நான் நூலகப் பாடவேளையும் ஓவியப் பாடவேளையும் சேர்த்துதான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பார்த்து வருகிறேன். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 81. நான் பணியில் சேரும்போதே நூறுக்கும் குறைவான மாணவர்கள்தான் இருந்தார்கள். 


நான் இது குறித்து சென்னையில் உள்ள கல்வித்துறை சார்ந்த அதிகாரியிடம் பேசினேன். அவரும் அவரது உயர் அதிகாரியும் திருமதி சுகப்பிரியாவிடம், "இதை நீங்கள் மறுக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கான மறு நியமனம் என்பது அரசு நடைமுறைதான்" என்று மிகவும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். 


ஆனால் திருமதி திருவாரூர் CEO சுகப்பிரியா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். 


"நான் எந்த சிறப்பாசிரியருக்கும் மறு நியமனம் கொடுத்ததில்லை. செண்டங்காடு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஓவிய ஆசிரியர் பற்றி கருத்து கேட்டுவிட்டுதான் முடிவெடுத்தேன்" என்று திருமதி சுகப்பிரியா சொல்லியிருக்கிறார். 


ஒன்று, கலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது மறு நியமனம் என்பது மிக எளிய நடைமுறை. இதை திருமதி சுகப்பிரியா எதேச்சாதிகாரமாக மறுக்கிறார். 

இரண்டு, பள்ளியில் என் செயல்பாடு சரியில்லை என்றது என் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய பழிச்சொல். திருமதி சுகப்பிரியா எனக்கு இழைத்த கொடும் அவமானம். 


நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். எவர் வேண்டுமானாலும் என் பள்ளியின் ஒவ்வொரு மாணவரிடத்திலும் என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 


தலைமை ஆசிரியரிடம்,"பள்ளியில் என் செயல்பாடுகள் சரியில்லை என்று திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியாவிடம் சொன்னீர்களா?" என்று கேட்டேன். நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. என் போனை வேண்டுமாலும் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளலாம்" என்று அவர் சொன்னார். 


இத்தனைக்கும் தலைமை ஆசிரியரும் நானும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மறு நியமனத்துக்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்ததே அவர்தானே!

அப்படியென்றால் திருமதி சுகப்பிரியா பொய் சொல்கிறாரா? 


கல்வித்துறை அதிகாரி, மறு நியமனம் கோரியும் இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டும் திருமதி சுகப்பிரியா மீது வழக்குத் தொடுங்கள் என்று ஆலோசனை சொன்னார். வழக்கு நடத்தும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. 


நான் மொத்தம் ஆறு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் மட்டுமே பள்ளியில் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கான மறு நியமனத்தை திருமதி சுகப்பிரியா மறுப்பது முறைகேடு. 


நான் பிழைப்புக்காக இதைக் கேட்கவில்லை. என் உரிமை அபகரிக்கப்படுவது, சர்வாதிகாரமாக உதாசீனப்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது. 

ஓவிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, கலையாசியர்கள் மீதான திருமதி சுகப்பிரியாவின்  அலட்சியத்தையே காட்டுகிறது. 


ஓவிய, நூலக ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்றால் காலங்காலமாக அரசுப் பள்ளிகளில் ஏன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. 

இந்த விஷயத்தில் மௌனமாக இருந்தால், எனக்குப் பின் ஓய்வு பெறும் கலையாசிரியர்களும் மறு நியமனத்துக்குத் தகுதியற்றவர்களாகப் புறக்கணிக்கப்படுவார்கள் எனும்  அச்சமும் ஏற்படுகிறது. 


எனவே மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள், திருவாரூர் CEO  திருமதி சுகப்பிரியா எனக்கு அளித்த மறு நியமன நிராகரிப்பு ஆணையை ரத்து செய்து எனக்கு அடுத்த கல்வியாண்டுவரை பணிபுரிய உத்தரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 


இவண்

தி. மாரிமுத்து (யூமா வாசுகி)


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings

 


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings


Order denying re-appointment / extension of service to a retired teacher - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்(பொறுப்பு) செயல்முறைகள் 

பிறப்பிப்பவர்: திருமதி.அ.சுகப்பிரியா எம்.எஸ்.ஸி.,பி.எட்.எம்ஃபில்.,


மூ.மு.எண்.4001 / ஆ4/ 2026, நாள். 30.06.2026


பொருள்:


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - பணி ஓய்வு - பணி நீட்டிப்பு - தஞ்சாவூர் மாவட்டம். செண்டங்காடு, அரசு நீட்டிப்பு உயர்நிலைப்பள்ளி. ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு - 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.261. பள்ளிக்கல்வி (155(2)) துறைநாள்.20.12.2018.


2. அரசாணை (நிலை)எண்.115, பள்ளிக்கல்வித் (பக5(2)) துறைநாள்.28.06.2022.


3. அரசாணை (நிலை)எண்.151. பள்ளிக்கல்வித் (SE1 (1) துறைநாள்.09.09.2022.


4.அரசுக்கடிதஎண்: 3618/பக5(1)/2025 நாள்:30.05.2025.


5.செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரின் கடித ந.க.எண்:37/516/ 2026, நாள்: 05.06.2026.


தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் 01.07.2026 முதல் 2026 27 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணி நீடிப்பில் பணிபுரிய அனுமதி கோரி பார்வை (5) இல் கண்டுள்ள கடிதத்தில் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.


பார்வை 1-ல் காணும் அரசாணையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு கலை ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செண்டங்காடு. அரசு உயர்நிலைப்பள்ளியில் 01.08.2025 ஆசிரியர் நிர்ணயத்தின் படி 6 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும், 7 ஆம் வகுப்பில் 21 மாணவர்களும், 8 ஆம் வகுப்பில் 16 மாணவர்களும் ஆக கூடுதல் 52 மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மேலும் இன்றைய தேதியிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.


எனவே திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும், அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர்(பொ). தஞ்சாவூர்.


பெறுநர் :

சம்மந்தப்பட்ட ஆசிரியர் (உரியவழியாக)


நகல் :

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, செண்டங்காடு.


நகல் :

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தஞ்சாவூர்.




School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter


 பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் ஓய்வு - மறுநியமன காலத்திற்கான ஊதியம் நிர்ணயித்தல் - தெளிவுரை - கருவூல அலுவலர் கடிதம் ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024


School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை

அனுப்புநர்‌:

திருமதி ந.நாகராணி., பி.எஸ்‌.சி., 

கருவூல அலுவலர்‌ (மு.கூ.பொ.,)

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,

மாவட்டக்‌ கருவூலம்‌,


பெறுநர் 

ஆணையர், 

கருவூலம் மற்றும் கணக்கு துறை,

நிதித்துறை, ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவமனை வளாகம், 

அண்ணா சாலை, 

நந்தனம், 

சென்னை - 600035


ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024.


பொருள்‌: பள்ளிக்கல்வி - மறு நியமனம்‌ - அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு பணியாளர்கள்‌. - கல்வியாண்டின்‌ இடையில்‌ வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும்‌ நாள்‌ - மறுநியமன காலத்திற்குகான ஊதியம்‌ நிர்ணயித்தல்‌ - தக்க தெளிவுரை வேண்டி பணிந்தனுப்புதல்‌ - சார்பாக.


பார்வை: 1. அரசாணை என்‌. 16 (நிதித்துறை) நாள்‌: 28-01-2020


2. அரசாணை (நிலை) என்‌. 115 பள்ளிக்‌ கல்வித்‌(பக5(2)) துறை, நாள்‌: 28.06.2022.


3. Govt. Lr.No. 22851/Fin(Pension)/2018. Dt: 13.08.2018.


4. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, பதிவு எண்‌. 83/2022, சேலம்‌ மாவட்டம்‌, விண்ணப்பம்‌ நாள்‌: 30.09.2024.


*****


பார்வை 4-ல்‌ காணும்‌ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌ விண்ணப்ப கடிதத்தில்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ கல்வியாண்டின்‌ இடையில்‌, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும்‌ ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில்‌ கடைசி வேலை நாள்‌ வரை (Upto the end of Academic Session) மறுநியமனம்‌ வழங்கப்படுகிறது. அப்பணிக்காலத்திற்கான ஊதியம்‌ பங்களிப்பு ஒய்வூதியத்தில்‌ உள்ளோருக்கு பார்வை 2-ல்‌ குறிப்பிட்டுள்ள ஒய்வு பெறுவதற்கு முன்னர்‌ கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க வேண்டும்‌ என விண்ணப்பித்துள்ளனர்‌.


பார்வை 1-ல்‌ குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில்‌ ஒய்வுபெற்றவர்கள்‌ கடைசியாக பெற்ற ஊதியத்தில்‌ (அரசின்‌ பங்களிப்பு 10% -*- பணியாளர்‌ பங்களிப்பு 10%) பிடித்தம்‌ செய்து மீதமுள்ள தொகையை மறுநியமன கால ஊதியமாக நிர்ணயம்‌ செய்ய ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வலுவலகத்தில்‌ முன்னிலைபடுத்தப்பட்ட மறுநியமன ஊதியத்திற்கான பட்டியல்‌ அரசாணை 16 (நிதி) நாள்‌: 28.01.2020-ஐ சுட்டிகாட்டி தணிக்கை மேற்கொண்டு பட்டியல்‌ திருப்பப்பட்டது என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌..


இந்நேர்வில்‌ மறுநியமன கால ஊதியம்‌ அனுமதித்தல்‌ தொடர்பாக தக்க தெளிவுரை வழங்கிட வேண்டி இக்கடிதம்‌ பணிவுடன்‌ சமர்ப்பிக்கப்படுகிறது. 


கருவூல அலுவலர்‌,

மாவட்ட கருவூலம்‌, சேலம்‌.

நகல்‌:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, சேலம்‌ மாவட்டம்‌ அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. (திரு T.A. கமலக்கண்ணன், மாநிலச் செயலாளர், அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, எடப்பாடி, சேலம்‌ - 637105)


அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க 26.07.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Extension of time till 26.07.2023 to apply for transfer from unit to unit / department - Director of School Education Proceedings - Date of Counselling to be announced later)...


>>> அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க 26.07.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Extension of time till 26.07.2023 to apply for transfer from unit to unit / department - Director of School Education Proceedings - Date of Counselling to be announced later)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணிதப் பட்டதாரி ஆசிரியருக்கு (B.T. Assistant) மறு நியமனம் (Extension) வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Chief Education Officer Proceedings for Re-appointment of Maths Graduate Teacher in Coimbatore District)...


>>> கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணிதப் பட்டதாரி ஆசிரியருக்கு (B.T. Assistant) மறு நியமனம் (Extension) வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Chief Education Officer Proceedings for Re-appointment of Maths Graduate Teacher in Coimbatore District)...



>>> பணி நீட்டிப்புக் காலத்தில் ஆசிரியர் & தலைமையாசியர் பணி புரிவதற்கான கருத்துருப் படிவம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...



 ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு  - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...


CEOs, 

Teachers on completion of 60 years will continue to work till the end of academic session. GO will be issued soon. Please allow teachers to continue.


தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை :

60 வயது முடிந்து கல்வி ஆண்டு இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கிட உத்தரவு.


விரைவில் அரசாணை வரும் என்பதால் Superannuation தொடர அறிவுரை...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்