கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Re-appointment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Re-appointment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings

 


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings


Order denying re-appointment / extension of service to a retired teacher - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்(பொறுப்பு) செயல்முறைகள் 

பிறப்பிப்பவர்: திருமதி.அ.சுகப்பிரியா எம்.எஸ்.ஸி.,பி.எட்.எம்ஃபில்.,


மூ.மு.எண்.4001 / ஆ4/ 2026, நாள். 30.06.2026


பொருள்:


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - பணி ஓய்வு - பணி நீட்டிப்பு - தஞ்சாவூர் மாவட்டம். செண்டங்காடு, அரசு நீட்டிப்பு உயர்நிலைப்பள்ளி. ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு - 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.261. பள்ளிக்கல்வி (155(2)) துறைநாள்.20.12.2018.


2. அரசாணை (நிலை)எண்.115, பள்ளிக்கல்வித் (பக5(2)) துறைநாள்.28.06.2022.


3. அரசாணை (நிலை)எண்.151. பள்ளிக்கல்வித் (SE1 (1) துறைநாள்.09.09.2022.


4.அரசுக்கடிதஎண்: 3618/பக5(1)/2025 நாள்:30.05.2025.


5.செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரின் கடித ந.க.எண்:37/516/ 2026, நாள்: 05.06.2026.


தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் 01.07.2026 முதல் 2026 27 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணி நீடிப்பில் பணிபுரிய அனுமதி கோரி பார்வை (5) இல் கண்டுள்ள கடிதத்தில் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.


பார்வை 1-ல் காணும் அரசாணையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு கலை ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செண்டங்காடு. அரசு உயர்நிலைப்பள்ளியில் 01.08.2025 ஆசிரியர் நிர்ணயத்தின் படி 6 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும், 7 ஆம் வகுப்பில் 21 மாணவர்களும், 8 ஆம் வகுப்பில் 16 மாணவர்களும் ஆக கூடுதல் 52 மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மேலும் இன்றைய தேதியிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.


எனவே திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும், அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர்(பொ). தஞ்சாவூர்.


பெறுநர் :

சம்மந்தப்பட்ட ஆசிரியர் (உரியவழியாக)


நகல் :

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, செண்டங்காடு.


நகல் :

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தஞ்சாவூர்.




CPSல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம்


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம், நாள் : 08-04-2025


Re-appointment Pay Fixation to CPS Scheme Teachers


Teachers retiring under the Contributory Pension Scheme - Fixation of pay for the period of reappointment - Clarification - Letter from the Joint Director, Treasury and Accounts Department, Date: 08-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter


 பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் ஓய்வு - மறுநியமன காலத்திற்கான ஊதியம் நிர்ணயித்தல் - தெளிவுரை - கருவூல அலுவலர் கடிதம் ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024


School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை

அனுப்புநர்‌:

திருமதி ந.நாகராணி., பி.எஸ்‌.சி., 

கருவூல அலுவலர்‌ (மு.கூ.பொ.,)

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,

மாவட்டக்‌ கருவூலம்‌,


பெறுநர் 

ஆணையர், 

கருவூலம் மற்றும் கணக்கு துறை,

நிதித்துறை, ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவமனை வளாகம், 

அண்ணா சாலை, 

நந்தனம், 

சென்னை - 600035


ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024.


பொருள்‌: பள்ளிக்கல்வி - மறு நியமனம்‌ - அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு பணியாளர்கள்‌. - கல்வியாண்டின்‌ இடையில்‌ வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும்‌ நாள்‌ - மறுநியமன காலத்திற்குகான ஊதியம்‌ நிர்ணயித்தல்‌ - தக்க தெளிவுரை வேண்டி பணிந்தனுப்புதல்‌ - சார்பாக.


பார்வை: 1. அரசாணை என்‌. 16 (நிதித்துறை) நாள்‌: 28-01-2020


2. அரசாணை (நிலை) என்‌. 115 பள்ளிக்‌ கல்வித்‌(பக5(2)) துறை, நாள்‌: 28.06.2022.


3. Govt. Lr.No. 22851/Fin(Pension)/2018. Dt: 13.08.2018.


4. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, பதிவு எண்‌. 83/2022, சேலம்‌ மாவட்டம்‌, விண்ணப்பம்‌ நாள்‌: 30.09.2024.


*****


பார்வை 4-ல்‌ காணும்‌ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌ விண்ணப்ப கடிதத்தில்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ கல்வியாண்டின்‌ இடையில்‌, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும்‌ ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில்‌ கடைசி வேலை நாள்‌ வரை (Upto the end of Academic Session) மறுநியமனம்‌ வழங்கப்படுகிறது. அப்பணிக்காலத்திற்கான ஊதியம்‌ பங்களிப்பு ஒய்வூதியத்தில்‌ உள்ளோருக்கு பார்வை 2-ல்‌ குறிப்பிட்டுள்ள ஒய்வு பெறுவதற்கு முன்னர்‌ கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க வேண்டும்‌ என விண்ணப்பித்துள்ளனர்‌.


பார்வை 1-ல்‌ குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில்‌ ஒய்வுபெற்றவர்கள்‌ கடைசியாக பெற்ற ஊதியத்தில்‌ (அரசின்‌ பங்களிப்பு 10% -*- பணியாளர்‌ பங்களிப்பு 10%) பிடித்தம்‌ செய்து மீதமுள்ள தொகையை மறுநியமன கால ஊதியமாக நிர்ணயம்‌ செய்ய ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வலுவலகத்தில்‌ முன்னிலைபடுத்தப்பட்ட மறுநியமன ஊதியத்திற்கான பட்டியல்‌ அரசாணை 16 (நிதி) நாள்‌: 28.01.2020-ஐ சுட்டிகாட்டி தணிக்கை மேற்கொண்டு பட்டியல்‌ திருப்பப்பட்டது என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌..


இந்நேர்வில்‌ மறுநியமன கால ஊதியம்‌ அனுமதித்தல்‌ தொடர்பாக தக்க தெளிவுரை வழங்கிட வேண்டி இக்கடிதம்‌ பணிவுடன்‌ சமர்ப்பிக்கப்படுகிறது. 


கருவூல அலுவலர்‌,

மாவட்ட கருவூலம்‌, சேலம்‌.

நகல்‌:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, சேலம்‌ மாவட்டம்‌ அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. (திரு T.A. கமலக்கண்ணன், மாநிலச் செயலாளர், அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, எடப்பாடி, சேலம்‌ - 637105)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்