கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுகலை ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுகலை ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் (All Districts) EMIS தளத்தில் வெளியீடு...


 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் (All the Districts) EMIS தளத்தில் வெளியீடு...


*How to find the vacancies?

EMIS Individual login 

➡️ Admin 

➡️ Preselect vacancy 

➡️ Counselling type 

➡️ PG Teacher (District - District) 

➡️ Panel 

➡️ General (Tamil & English) 

➡️ Submit 

➡️ We get all districts vacancies 

➡️ 🔎 Type District Name 

➡️ We get District wise vacancies.


புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Refresher Training for Newly Appointed Post Graduate Teachers – Proceedings of SCERT Director) ந.க.எண்: 5953 / F1/ 2022, நாள்: 16-11-2022...

 



 


>>> புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Refresher Training for Newly Appointed Post Graduate Teachers – Proceedings of SCERT Director) ந.க.எண்: 5953 / F1/ 2022,  நாள்: 16-11-2022...






01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...



>>> 01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...




தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள்‌, சென்னை -600 006.
ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...


பொருள்‌:  
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-1.8.2022 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌  அடிப்படையில்‌ முதுகலை ஆசிரியர்‌  பணியிடங்கள்‌ நிர்ணயம்‌  செய்தல்‌ அறிவுரைகள்‌ வழங்குதல்‌ சார்ந்து.


பார்வை:
1. அரசாணை எண்‌ 525, பள்ளிக்‌ கல்வி (டி1) துறை, நாள்‌ 29.12.1997. 
2. அரசாணை எண்‌ 46 பள்ளிக்‌ கல்வி (க்யூ2) துறை, நாள்‌ 14.05.2004.
3. அரசாணை எண்‌ 231, பள்ளிக்‌ கல்வி (சி2) துறை, நாள்‌ 11.08.2010.
4. அரசாணை (1டி) எண்‌ 217, பள்ளிக்‌ கல்வி (ப௧5(1)) துறை, நாள்‌ 20.06.2019.
5. அரசாணை எண்‌ 176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌ 17.12.2021.

 

 அரசாணை எண்‌ 525ன்படி மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு  ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர் நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப பணியாளர்‌ நிர்ணயம்‌ (Staff Fixation) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக்‌ கல்வியாண்டிலும்‌ 01.08.2022 நிலவரப்படி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்வதற்கு 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ சார்பாக கீழ்க்காணும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

   

முதலாவதாக 1 முதல்‌ 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும்‌ அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல்‌ பிரிவும்‌, (Bifurcation) என்ற அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்யப்பட வேண்டும்‌.

பார்வை 2ல்‌ காண்‌ அரசாணை 46ன்படி ஆசிரியர்கள்‌ பாடவேளைகள்‌ அடிப்படையில்‌
பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது.

பார்வை 4ல்‌ காண்‌ அரசாணை 217ல்‌ கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பிரிவுகளைப்‌ பொறுத்தவரை 11 மற்றும்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு 1:40 என்ற. ஆசிரியர்‌-மாணவர்‌ விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும்‌.

மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்‌சி/ மாநகராட்‌சி பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்சம்‌ 30 மாணவர்களும்‌, ஏனைய ஊரக பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்ச மாணவர்‌ எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேல்நிலைப்பிரிவில்‌ 60 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, 61-100 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, ஒவ்வொரு கூடுதல்‌ 40 மாணவர்களுக்கும்‌ கூடுதல்‌ பிரிவும்‌ ஏற்படுத்திடவும்‌ அனுமதிக்கப்படுகிறது. குறைந்த பட்ச மாணவர்கள்‌ இல்லாமல்‌ நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு,  அதில்‌ பயிலும்‌ மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


பாடவேளைகள்‌ கணக்கிடுதல்‌.

ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஓராசிரியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ ஒதுக்கீடு உள்ளதா என்பதையும்‌ கணக்கில்‌ கொள்ள வேண்டும்‌.

முதுகலை ஆசிரியராகப்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மேல்நிலை வகுப்புகளில்‌ மொழிப்பாடத்தில்‌ வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ கணக்கீடு செய்ய வேண்டும்‌. அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில்‌ கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம்‌ வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌.


கூடுதல் தேவை பணியிடங்கள்‌.

மொழிப்பாடத்தில்‌ 24பாட வேளைக்கும்‌, முதன்மைப்‌ பாடத்தில்‌ 28 பாடவேளைகளுக்கும்‌ கூடுதலாக இருப்பின்‌ இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம்‌ செய்யலாம்‌.


ஆசிரியருடன்‌ உபரி பணியிடங்கள்‌

ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்கள்‌ பணிபுரிந்து, அதில்‌ ஒரு பணியிடம்‌ ஆசிரியருடன்‌ உபரி பணியிடமாக இருக்குமாயின்‌ அப்பாடத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களில்‌ இளையோரை ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிக்கப்பட வேண்டும்‌. பார்வை 5ல்‌ காண்‌ அரசாணையில்‌ ஒருமுறை பணிநிரவல்‌ மூலம்‌ மாறுதல்‌ செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும்‌ பணிநிரவல்‌
செய்யக்கூடாது. அவ்வாறான நிகழ்வுகள்‌ எழும்போது சார்ந்த ஆசிரியர்‌ பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும்‌ பணிநிரவல்‌ செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பு பெறலாம்‌.

எனினும்‌, சென்ற ஆண்டு ஆசிரியருடன்‌ உபரியாக கண்டறியப்பட்டு, பணிநிரவல்மூலம்‌ தற்போதைய பள்ளியில்‌ பணிபுரியும்‌ மேற்காண்‌ ஆசிரியர்‌, 'இந்த ஆண்டில்‌ தயார்‌ செய்யப்படும்‌ பணியாளர்‌ நிர்ணயத்தின்போதும்‌ ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிப்பதற்கு விருப்பம்‌ தெரிவித்தால்‌ அன்னாரை தற்போதைய பணியாளர்‌ நிர்ணயத்தின்போது ஆசிரியருடன்‌ உபரியாகக்‌ காண்பிக்கப்படவேண்டும்‌.

மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01.08.2022 அன்றுள்ள நிலவரப்படி 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ அனைத்துவகை அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌ சார்பான
பணியாளர்‌ நிர்ணய விவரங்களை இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்‌ பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில்‌ நேரில்‌ உரிய பிரிவில்‌ (w2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்யப்பட்டதன்‌ (Download) நகலினை கண்டிப்பாக இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படவேண்டும்‌.



2020-2021ஆம் ஆண்டு PGTRB - முதற்கட்டமாக வரலாறு, புவியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு (PGTRB 2020-2021 - Release of Provisionally Selection List for History, Geography and Physics in the first phase)...



>>> 2020-2021ஆம் ஆண்டு PGTRB - முதற்கட்டமாக வரலாறு, புவியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு (PGTRB 2020-2021 - Release of Provisionally Selection List for History, Geography and Physics in the first phase)...



>>> Click Here to View Provisionally Selection List...


முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வு: தேர்ச்சிபெற்றவர்கள் பட்டியல் வெளியீடு


அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியமானது கணினி வழித் தேர்வை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தியது. இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 341 தற்காலிக பட்டதாரிகளின் விவரம் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21 COMPUTER BASED EXAMINATION SCHEDULE)...



>>> 2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER  INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21  COMPUTER BASED EXAMINATION SCHEDULE)... 

முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்...

 முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 



அவரது அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன. 



மேல் முறையீடு

வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. 



இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளது.இதற்கு காரணமான, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும்.


நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட, எம்.பி.சி., மாணவர்கள், 34 பேருக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அதேபோல, தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும் திருத்தி அமைத்து, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 392/ டபிள்யு3/ இ3 /2019, நாள்: 19-12-2020...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 அரசாணை (நிலை) எண்: 747, நாள் : 18-08-1986...

 அரசாணை (நிலை) எண்: 747, நாள் : 18-08-1986...

Finance pay cell department G.O.Ms.No. 747, dated 18th August 1986...

One man committee recommendations of the committee education department incentive increment for M.Ed., qualification orders issued...

>>> Click here to Download G.O.Ms.No. 747, Dated: 18-08-1986...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...