கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Waived லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Waived லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...


>>> தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...



 கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...


கடந்த  ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.


இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை தடையின்றி விரைவாக சென்றடைவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.


ஆய்வுக்குகூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதித்தோம். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது.


 கரோனாவை கட்டுப்படுத்துவதோடு இந்த நெருக்கடியான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.


கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டுறவு நிறுவனங்களில் 31-01-2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - பதிவாளர்...

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் 

ந.க 30340/ 2020 / மவகொ2, நாள்: 02-03-2021 



ஐயா / அம்மையீர், 


பொருள்: 


கூட்டுறவு - பொது நகைக் கடன்கள் - கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - தொடர்பாக 


கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக் கடன் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (excel sheet) அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்டம் வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும் ; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களும் உரிய படிவத்தில் (excel sheet) குறுந்தகட்டில் பதிந்தும், பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...