கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூட்டுறவு நிறுவனங்களில் 31-01-2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - பதிவாளர்...

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் 

ந.க 30340/ 2020 / மவகொ2, நாள்: 02-03-2021 



ஐயா / அம்மையீர், 


பொருள்: 


கூட்டுறவு - பொது நகைக் கடன்கள் - கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - தொடர்பாக 


கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக் கடன் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (excel sheet) அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்டம் வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும் ; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களும் உரிய படிவத்தில் (excel sheet) குறுந்தகட்டில் பதிந்தும், பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...