கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கொரோனா ஃபேக்ட்ஸ் (CORONA FACTS)... Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

 இதுவரை கடந்த பத்து மாதங்களாக கொரோனா தொற்றை உலகம் முழுவதும் ஆய்வு செய்ததில் கிடைத்த முக்கிய முடிவுகள் 

🏁கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்து தொற்று ஏற்பட்ட 

5 முதல் 6 நாட்களுக்குள் 

அறிகுறிகள் தோன்றும் (mean Incubation period - 5 to 6 days)

🏁அறிகுறிகள் தோன்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பிருந்தே பிறருக்கு பரவும் தன்மை கண்டறியப்பட்டுள்ளது ( High chance of Presymptomatic spread) 

🏁அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் தொற்றைப்பிறருக்கு பெரிய அளவில் பரப்புவதில்லை ( very low chance of asymptomatic spread) 

🏁சாதாரண முதல் மிதமான கொரோனா தொற்று 

1முதல் 10 நாட்கள் நீடிக்கிறது . இதில் நோய் எதிர்ப்பு சக்தி எளிதாக வைரஸை முறியடித்து விடுகின்றது.

🏁தீவிர  தொற்று நிலை 1 முதல் 13 

நாட்கள் வரை . 

🏁அதிதீவிர கவலைக்கிடமான நிலை ஏற்பட்டால் 

14 நாட்களுக்கு மேலும் 28 நாட்கள் வரை கூட நோயின் தன்மை இருக்கிறது. இதில் எதிர்ப்பு சக்தியானது மிக அதிக அளவில் தூண்டப்பட்டு அதன் விளைவாக முக்கியமான உறுப்புகள் பழுதாகின்றன. 

🏁கொரோனா தொற்று ஏற்பட்டு அதிகமான மருத்துவமனை அட்மிசன்கள் 

நோய் அறிகுறி ஆரம்பித்த ஏழாவது நாள் நடக்கிறது. 

🏁மூச்சு திணறல் / மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் எட்டாவது நாள் தோன்றுகிறது. 

🏁தீவிர மூச்சுத்திணறல் நிலை 9 ,10 வது நாளில் நடைபெறுகின்றது 

🏁தீவிர நோயில் சிக்கும் பெரும்பான்மை மக்கள் 11 வது நாள் ஐசியூவில் சேர்க்கப்படுகின்றனர். 

🏁நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி தரும் ஆண்ட்டிபாடிகள் 14நாட்களில் இருந்து ரத்தத்தில் தெரிய ஆரம்பிக்கின்றது 


⛔வயது மூப்பு (old age)

⛔ரத்த கொதிப்பு ( hypertension) 

⛔இதய ரத்த நாள நோய்( cardio vascular disease) 

⛔நீண்ட கால நுரையீரல் அழற்சி நோய்( COPD)

⛔நீரிழிவு ( Diabetes) 

⛔உடல் பருமன்( obesity) 

⛔புற்று நோய் ( cancer)

மேற்சொன்னவர்களுக்கு சாதாரண தொற்றில் இருந்து தீவிர தொற்றுக்கு மாறும் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது 


மேலும் கீழ்வரும் அறிகுறிகள் இருப்பின் 

ஒருவர் சாதாரண தொற்றில் இருந்து அடுத்த நிலைகளுக்குச் செல்ல வாய்ப்பு அதிகம்


அந்த அறிகுறிகள் பின்வருமாறு 


❇அட்மிசன் போது 39 டிகிரி செல்சியஸ்க்கு மேல் காய்ச்சல் 


❇அட்மிசன் போது மூச்சுத்திணறல்


❇அதிகமான qSOFA மதிப்பெண் பெறுபவர்கள் 

( qSOFA = quick Sequential Organ Failure Assessment ) 

குறைவான ரத்த அழுத்தம் 

சராசரிக்கும் வேகமாக மூச்சு விடுதல்  

நினைவு தப்புதல்/ சுயநினைவு இழத்தல் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன 


பின்வரும் ஆய்வக முடிவுகள் இருந்தால் அவருக்கு தீவிர நோய் 

ஏற்படலாம்.

🚩வெள்ளை அணுக்கள்/ நியூட்ரோஃபில்கள் அளவில் குறைவது

🚩லேக்டேட் மற்றும் லேக்டேட் டீஹைட்ரோஜினேஸ்(LDH)  அளவில் கூடுவது 

🚩சி- ரியாக்டிவ் ப்ரோட்டின்( CRP) அளவுகள் கூடுவது

🚩ஃபெரிட்டின்(Ferritin)  அளவுகள் கூடுவது

🚩இண்டர்ல்யூகின்-6( IL-6) அளவுகள் கூடுவது 

🚩டி-டைமர் அளவுகள் கூடுவது ஆகியவை 

நோய் அடுத்த கட்டத்துக்கு செல்லக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளாக இருக்கலாம். 

🏁 தொற்று கண்டவருடன் ஒரே அறையில் வாழும் உறங்கும் நபருக்கு தொற்று பரவும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது 

🏁 தொற்றை விரைவில் கண்டறிந்து பிரத்யேக  மருத்துவமனையில் அட்மிசன் பெறுபவர்கள் அதிகம் உயிர் பிழைக்கிறார்கள் 

 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

🍁🍁🍁 பணிவரன்முறை - தகுதிகாண் பருவம் விளக்கங்கள்...

TRB appointment இல்..

நியமன ஆணையில்

"முறையான நியமனம்" என்றிருந்தால் 

பணிவரன்முறை ஆணை தனியாக தேவை இல்லை..

(எ.கா 2002 PG Appointments)...

2003 முதல் 2017 வரை வழங்கப்பட்ட பொதுவான பணிவரன்முறை ஆணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வை...

பொறுத்தவரையில் கட்டாயம்...

  தனியாக பணிவரன் முறை செய்யப்பட வேண்டும்...

(நியமன அலுவலர் மூலம்)...

முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், CEO வழியாக.. JD (HS) க்கு அனுப்பி பணிவரன்முறை பெறப்பட்டது...

தற்போது முதன்மை கல்வி அலுவலர் (அரசாணை 101 நாள் 18/05/18 இன் படி) நியமன அலுவலர் என்ற முறையில் பணிவரன்முறை செய்வார்கள்..

நேரடி நியமன பொது பணிவரன்முறை போன்று ..

01.01.20xx.... இன் படி பதவி உயர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் பொதுவான பணிவரன்முறை ஆணை இருக்காது..


தகுதிகாண் பருவம்

1) நேரடி நியமன முதுகலை ஆசிரியர்களுக்கு பணியேற்பு நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தகுதி காண் பருவம்...

 2) பதவி உயர்வு முதுகலை ஆசிரியர்களுக்கு ...

 தகுதி காண் பருவம் கட்டாயம் உண்டு... 

பதவி உயர்வு பெற்ற நாளில் இருந்து ஓர் ஆண்டு தகுதி காண் பருவம்...

தகுதி காண் பருவம் நிறைவு ஆணை CEO வழங்குவார்..

ஒரு பணித்தொகுதியில்   ஒரு முறை மட்டுமே தகுதி காண் பருவம் நிறைவு செய்ய வேண்டும்....

பதவி உயர்வில் தகுதி காண் பருவம் தேவையில்லை என்பது அடிப்படை விதி

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் தடவையாக "தகுதி காண் பருவம்"... ஏன்?

(ஏற்கனவே அவர் பட்டதாரி பணியில் தகுதி காண் பருவம் நிறைவு செய்துள்ளார்)..

 ஒரே பணித் தொகுதி பதவி உயர்வு எனில் மீண்டும் தகுதி காண் பருவம் தேவையில்லை..

ஓர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால்...

பட்டதாரி ஆசிரியர் பணியில் "தகுதி காண் பருவம்" தேவை இல்லை...

ஏனெனில் இரண்டும் ஒரே பணித் தொகுதி...


  பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் வெவ்வேறு பணித் தொகுதிகள்...

எனவே பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால்..

கட்டாயம் "தகுதி காண் பருவம் நிறைவு செய்ய வேண்டும்"

( ஆனால் ஓர் ஆண்டு மட்டுமே தகுதி காண் பருவம்)..

அதே பட்டதாரி ஆசிரியர்..

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் "தகுதி காண் பருவம்" தேவை இல்லை...

காரணம் இரண்டும் ஒரே பணித் தொகுதி...

(இணை இயக்குநர் மேநிக அவர்களால் அனுப்பப்பட்டது...

தற்போது முதன்மை கல்வி அலுவலர் தான் பணிவரன் முறை செய்வார்கள்)

🍁🍁🍁 கபீர் புரஸ்கார், அண்ணா பதக்க விருதுகள் டிசம்பர் 14-க்குள் விண்ணப்பிக்கலாம்...

 


🍁🍁🍁 அரசு ஐடிஐ யில் 31ஆம் தேதி வரை சேர்க்கை...

 


🍁🍁🍁 சி ஏ தேர்வு அறிவிப்பு - நவம்பர் 1இல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு...

 


🍁🍁🍁 ஜனவரி எட்டாம் தேதி யுபிஎஸ்சி முதன்மை தேர்வு- அக்டோபர் 28 முதல் விண்ணப்பிக்கலாம்...

 


🍁🍁🍁 மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு - நாளை தீர்ப்பு...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்

 அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்