UPSC முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
UPSC முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை
சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி
IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது
முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IAS மற்றும் IPS உள்ளிட்ட உயர் பணியில் சேர அழைப்பு
22.01.2025 அன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளின் 979 பணியிடங்களுக்கு ஒன்றிய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள், பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு (SC/ ST) விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் மற்றவர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த UPSC அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முதல் நிலை தேர்வு வருகிற மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது பற்றிய மேலும் விவரங்களை அறிய
Civil Services (Preliminary) Examination, 2025 Exam Notification
>>> Click Here to Download Notice (2.76 MB)
>>> Click here to download Instructions (695.76 KB)
UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் - நான் முதல்வன் திட்டம் - போட்டி தேர்வு பிரிவு - தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (UPSC Main Exam Results Declared)...
செப்டம்பர் 15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்ற UPSC முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வு(Civil Services Main Exam) 2022ஆம் ஆண்டு ஜனவரி(January) 7,8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்...
UPSC சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10ம் தேதி நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு...
"Due to the prevailing conditions caused by the Novel Corona Virus (COVID-19), the Union Public Service Commission has deferred the Civil Services (Preliminary) Examination, 2021, which was scheduled to be held on 27th June, 2021. Now, this Examination will be held on 10th October, 2021," the UPSC has notified.
"தேசியக் கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை" நூல் விமர்சனம் Book Review: "The Rogue Elephant alias National Education Policy ...