கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்


Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal


"பொங்கல் நாளன்று CA தேர்வு"


பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்.


தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும்.


தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கடிதம்.


பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.

எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.

அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.

ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.

*பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்*

*தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம்*

சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது  தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.









இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...