கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஊதிய உயர்வு பேச்சு நடத்த 12 சங்கங்களுக்கு அழைப்பு...

 சென்னை:ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், விற்பனையாளர், எடையாளராக பணிபுரிவோருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம், இம்மாதம் முடிகிறது.

 இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை, தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது. கூட்டுறவு கூடுதல் பதிவாளரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனருமான சக்தி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அரசின் நிதித்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் கூட்டம், சென்னை, பாரிமுனையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கியில், வரும், 6ம் தேதி, காலை, 10:15 மணிக்கு நடக்கிறது.அதில் பங்கேற்க, குழு சார்பில், 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஊதிய உயர்வு வழங்க முடியாது.எனவே, விரைந்து பேச்சு நடத்தி, டிச., மாதத்திற்குள் ஊதிய உயர்வை அறிவித்து, உடனே செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

🍁🍁🍁 பள்ளிகளே மூடியுள்ள நிலையில் வயது வந்தோர்க்கு கல்வி உடனடி தேவையா? கற்போம் எழுதுவோம் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை...

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற துணைப் பொதுச்செயலாளர் இலா.தியோடர் ராபின்சன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்........ 

கற்போம் எழுதுவோம் எனும் பெயரில் , 15 வயதிற்கு மேற்பட்டு, எழுத்தறிவு இல்லாதவர்களை கண்டறிந்து , அவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் அரசின் திட்டத்தை, பாதுகாப்பு கருதி பள்ளிகளே மூடப்பட்டு இருக்கும் இந்த கொரோனா பாதிப்புக் காலத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்த, ஆணைப் பிறப்பித்துள்ளதற்கு ஆசிரியர் மன்றம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

       பள்ளி சாரா வயதுவந்தோர் கல்வி இயக்குனர்  அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 743/ஆ2/2020 நாள்22-10-20 அடிப்படையில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த ஆணையில், கற்போம் எழுதுவோம் என்ற திட்டத்தை, மத்திய அரசானது தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதங்கள் No.9 .3/2020/நாள் 08-05-20. 30-09-20.14-10-20 மற்றும் திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் முடிவுகளின் அடிப்படையில் , அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப் படுவதாகவும் , அதனை  தன்னார்வலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்றும், ஒருவேளை தன்னார்வலர்கள் கிடைக்காத பட்சத்தில், ஆசிரியர்களே அப்பணியில் ஈடுபட்டு எவ்வித புகார்களுக்கு இடம் கொடாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

     மத்திய , மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுள்ள இத்திட்டத்திற்கு, ஊதியம்  மதிப்பூதியம் எதுவும் இல்லாமல், தன்னார்வலர்களை பயன்படுத்தி செயல்படுத்தக் கூறுவது சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்க முயற்சித்து அதன்மூலம் இத்திட்டத்தை தோல்வி அடையச் செய்யும்  செயலா? அல்லது ஆசிரியர்களுக்கு மேலும் பணிச்சுமையை உருவாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தும் முயற்சியா ? என ஆசிரியர் மன்றம் கேள்வி எழுப்புகிறது.

     ஏற்கனவே கற்கும் பாரதம்  என்னும் திட்டம் , தமிழகத்தின் 9 மாவட்டங்களில் செயல்படுத்தி தற்போது அதனை பெயர் மாற்றி கற்போம் எழுதுவோம் என தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.

 கற்கும் பாரதம் திட்டத்தில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு 2000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டது . கற்கும் பாரதம் திட்டத்தில் படித்த நபர்கள் எட்டாம் வகுப்பு வரை படித்து சான்றிதழ் பெற்று அதனை தனது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு அரசு சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் தற்போதைய கற்போம் எழுதுவோம் திட்டத்தில் , பயிற்சியாளர்களுக்கு எவ்வித ஊதியமும் இல்லை. கற்போருக்கான சான்றிதழ்கள் பற்றிய எவ்வித அறிவிப்பும் இல்லை.

மேலும், கொரானா பாதிப்பு காரணமாக 8 மாதங்களுக்கு மேல் பள்ளி தொடர்புகளே இல்லாத மாணவர்கள் ,

தற்போது பள்ளி துவங்கியுள்ள நிலையில் ,பள்ளிக்கு வந்தால் அவர்களை ஒருநிலைப்படுத்தி, பள்ளி சூழலுக்கு கொண்டுவந்து , கற்றல்-கற்பித்தல் செயலில் மாணவர்களை ஈடுபாடு கொண்டு வருவதற்கே, குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது தேவைப்படும் போது,

ஆசிரியர்கள் அனைவரும் கற்போம் எழுதுவோம் திட்டத்தில்  கவனம் செலுத்துவதா? அல்லது பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்துவதா? என்றபடி ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் மன உளைச்சலையும் கற்போம் எழுதுவோம் திட்டம், ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் கொரானா பாதிப்பு காலத்தில் தன்னார்வலர்கள் அல்லது ஆசிரியர்கள் எழுத்தறிவு பெறாதவர்கள்  இல்லம் தேடி சென்று அவர்களுக்கு வசதியான நேரத்தில், குறிப்பாக மாலை நேரத்தில் கற்பிப்பது என்பது, சாத்தியமற்றது என்பதோடு , பெண் ஆசிரியர் பெருமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமையக்கூடும்.

 ஆகவே, தமிழக அரசு அவசர கதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முனைவதை விடுத்து கொரோனா பாதிப்புகள் குறையும் வரை இத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென  அரசைக் கேட்டுக் கொள்வதாக ஆசிரியர் மன்ற துணைப் பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

🍁🍁🍁 IGNOU மூலம் B.Ed., பயின்றவர்களுக்கு , Evaluation Certificate தேவையா? அரசாணை மற்றும் செயல்முறைகள்...

 தமிழகத்தில் பல்வேறு DEO அலுவலகங்களில், IGNOU மூலம் B.Ed., பயின்றவர்களுக்கு , அயல் மாநில University என்று கூறி Evaluation Certificate கேட்பது ஏற்புடையதல்ல. ஏனென்றால் அரசாணை (நிலை) எண்: 160, நாள்: 02.12.2004-ல் Evaluation தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.



🍁🍁🍁 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டண விவரம் வெளியீடு...

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு  ஓர்ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம் மற்றும்  எந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் என்று தற்போது பட்டியல் வெளியாகியுள்ளது.

MBBS, BDS படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் என்ற பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.13,610 கட்டணமாக வசூலிக்கப்படும்.

அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் BDS படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.11,610 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.4 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் MBBS படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.3.85 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

KK நகர் ESI மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் MBBS பயில ரூ.1 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் BDS பயில ரூ.2.50 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

OC, BC, BCM, MBC, SC, ST, SCA பிரிவினருக்கு தனித்தனி கட்டணங்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் MBBS பயில ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் BDS பயில ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கட்டணமாக நிர்ணயம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் MBBS பயில ஆண்டுக்கு ரூ.12.50 லட்சம் கட்டணம் நிர்ணயம்.

வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் MBBS பயில ஆண்டுக்கு ரூ.48,330 கட்டணமாக நிர்ணயம்.

நிர்வாக ஒதுக்கீட்டில் MBBS பயில, NRI மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20.50 லட்சம் முதல் ரூ.23.50 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் BDS பயில ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கட்டணமாக நிர்ணயம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் BDS பயில NRI மாணவர்களுக்கு ரூ.9 லட்சம் கட்டணமாக நிர்ணயம்.

🍁🍁🍁 7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம். மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...

 


மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு  தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  இது பெரும்பாலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்ப  நீட் தேர்வு முறையில் தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு காரணமாக, தமிழகத்தில்,அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழகஅரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகஅரசு பள்ளிகளில் படித்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மேலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் வரும் (நவம்பர்) 12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவம்பர் .16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் வகையில், 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற, 6 முதல் 12-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த அரசுப் பள்ளியின் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் 6 - 8, 9 - 10, 11 - 12 என நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை என வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கும் பட்சத்தில் 3 பள்ளிகளின் படித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அதேபோல இறுதியாக 12-ம் வகுப்புப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கையெழுத்து மற்றும் சீல் அவசியம்.

அதேபோல மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மை என உறுதி செய்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரும் கையொப்பமிட வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு இணைதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இணையதள முகவரி :  👉👉 http://tnmedicalselection.net/news/02112020234138.pdf

🍁🍁🍁 ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு...





கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பள்ளிகளை திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

🍁🍁🍁 பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: அரசாணைகள்....

அரசாணை நிலை எண்: 151, நாள் 30-11-2015 

மற்றும்

 அரசாணை நிலை எண்: 166,  நாள் 23-11-2016

>>> Click here to Download Director Proceedings, G.O.s : 151 & 166


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...