கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இரண்டாம் நிலை காவலர்¸ இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020-க்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியீடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.11.2020 (திங்கள்)...

 🌹நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான் இல்லாதவற்றையும்,

இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்.!

🌹🌹யாராவது கோபத்தில் பேசும் போது அசட்டையாக இருக்காதீர்கள் கவனமாக கவனியுங்கள்.

ஏனெனில் அதுதான் அவர்கள் உண்மை சொல்லும் நேரமாக இருக்கலாம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார் 

⛑⛑மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி மனு.. இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என கோரிக்கை 

⛑⛑திருத்திய அட்டவணை வெளியீடு.  மருத்துவ கவுன்சலிங் 30ம் தேதி தொடக்கம் . 30ம் தேதி 850 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 12ம் தேதி வரை நடக்கும் கவுன்சலிங்கில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். 

⛑⛑'நிவர்' புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவங்கின. 

⛑⛑சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மேலும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உள்ளீடு செய்ய 31.12.2020 அன்றும், பள்ளி நிர்வாகம் உள்ளீடு செய்ய 15.1.2021 அன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

⛑⛑கோவை எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் திரு.இராமமூர்த்தி அவர்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.                                                          ⛑⛑ஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை

⛑⛑ஊரடங்கு நேரத்தில் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் -அனைத்து துறை ஊழியர் சங்கம் கோரிக்கை

⛑⛑கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

⛑⛑தமிழகத்தில் 74,212 புதிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்காக  உருவாக்கப்பட்டுள்ளது  -முதல்வர் தகவல்

⛑⛑சமக்ரா சிக்ஷா - 2020--2021 கல்வி ஆண்டு - மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

⛑⛑பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழக்கு: மத்திய அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

⛑⛑தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

⛑⛑தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

⛑⛑நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவிப்பு

⛑⛑இந்தியா முழுவதும் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் மாநில மொழி சேனல்களில் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புமாறு மத்திய பிரச்சார் பாரதி உத்தரவு.

⛑⛑இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

இந்திய அணிக்கு எதிரான  இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி 

⛑⛑ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

⛑⛑கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் பணியை மாநில, மாவட்ட அளவில் கண்காணிக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு.

⛑⛑ரயில் நிலையங்களிலும் இனி பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக மண்பாண்ட கோப்பைகளில் டீ விற்பனை

- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

⛑⛑காங்கிரஸ் பொருளாளராக பன்சால் நியமனம்: பொதுச்செயலாளர் அறிவிப்பு

⛑⛑ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளது -முதல்வர் பழனிசாமி.

⛑⛑தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

⛑⛑ஜூன் 1, 2021 முதல் பி.ஐ.எஸ் தரச்சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிப்பு.

⛑⛑திருப்பதி  ஏழுமலையான் கோயிலில்  டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

⛑⛑டிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.

⛑⛑8 கோடி வாக்குகள் சரியானவை என்று ஜோ பைடன் நிரூபித்த பின்னர் தான், வெள்ளை மாளிகைக்குள் வர முடியும் - டிரம்ப்.

⛑⛑பயோ என் டெக்-பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அடுத்தவாரம் பிரிட்டன் ஒப்புதல் தர திட்டம்.

⛑⛑ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு இன்று தொடங்குகிறது.. இந்தியா தலைமையில் நடப்பதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு. மொத்தம் எட்டு உறுப்பு நாடுகளும் நான்கு பார்வையாளர் நாடுகளும் கொண்டது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த மாநாட்டுக்கு குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்குகிறார்.

⛑⛑நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறது.

👉பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதனிடையே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 29-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த நாட்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

⛑⛑நாடு முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான 'மாசுக் கட்டுப்பாடு சான்றிதழை' அறிமுகப்படுத்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கியூஆர் குறியீட்டுடன் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சான்றிதழில் வாகன உரிமையாளர், மற்றும் வாகனம் உமிழும் புகையின் நிலைக் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.இது குறித்த வரைவு அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வரும் பரிந்துரைகளையும் பின்பற்றி செயல்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.                                                             

⛑⛑தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன் வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் : தொழில்துறை அமைச்சர் சம்பத்

⛑⛑எட்டு மாதங்களுக்கு பின், முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

கொரோனா தொற்று பரவலால், மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் வழிகாட்டுதலின்படி, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும், 2ம் தேதி முதல் கல்லுாரிகளுக்கு வந்து, நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.வெளி மாவட்ட மாணவர்கள், அவரவர் கல்லுாரிகள் உள்ள பகுதியில் ஏற்கனவே தங்கிய விடுதிகளில், தங்கி கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

⛑⛑பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்று 2020-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்....!

 


இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நவம்பர் 30 திங்கட்கிழமை அன்று நிகழ உள்ளது.

2020-ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது. சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம்.

நவம்பர் 30ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில், இந்த நிகழ்வு மதியம் 1:04 மணி முதல் மாலை 5:22 மணி வரை நிகழும். மேலும் 3:13 மணி அளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த சந்திர கிரகணத்தை கருவிகள் உதவியின்றி வெறும் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் நிலவை சுற்றி வரும் லூனார்ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் என்று அழைக்கப்படும் விண் சுற்றுக்கலத்திற்கு கிடைக்கும் சூரிய மின்னாற்றல் குறைவதைக் காண முடியுமாம்.

CPS ஒழிப்பு இயக்கம் - இரண்டாம் கட்டப் போராட்டம்...

 


மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக...

CPS திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை அஞ்சல் அட்டை இயக்கம் 30.11.2020 முதல் 04.12.2020 வரை நடத்துவது என்கிற முடிவின் அடிப்படையில்,

 கீழ்க்கண்டவாறு எழுதி கையொப்பமிட்டு அனுப்ப கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஐயா,


மாண்புமிகு முன்னாள் முதல்வா் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவா்கள் அளித்த தோ்தல் வாக்குறுதிப்படியும், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பின் படியும் 6 இலட்சம் அரசு ஊழியா் / ஆசிாியா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஓய்விற்கு பின் பாதிக்கும் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


        தங்கள் நம்பிக்கையுள்ள,

         ××××××××××××


பெறுநர்:

மாண்புமிகு. முதலமைச்சர், அவர்கள்,

தலைமைச்செயலகம்,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை _9.


நம்பிக்கையுடன், 

களத்தில்

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

CPS ஒழிப்பு இயக்கம்.

தணிக்கை தடை (AUDIT OBJECTION) எழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்...


 வட்டாரக் கல்வி அலுவலகங்களில்  மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகள்:


1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும் முன்னரே, கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால், பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார் என்ற பதிவை வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து பணிப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


2. உயர் கல்வி பயில்வதற்கான முன் அனுமதி ஆணை வழங்கப் படும் விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்பு தான், பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது. அதற்கு முன்னர் ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறை அலுவலர்கள், பணி நியமன நாள் முதல் இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித் தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லது பின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றர். ஊக்க ஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் காண்பித்து, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கும் அனைத்து கல்வித் தகுதிகளுக்கும் உண்மைத் தன்மைச் சான்றினைப் பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் நகலும் ஆசிரியர் கைவசம் வைத்திருக்க வேண்டும்.


4. பணிப் பதிவேட்டில், தற்காலிக தேர்ச்சி சான்று மட்டும் பதிவு செய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.


5. இதற்கு முந்தைய தணிக்கையின் போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.


6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுபட்டிருந்தால், அவற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுதல் பதிவாக பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.


7.  CL, RH தவிர பிற அனைத்து விடுப்பு வகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக் காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்து கொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளி போயிருக்க வேண்டும்.


8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசு நியமனம் இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனே விண்ணப்பித்து சரி செய்து கொள்வது நல்லது.


9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.


10. பணிப் பதி வேட்டின் நகல் தங்களிடம் இருந்தால், அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

போலி கல்வி சான்றிதழ் (FAKE CERTIFICATE ) கொடுத்து பணி - பள்ளிகளில் விசாரணை...

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் பலர் பணியில் சேர்ந்தபோது கொடுத்த கல்வி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் சேவுகர் காமாட்சி என்பவர் கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரைக்கு கடிதம் வந்தது.

விசாரணையில் உண்மை எனத் தெரியவந்ததை தொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல் சிலரும் பணியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காமாட்சியுடன் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாக பள்ளி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

இணைகமிஷனர் செல்லத்துரை கூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து நடவடிக்கை இருக்கும்'' என்றார்

அறுவை சிகிச்சை - மத்திய அரசின் அறிவிப்பு ஆபத்தானது -டாக்டர் அமலோற்பவநாதன் ரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office

ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை  - பாம்பனில்  மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்  ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை   கா...