கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆவின் நிறுவனத்தில் 20 காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி: 8th, 12th, ITI, Any Degree - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2020...



 ஆவின் நிறுவனத்தில் 20 காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி: 8th, 12th, ITI, Any Degree - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2020...

Aavin Milk அதிகாரபூர்வ இணையதளத்தில் SFA, TECHNICIAN Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 12th, ITI, Any Degree கொடுக்கப்பட்டுள்ளது.


தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Namakkal) கொடுக்கப்பட்டுள்ளது.


தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.


நிறுவனம் : Aavin Milk


பணியின் பெயர் : SFA, TECHNICIAN Posts


கல்வித்தகுதி : 8th, 12th, ITI, Any Degree


பணியிடம் : Namakkal


தேர்வு முறை : Interview


கடைசி நாள் : 15.12.2020


முழு விவரம் : https://bit.ly/39t2PoK என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

கனரா வங்கியில் காலியாக உள்ள 220 அலுவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2020...

கனரா வங்கியில் காலியாக உள்ள 220 அலுவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2020...

 (RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN VARIOUS DISCIPLINES IN SCALE I & SCALE II)

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விளம்பர எண். CB/RP/2/2020


பணி: Specialist Officers


காலியிடங்கள்: 220


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


1. Backup Administrator JMGS-I 


2. Extract, Transform & Load (ETL) Specialist – 05


3. BI Specialist JMGS-I – 05


4. Antivirus Administrator JMGS-I – 05


5. Network Administrator JMGS-I –  10


6. Database Administrator JMGS-I – 12


7. Developer/ Programmers JMGS-I – 25


8. System Administrator JMGS-I – 21


9. SOC Analyst JMGS-I – 04


10. Manager – Law MMGS-II – 43


11. Cost Accountant MMGS-II – 01


12. Chartered Accountant – MMGS-II – 20


13. Manager – Finance -MMGS-II – 21


14.Information Security Analyst MMGS-II – 04


15. Ethical Hackers & Penetration Testers MMGS-II – 02


16. Cyber Forensic Analyst MMGS-II – 02


17. Data Mining Experts MMGS-II – 02


18. OFSAA Administrator MMGS-II – 02


19. OFSS Techno Functional MMGS-II -05


20. Base 24 Administrator MMGS-II – 02


21. Storage Administrator MMGS-II – 04


22. Middleware Administrator MMGS-II – 05


23. Data Analyst MMGS-II – 02


24 Manger – MMGS-II – 13


25. Senior Manager  MMGS-II – 01


சம்பளம்

JMGS-I பணிகளுக்கு மாதம் ரூ.23,700 – 42,020, MMGS-II பணிகளுக்கு மாதம் ரூ.31,705 – 45,950, 

MMGS-III பணிகளுக்கு மாதம் ரூ.42,020 – 51,490 

தகுதி

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்து 3 ஆண்டு வழக்குரைஞர் பணி அனுபவம், 

Cost Account முடித்து 3 ஆண்டு பணி அனுபவம், Chartered Accountant முடித்து 2 ஆண்டு பணி அனுபவம், 

MBA(Finance) அல்லது நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் கணினி அறிவியல், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், அறிவியல் போன்ற திறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு:

 01.10.2020 தேதியின்படி, JMGS-I பணிகளுக்கு 20 முதல் 30க்குள்ளும், MMGS-II பணிகளுக்கு 22 முதல் 35க்குள்ளும், MMGS-III பணிகளுக்கு 25 முதல் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  

நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படலாம்.

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை

www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.canarabank.com/media/10040/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 03.12.2020 (வியாழன்)...

 🌹எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கின்றோமோ அங்கே தான் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்.!

🌹🌹பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளியும் அல்ல,

மெளனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல.!!

🌹🌹🌹நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவது இல்லை.

நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி- அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான விவரப் பட்டியல் அனுப்பக் கோருதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.                                                               நாள்.2 .12.2020.                                                                                   

📕📘தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

📕📘சான்றிதழ்களில் சந்தேகம், 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து                

📕📘"Quality Components  programme"- என்ற தலைப்பில் களப்பணிக்காக,  மாவட்டங்களில் ஆசிரியர்களை தேர்வு  செய்வதற்கான வழிமுறைகள் (Teachers Exchange Programme)

மாநில திட்ட இயக்கம் -ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் 28/11/2020

தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு களப்பணிக்காக ஓர் ஆசிரியருக்கு 3000/- வீதம் ஒதுக்கீடு

📕📘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர் , தீயணைப்பாளர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இதற்கான எழுத்து தேர்வு டிச-13 ல் நடைபெற உள்ளது.

📕📘 தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

📕📘 நிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

📕📘3 வேளாண் சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என டெல்லியில் விவசாயிகள் பேட்டியளித்தனர். எனவே தவறினால் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் எனவும் கூறியுள்ளனர்

📕📘7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சீட் கிடைத்த அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார்.

👉கள்ளக்குறிச்சி மதுமிதா, சென்னையை சேர்ந்த இந்துஜா, காவியா, கோபிநாத், உமாதேவி, காயத்திரி ஆகியோருக்கு சென்னையில் திமுக சார்பில் மருத்துவ படிப்பிற்க்கான உதவித்தொகையை ஸ்டாலின் வழங்கினார்

📕📘7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் ஏற்பாடு செய்துள்ளதாக  ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது.

👉சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது.

📕📘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் என கீ.வீரமணி கூறினார். மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்மையான திராவிடர் ஆட்சி அமைய அனைவரும் உழைப்போம் என கூறினார்.

📕📘அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்

உச்சநீதிமன்றம்

📕📘சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு.

📕📘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு.

📕📘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

📕📘கொரோனா பரவலால் மரண பயம் காரணமாக சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📕📘கடந்த 19 ஆண்டுகளில் இந்தியா, மலேரியா நோயை பெருமளவு குறைத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.                                                                                       

📕📘கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

📕📘ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2020-2021ம் கல்வி ஆண்டில் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொள்ளுதல் குறித்த இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

📕📘கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு

ஃபைசர் - பயோடெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்

ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரிட்டனில் கிடைக்கும்.

📕📘திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. 

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

📕📘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாகத் திறக்க வேண்டுமென்ற ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

📕📘கொல்கத்தா போலீசார் ஜுலை 2017 ஆம் ஆண்டு கர்ணணை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைத்தனர். ஆனால், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அவதூறு பேச்சுக்கு கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.                                                                         

📕📘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 2-1 கணக்கில் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது

📕📘கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது  தேவாலயங்களில் வழங்கப்படும் புனித அப்பம், நீர் உள்ளிட்டவற்றை தனித்தனி குவளைகளில் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு

📕📘டெல்லியில் போராடுபவர்கள் இடைத்தரகர்கள் என எல்.முருகன் கூறுவது வேதனை அளிக்கிறது; குளிரிலும், வெயிலிலும் போராடும் விவசாயிகளை அவமதிப்பது மனிதாபிமானமற்றது 

- கனிமொழி எம்.பி.,

📕📘ஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘டெல்லியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

நாளிதழ் செய்தி

📕📘குடியிருப்புகளின் அடிப்படையில் புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை & தரம் உயர்வு பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  உத்தரவு

📕📘கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

📕📘5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் மாநில திட்ட  இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: டிச.10 கடைசித் தேதி- உயர் கல்வித்துறை அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ல் விருது வழங்கிட பள்ளிகளில் வீர தீர செயல் புரிந்த 5 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள் இருப்பின் விவரம் கோரி கரூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்...

 தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ல் விருது வழங்கிட பள்ளிகளில் வீர தீர செயல் புரிந்த 5 முதல் 18  வயது வரையுள்ள குழந்தைகள் இருப்பின் விவரம் கோரி கரூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்...



பேரிடர் காலங்களில் முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் FAST (First Aid for Students and Teachers) செயலி பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

 பேரிடர் காலங்களில் முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் FAST (First Aid for Students and Teachers) செயலி பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...



வாக்குப் பதிவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் பட்டியல் (List of Persons Exempted from Polling Duty)...

 


வாக்குப் பதிவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் பட்டியல்...

List of Persons Exempted from Polling Duty...


Chief Electoral Officer Letter No.5650 / 2018-2, Dated: 30-10-2018...


>>> Click here to Download Chief Electoral Officer Letter No.5650/2018-2, Dated: 30-10-2018...


தமிழ்நாடு பள்ளிக்கல்வி - சார்நிலை பணி - அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பதவிகளில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்களை கோருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி - சார்நிலை பணி - அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பதவிகளில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்களை கோருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 055203/ சி3/ 2020, நாள்: 02-12-2020...

>>> பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...