கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு...

 


மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிக்காட்டுதல்களின்படி , “கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் மையங்கள் ( Leaners Literacy Centers ) துவங்கப்பட்டு முதற்கட்டமாக , ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , கற்போர் மையச் செயல்பாடுகள் , தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை தொடர்ந்து கண்காணித்திடும் பொருட்டு பார்வை ( 2 ) -இல் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்ட இயக்குநர் ஆலோசனைகளின் அடிப்படையில் TN - EMIS கைபேசி செயலியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகைப் பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பார்வை ( 3 ) இல் காணும் இவ்வியக்கக் கடிதத்தின்படி உரிய வழிக்காட்டுதல் நெறிமுறைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள 18.12.2020 அன்றைய TN - EMIS அறிக்கையின்படி கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் குறைந்த அளவில் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது . எனவே இனிவரும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மைய தன்னார்வல ஆசிரியர்கள் TN EMIS கைபேசி செயலியில் முன்குறிப்பிடப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகாக உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கட்டண விவகாரம் - ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை...

 கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க அனுமதிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி, அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது.

விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 2900 தனியார் பள்ளிகளுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 288 பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்த ரூ.16 கோடி சுழல் நிதி ஏற்படுத்தி, அதன்மூலம் அரசு கட்டணத்தை செலுத்துகிறது.

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை அறிந்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்.

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க அனுமதிக்காத பள்ளிகள் குறித்து எங்கள் கவனத்திற்கு வந்ததும், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி, பள்ளிகள் செயல்படுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக கட்டணம் வசூலிப்பதாக 16 பள்ளிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களுக்கே திருப்பி செலுத்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு (நாளிதழ் செய்தி)...

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பள்ளி, கல்லுாரிகளில், இன்று முதல், ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி, ‘டிவி’ வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால், கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு, நாளை முதல், 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், 28ம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

G.O.No.1470, Dated: 21-12-2020 - போராடிய மருத்துவர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - அரசாணை வெளியீடு...

 G.O.No.1470, Dated: 21-12-2020 - போராடிய மருத்துவர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - அரசாணை வெளியீடு...



ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை அமைச்சர் தகவல்...

 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை அமைச்சர் தகவல்...



நாளை (24.12.2020) முதல் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) /பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு (SMDC) உறுப்பினர்களுக்கு Online வழியே பயிற்சி நடைபெறவுள்ளது...

 நாளை (24.12.2020) முதல் SMC/SMDC  பயிற்சி Online வழியே நடைபெறும். அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 617/ C7 / SMC/ SMDC/ SS/ 2020, நாள்: 21-12-2020...

>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 617/ C7 / SMC/ SMDC/ SS/ 2020, நாள்: 21-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




OMR - விடைத்தாள் அதிரடி மாற்றம், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் இருந்தால் மட்டுமே Hall Ticket கிடைக்கும்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...