கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண்: 30 மற்றும் 31 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை), நாள்: 13.01.2021 - பின்பற்றி பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்...

 


அரசாணை எண்: 30 மற்றும் 31 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை), நாள்:  13.01.2021 - பின்பற்றி பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ... [School Education Secretary Letter D.O.No.: 19359/ GL-II /2020-7, Dated: 13-01-2021...]

>>> Click here to Download School Education Secretary Letter D.O.No.: 19359/ GL-II /2020-7, Dated: 13-01-2021...




19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை எண்: 31, நாள்: 13-01-2021 வெளியீடு...

 


19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை எண்: 31, நாள்: 13-01-2021 வெளியீடு... [G.O.Ms.No.30, Dated: 13-01-2021 (Reopening of Schools - SOP)]

>>> Click here to Download G.O.Ms.No.31, Dated: 13-01-2021...


19-01-2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை எண்.30, நாள்: 13-01-2021 வெளியீடு...

 


19-01-2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை எண்.30, நாள்: 13-01-2021 வெளியீடு... [G.O.Ms.No.30, Dated: 13-01-2021 (Reopening of Schools)]

>>> Click here to Download G.O.Ms.No.30,  Dated: 13-01-2021...


NMMS தேர்வுக்கு 20.01.2021 வரை விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...

 NMMS தேர்வுக்கு 20.01.2021 வரை விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 027369 / NMMS/ 2020, நாள்: 13-01-2021...

>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 027369 / NMMS/ 2020, நாள்: 13-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 13.01.2021(புதன்)...

 


🌹யார் நமக்கு உதவுகிறார்களோ,அவர்களை மறந்துவிடக்கூடாது.

யார் நம்மை நேசிக்கிறார்களோ,

அவர்களை வெறுத்து விடக்கூடாது.

யார் நம்மை நம்புகிறார்களோ,அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடக்கூடாது.!

🌹🌹வெகுளித்தனம்   என்பது 

மனதில் பட்டதையெல்லாம்   எல்லோரிடமும் பேசுவது  அல்ல.

மனதுக்கு பிடித்தவரிடம் மட்டுமே .  

தன்னை மறந்து மனதில் இருப்பதை எல்லாம் உளறி கொட்டுவதாகும்.!!

அனைவருக்கும் இனிய  காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                           ⛑⛑தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 ம் வகுப்பு மற்றும்12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும்-தமிழக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.

👉வகுப்புக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்- தமிழக அரசு                                                                       👉பள்ளி மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு.                                                                               👉10, 12ஆம் வகுப்பு    மாணவர்களுக்கான  விடுதிகள் செயல்படவும் அனுமதி                            ⛑⛑பாடங்களை விரைவாக முடிக்க வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு.

⛑⛑நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் , 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

⛑⛑அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 30.09.2020-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் - மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

⛑⛑நிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்- நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑⛑அரியா் தோ்வு அட்டவணையை பிப்.4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு

⛑⛑நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

⛑⛑ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும்' - விஜயகாந்த் அறிக்கை

⛑⛑போதிய வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம், தடையில்லா சான்று வழங்கியவர்கள் மீது வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு

⛑⛑இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களைத் தொடங்கலாம்: மத்திய அரசு அனுமதி

⛑⛑ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்.

⛑⛑மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை

-உச்சநீதிமன்றம் உத்தரவு

⛑⛑வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது 

நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி 

-ஸ்டாலின்

⛑⛑உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்ப பெற வேண்டும்.

⛑⛑புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வரவேற்பு

⛑⛑வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க

 👉அசோக் குலாட்டி,

 👉புபிந்தர் சிங் மன்,

👉அனில் கன்வாட்,  

👉பிரமோத் ஜோஷி ஆகியோர் அடங்கிய  குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு                                           

⛑⛑வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு 10நாளுக்குள் முதல் கூட்டத்தை நடத்த நீதிபதிகள் உத்தவிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள விவசாய விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசுடனும் நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தி உரிய பரிந்துரை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

⛑⛑அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொக  performance incentive-வை அறிவித்துள்ளது தமிழக அரசு                      

⛑⛑திரையரங்குகளுக்கு வரிச் சலுகை, மின் கட்டணச் சலுகை; கேரள அரசை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்: ஸ்டாலின்

திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். 

அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

⛑⛑எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி                                                                                                  ⛑⛑பாஜக குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அதிமுகவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

கூட்டணி கட்சிகளை அழிக்கும் அழிவு சக்தி பாஜக என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

⛑⛑முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் ஜனவரி 16-ல் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.*

தடுப்பூசியால் யாருக்கும் சிறு பக்க விளைவுகள் கூட ஏற்படாததால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

⛑⛑கோவிட் -19 தடுப்பூசியின் விலை, இந்தியாவில் ரூ.200 முதல் ரூ.295 வரை இருக்கும்"

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல்

அனைத்து மாநிலங்களிலும், ஜன.14 ஆம் தேதிக்குள் 100% மருந்துகள் கிடைக்கும்

கேரளா, மகாராஷ்டிராவில் மட்டுமே 50,000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர்"

நாடு முழுவதும் தற்போது 2,16,558 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்"

சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி தடுப்பூசிகளை வாங்க அரசு முடிவு.                       

⛑⛑4 மாதங்களில் ஆட்சி மாறும்; மக்களின் ஒவ்வொரு குறையும் தீர்வு பெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பிரச்சினை  தீர்க்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.விடம் சொன்னால் தீரும். மக்கள் கிராமசபையினால் குறைகள் தீருமா எனக் கேட்ட முதல்வருக்கு ஓர்  ஆதாரம் இது எனவும் கூறியுள்ளார்.                                                                ⛑⛑ராகுல் காந்தி வரும் நாளை ஜனவரி 14 அன்று  அவினியாபுரம் ஜல்லிக்கட்டு பார்வையிட வருகிறார்

⛑⛑பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

⛑⛑புனேவின் சீரம் இந்தியா நிறுவனத்தில் இருந்து 5.56 லட்சம்  கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன.

⛑⛑வரும் 18ம் தேதி முதல்வர் பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல்.

⛑⛑இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க நேபாளம் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளது.

- நேபாள பிரதமர் KP ஷர்மா ஓலி, தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேச்சு !

⛑⛑தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் பயணிகள் 4பேர் பலி.

சாலையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்து மின்கம்பியில் உரசியதால் விபத்து.

⛑⛑மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

- பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் .

⛑⛑தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கடற்கரை மற்றும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு தடை.

⛑⛑10 கோடி COVISHEILD தடுப்பூசிகளை அரசிடம் சிறப்பு விலையாக ரூ.200க்கு விற்பனை செய்துள்ளோம்.

பின்னர் அரசு அனுமதி வழங்கியவுடன் திறந்த சந்தைகளில் ரூ.1000க்கு விற்பனை செய்ய உள்ளோம்.

- அடார் பூனவல்லா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் CEO.

⛑⛑வூஹானில் கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவுக்கு அனுமதி வழங்கியது சீனா

வரும் 14ஆம் தேதி வூஹானில் நிபுணர் குழு ஆய்வு செய்ய உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

⛑⛑திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக புகார்.

⛑⛑கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி - தமிழக அரசு

⛑⛑உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

⛑⛑தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

⛑⛑பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு வழங்க 4 கோடி ஜிங்க் மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் ஒரிரு நாளில் மாத்திரைகள் பள்ளிக்கல்வித்துறையிடம் வழங்கப்படும் - மருந்துவ பணிகள் கழக இயக்குனர் உமாநாத் பேட்டி

⛑⛑“மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்”

-பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

⛑⛑தமிழகத்தில் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விருப்பத்திற்குகேற்ப மட்டுமே தடுப்பூசி செலுத்தபடுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை கண்காணித்து 2வது

முறை அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

காவல்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை மற்றும்

தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட முன்கள

பனியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முன்களப்பணியாளர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்வதற்கான

கால அவகாசம் ஜனவரி 25 வரை வழங்கப்பட்டுள்ளது.

- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

⛑⛑தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக திட்டங்களை அறிவித்து வருகிறது.

2 ஜிபி டேட்டா வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். மக்கள் அவர்களுக்கு டாடா காட்ட தயாராகி விட்டார்கள்

- மு.க. ஸ்டாலின்

⛑⛑இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பிரேசில் அரசு COVAXIN தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை வாங்க முதல் நாடாக பிரேசில் ஒப்பந்தம்.

⛑⛑தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் மத்திய உள்துறை செயலர் திரு அஜய் பல்லா நேற்று கலந்துரையாடல் மேற்கொண்டார்.

⛑⛑மூன்று கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்; மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர்

மோடி அறிவிப்பு.

⛑⛑நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி

செலுத்துவதற்கான பணிகள் தீவிரம்;

கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 1 கோடி

டோஸ்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்.

⛑⛑அமைச்சர்களோடு தேர்தல் குறித்து

பேசவில்லை வன்னியர்களுக்கான

இட ஒதுக்கீடு குறித்துதான் பேசினேன்;

பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்.

⛑⛑பட்ஜெட்டில் 'செஸ்' எனப்படும் துணை வரிகள் விதிக்கப்படலாம் : கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட மத்திய அரசு திட்டம்.

⛑⛑விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது சோனி டிஜிட்டல் சினிமாஸ் நிறுவன ஊழியர் என கண்டுபிடிப்பு.

⛑⛑அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு 2வது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

Shaala Siddhi Login Password மறந்து விட்டீர்களா? - 3 வழிகளில் Reset Password செய்யும் வழிமுறைகள்...


 Shaala Siddhi Login Password  மறந்து விட்டீர்களா? - 3 வழிகளில் Reset Password செய்யும் வழிமுறைகள்...


>>> Click here to Download Password Reset Procedure...


Shaala sidhi password reset செய்வது எப்படி?


 Note : Please input valid Mobile No./Email Id / Both which were given at the time of creation of user .


METHOD - 1 


Step 1 : Click Forgot password below the login page 


Step 2 : Enter your UDISE code 


Step 3 : Enter OTP sent to the mobile number used at the registration time 




METHOD - 2 


Step 1 : Click Forgot password below the login page 


Step 2 : Select Get PIN OTP in the top 


Step 3 : Enter your UDISE code 


Step 4 : Enter the mobile number or E - mail id used at the registration time 




METHOD - 3 


Step 1 : Click Forgot password below the login page 


Step 2 : Select Forgot PIN OTP in the top 


Step 3 : Enter your UDISE code 


Step 4 : System will send a request to NUEPA when you click on Send button .






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகள் திறப்பு - `வைட்டமின் மாத்திரைகளுடன் 25 மாணவர்களுக்கு மிகாமல்.!’ - ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கும்...

 


ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கும் நிலையில் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இடையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று அனுமதி வழங்கி, பிறகு எதிர்ப்புகளால் மீண்டும் அந்த அனுமதியை நாள் குறிப்பிடாமல் தள்ளிப்போட்டது அரசு. பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்தது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறைகள் முடிந்து வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிகள் அனைத்தும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும், ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவும் அறிவுறத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...