கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Schools Re-Opening லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Schools Re-Opening லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01-06-2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - DSE செயல்முறைகள்

 

2026-27- School Reopening - Hon'ble Educational Minister Review _ Instructions


01.06.2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. 

முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்

ந.க.எண் : 016677/எம்1/இ1/2026, நாள் : 18.05.2026


பொருள்: மாண்புமிகு பள்ளிக் கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று ஆய்வு கூட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டு தொடங்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் - தொடர்பாக.


மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் ஒன்று. இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்கள் வெளியிடப்பட்டது.


மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாட நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


குழந்தைமைய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடங்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன


மேலும், மாணவர்களது உடல் இயக்க திறன்கள் (Motor ) சமூக மனவெழுச்சித் திறன்கள். விழுமியங்கள், வாழ்க்கை திறன்களை உள்ளடக்கிய பாடப்பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப்பின் 01.06.2026 திங்கள் கிழமையன்று திறக்கப்படும் எனவும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.


பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுபப்பட்டுள்ளது. இப்பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பின்வரும் அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது.


* 2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் (பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து கல்வி அலுவலர்கள். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


* பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HI--Tech Lab) பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.


* பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.


* பள்ளி வளாகத்திலோ அல்லது வருப்பறைகளிலோ தேவையற்ற/பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அவற்றினை அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks) கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.


* தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.


* 2025-26ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் முறையே ஆறாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளை  தலைமையாசிரியர்களும் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்/ அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்  ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி) / மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்குநர்


பெறுநர்


1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) 

3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1. அரசு கூடுதல் தலைமைச் செயலளார். பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-00 அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது. 

2. மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06. அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது. 

3. மாநிலத் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06. அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது.

4. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு...

 

 கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




*🔸2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு*


2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். 


எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். 


அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை


*பள்ளிக் கல்வி இயக்குநர்*







2023-2024ஆம் ஆண்டு - அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 2023-2024ஆம் ஆண்டு - அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 45454/ எம்/ இ1/ 2023, நாள்: 22-12-2023...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 45454/ எம்/ இ1/ 2023, நாள்: 22-12-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு) SOPs - Related to Re-Opening of Schools (Government, Govt. Aided and Private) - For Health, Hygiene and Other Safety Protocols before Opening of Schools......



பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான  நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு)...


>>> Click here to Download Standard Operating Procedures (SOPs) - Related to Re-Opening of Schools (Government, Govt. Aided and Private) - For Health, Hygiene and Other Safety Protocols before Opening of Schools...



பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்ற உத்தரவு.


50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தல்.


ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசு.


மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.


அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை.


வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 

>>> பள்ளிகள் திறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு...


தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும்(Schools will be Reopen on 01-09-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு(செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021)...



தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...


செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021...


💥செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


💥1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.


கூடுதல் விவரம்...👇🏻👇🏻👇🏻






முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :

* 1.9.2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். 
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

* மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.



செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது‌ - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்(Schools will be Reopen from September 1)...


செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது‌ - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல்...





கொரோனா தொற்று பாதிப்பிருந்தால் இனி பள்ளியை மூடக்கூடாது...

 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பிருந்தால், பள்ளியை மூடாமல், அந்த வகுப்பறையை மட்டும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன; 10 மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடந்தன. பின், கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், டிச., 2ல் கல்லுாரிகளும்; ஜன., 19ல் பள்ளிகளும் திறக்கப்பட்டன.கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களும், பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, ஜன., 20 முதல் அரசு பள்ளிகளில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.அதில், மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே, அறிகுறியில்லாத கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்நிலையில், இனி வரும் நாட்களில், மாணவர்களுக்கு தொற்று உறுதியானாலும், பள்ளிகளை மூட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதற்கு பதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகளை மட்டும் மூடி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். தொற்று உள்ள மாணவரின் வகுப்பறையில் உள்ள, நெருக்கமான மாணவர்களுக்கு மட்டும், தொற்று சோதனை நடத்த வேண்டும்.

அதில், தொற்று உள்ளவர்களை மட்டும் சிகிச்சைக்கு அனுப்பி விட்டு, மற்றவர்களை தினமும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். வகுப்பறையை வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல் (Check List)...


 >>> பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல் (Check List) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு (IAS, DIRECTOR, JD) அலுவலர்கள் பட்டியல் வெளியீடு...

பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு (IAS, DIRECTOR, JD) அலுவலர்கள் பட்டியல் வெளியீடு...

>>> பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள் பள்ளி திறப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு வேண்டிய கடிதம் - பள்ளிக் கல்வித் துறையால் வெளியீடு- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...

 


அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள் பள்ளி திறப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு வேண்டிய கடிதம்  - பள்ளிக் கல்வித் துறையால் வெளியீடு- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்... ( Private School Consent Letter )...

>>> Click here to Download Private School Consent Letter ...



பள்ளி திறப்பு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள்...

 பள்ளி திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள் - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 8349/ ஆ4/ 2020, நாள்: 12-01-2021...

>>> பள்ளி திறப்பு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


13-01-2021 புதன் கிழமை அன்று நடந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்...

 


1. மாணவ/மாணவியர்கள்   water can மற்றும் சாப்பாடு  வீட்டிலிருந்தே கண்டிப்பாக  எடுத்து வர வேண்டும்

2. Mask முக கவசம் கண்டிப்பாக  அணிந்திருக்க வேண்டும்

3. குடிதண்ணீர் உணவு snacks  எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது

4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்ய பட்டுள்ளது

5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள்

6. தேர்வை குறித்த பயம் தேவையில்லை

தேர்வு நிச்சயமாக நடைபெறும்

7. Class room, Lab maximum strength 25 students

8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள்

,9. All Teachers should come to school 9:30 to 4:30

No special classes

No evening class

10.BT teachers should give 10th classes

PG teachers should give 12th classes

Other special teachers PET SGT maintain decipline   Thermal scanner, sanitiser

11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும்

12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது

13. மாணவ/மாணவியர்கள் எவரேனும் உடல்நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு/சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும்

14. விட்டமின் மற்றும் zinc   tablet பள்ளியிலே வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்

15.No Assembly prayer

No co curricular activities

No Extra curricular activities

No PET period

No sports

16. பேருந்து பஸ் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் சைக்கிளில் வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் பெற்றோர்  அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும்

17.concern letter parent sign பெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும் மாதிரிப் படிவம் வழங்கப்படும்

18. எந்த ஒரு மாணவரையும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது

19. பள்ளி வளாகத்துக்குள் கூட்டம் கூடுவது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

20. பள்ளி முடியும் நேரம்:

10th std 4:15 மணிக்கும்

12th std 4:30 மணிக்கும் விட வேண்டும்

21.அனைத்து வித ஆசிரியர்களும் 18-01-21 முதல்100சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்

22 .ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு councilling மட்டுமே கொடுக்கப்படவேண்டும்.

23. அனைத்து ஆசிரியர்களும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 19-01-21 முதல் பள்ளி செயல்படுவதை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.

19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை எண்: 31, நாள்: 13-01-2021 வெளியீடு...

 


19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை எண்: 31, நாள்: 13-01-2021 வெளியீடு... [G.O.Ms.No.30, Dated: 13-01-2021 (Reopening of Schools - SOP)]

>>> Click here to Download G.O.Ms.No.31, Dated: 13-01-2021...


19-01-2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை எண்.30, நாள்: 13-01-2021 வெளியீடு...

 


19-01-2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை எண்.30, நாள்: 13-01-2021 வெளியீடு... [G.O.Ms.No.30, Dated: 13-01-2021 (Reopening of Schools)]

>>> Click here to Download G.O.Ms.No.30,  Dated: 13-01-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்