தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 16050/ சி4/ இ2/ 2020, நாள்: 25-01-2021...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - மத்திய அரசு...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,
பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தலாலே முன்னெச்சரிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு பள்ளிகள் பொருளியல்(Economics) முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு...
அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
11ஆம் வகுப்பிற்கு(11th Standard) 40% குறைக்கப்பட்ட பாடத்திட்டம்(+1 Reduced Syllabus) விவரம்...
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். தற்போது 11ம் வகுப்பிற்கான 40% வரை குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன..
>>> பதினொன்றாம் வகுப்பு (தமிழ் வழி) குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> 11th Standard (English Medium) Reduced Syllabus...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - தொடங்கியது அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்...
தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த உள்ள அதிகாரிகளுக்கு திருச்சியில் 4 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4 நாள் பயிற்சி முகாமை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்துள்ளார். தென்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் என 20 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 118 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பாதிப்பிருந்தால் இனி பள்ளியை மூடக்கூடாது...
மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பிருந்தால், பள்ளியை மூடாமல், அந்த வகுப்பறையை மட்டும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன; 10 மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடந்தன. பின், கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், டிச., 2ல் கல்லுாரிகளும்; ஜன., 19ல் பள்ளிகளும் திறக்கப்பட்டன.கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களும், பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, ஜன., 20 முதல் அரசு பள்ளிகளில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.அதில், மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே, அறிகுறியில்லாத கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்நிலையில், இனி வரும் நாட்களில், மாணவர்களுக்கு தொற்று உறுதியானாலும், பள்ளிகளை மூட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதற்கு பதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகளை மட்டும் மூடி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். தொற்று உள்ள மாணவரின் வகுப்பறையில் உள்ள, நெருக்கமான மாணவர்களுக்கு மட்டும், தொற்று சோதனை நடத்த வேண்டும்.
அதில், தொற்று உள்ளவர்களை மட்டும் சிகிச்சைக்கு அனுப்பி விட்டு, மற்றவர்களை தினமும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். வகுப்பறையை வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...