கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?

 


ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் பெறுவது போல் வாக்காளர் அட்டையும் டிஜிட்டல் முறையில் பெற முடியும். சரி டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம். 

இண்டர்நெட் இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கம்பியூட்டர் அடிப்படைத் தேவையாக உள்ளது. 5 மாநில தேர்தல் இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அனைவரும் பெற முடியா..?

இதை வைத்து வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய முடியுமா..? 

டவுன்லோடு செய்வது எப்படி..? 

கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ பயன்படுத்தவும். 

https://voterportal.eci.gov.in/ 

https://nvsp.in/Account/Login

இணையதளத்தில் login செய்ய வேண்டும்.

இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி-யை கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும்.

கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இந்த டிஜிட்டல் சேவை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 தேதி காலை 11.14 மணி முதல் மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 31 வரை முதல்கட்டமாக இந்தச் சேவை புதிய வாக்காளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. வாக்காளர் அட்டையைப் பெறுவதற்காக மொபைல் நம்பர் உடன் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரையில் வழங்கப்படும். மொபைல் நம்பர் உடன் பதிவு செய்தவர்களுக்குத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இரண்டு தளத்தில் இருந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்ய முடியும். 

அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைத்துள்ள அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை மேலே குறிப்பிட்டு உள்ள வழிமுறையைப் பயன்படுத்தி டவுன்லோடு செய்துகொள்ள முடியும். மொபைல் நம்பர் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைக்காதவர்கள் உங்களின் தரவுகளைத் திருத்தி அல்லது சரிபார்க்கப்பட்டுத் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண் இணைக்கப்பட்ட பின் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்யும் சேவையைப் பெறலாம்.

டவுன்லோடு செய்யப்படும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை pdf பார்மெட்-ல் இருக்கும். பாதுகாப்புக் காரணிகள் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் QR கோட் இருக்கும், இந்த QR கோட்-ல் வாக்காளரின் புகைப்படம், அவரது பிராந்திய தகவல், முகவரி ஆகியவை இருக்கும். மேலும் இதைப் போலியாகத் தயாரிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதை வைத்து வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்யலாம். அது மட்டுமல்லாமல் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அரசின் டிஜிலாக்கர் சேவையில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் முடியும்.

காலியாகவுள்ள MBBS, BDS இடங்களுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்...

 


மருத்துவ, பல்மருத்துவ படிப்பில் காலியாகவுள்ள இடங்களில் சேர 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தரவரிசையில் இடம்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. சுயநிதி மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 177 MBBS, 459 BDS இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கொரோனா - இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் பிரேசிலின் மனவ்ஸ் நகரம் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...


 இரண்டாம் அலை குறித்த பேச்சுகள் கிட்டத்தட்ட இந்தியாவில் குறைந்து விட்ட சூழ்நிலையில் 

பொதுவெளியில் முகக்கவசம் அணிவது மிகவும் அரிதாகி விட்ட நிலையில் 

சிறு பெரு விழா மற்றும் வைபவங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து விட்ட சூழ்நிலையில் 

நாமும் ஒருவகை COVID COMPLACENCY எனும் மெத்தனப்போக்குக்குள் நுழைந்து விட்டோம். 

ஆனால் நேற்று 27.1.2021 லான்சட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள மனவ்ஸ் ( Manaus)  நகரின் தற்போதைய நிலை  நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது 

ப்ரேசில் நாட்டில் உள்ள அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரம் தான் மனவ்ஸ் நகரம் 


20 லட்சம் மக்கள் வாழும் ஊர் 

கடந்த 2020 ஏப்ரல் மே மாதங்களில் கொரோனாவின் முதல் அலை வாரி அடித்துச்சென்ற ஊர் இது. 

கிட்டத்தட்ட 76% பேருக்கும் மேல் மக்களுக்கு தொற்று ஏற்பட்டு மந்தை எதிர்ப்பாற்றல்(Herd Immunity)  வந்து விட்டது என்று பேசப்பட்ட ஊர். 

கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட முதல் அலைக்குப்பிறகு  நவம்பர் மாதம் வரைஉள்ள

ஏழு மாதங்கள் அடுத்த அலையின் எந்த அறிகுறியும் இன்றி ஊர் அமைதியாகவே இருந்துள்ளது. 

இந்நிலையில் திடீரென்று 

டிசம்பர் மாதம் முதல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபாட்டை மீறிச் சென்றது. 

மே மாதம் - 338 மரணமடைந்தது தான் கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட அதிக பட்ச ஒரு மாத இழப்புக்கணக்கு 

ஆனால் 

ஜனவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே 1333 பேர் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு இறந்துள்ளனர்.  

இழப்பு முந்தைய அலையை விட  மூன்று மடங்காக உயர்ந்துள்ளது 

மேலும் வெறும் ஒரு மாதத்திற்குள் திடீரென அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்த முப்பது மருத்துவமனைகளும் நிரம்பி விட்டன. 

ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனி ஸ்தம்பித்து நிற்கிறது. 

மக்கள் தங்களது உறவினருக்கு வேண்டிய ஆக்சிஜனை நிரப்ப வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். 

இருப்பினும் ஆக்சிஜன் கிடைப்பது உறுதியற்ற நிலையிலேயே உள்ளது. 

அங்கே  முதல் லாக்டவுன் மார்ச் மாதம் போடப்பட்டது.  

ஜூன் மாதம் முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது .

பிறகு ஜூலை மாதம் முதல் மெல்ல மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டன. 

நவம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 

நவம்பர் இறுதியில் பொழுதுபோக்கு ஸ்தாபனங்கள் திறக்கப்பட்டன 

டிசம்பர் இறுதியில் இருந்து இரண்டாம் அலை ஆரம்பித்தது. 

ஜனவரி மாதம் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் அளவு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது 

இது ஏதோ நானே எழுதும் கதை அன்று மக்களே.. 

பிரேசிலின் முக்கியமான நகரில் நிகழ்காலத்தில் நடக்கும் செய்தியை பகிர்கிறேன். 

இதற்கான காரணங்களாக  கூறப்படுவது

💮 முகக்கவசத்தை மக்கள் மறந்தது 

💮 அளவுக்கு மீறிய ஊரடங்கு தளர்வு 

💮 மக்களிடையே கோவிட் குறித்த 

அலட்சியம்

💮 ஆட்சியாளர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை 

💮 கொரோனா வைரஸ் P.1 எனும் புதிய உருமாற்றம் அடைந்து வேகமாக பரவுவதும் வீரியத்துடன் இருப்பதும் ஆகும். 

இந்த செய்தியை நான் பகிர்வது 

மக்களை அச்சமூட்ட அன்று.

எச்சரிக்கை செய்வதற்கு மட்டுமே. 

மனவ்ஸ் நிலை நாளை நமது ஊருக்கு நேராமல் நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும். 

நிலைமை கைமீறும் முன் 

நிச்சயம் நாம் எச்சரிக்கை கொள்ள வேண்டும் 

💮முகக்கவசம் அணிவோம் 

💮தேவையற்ற பயணங்களை தவிர்ப்போம் 

💮தனிமனித இடைவெளியைப் பேணுவோம் 

💮கைகளை வழலை கொண்டு கழுவுவோம் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஆதாரம் 

1. லான்சட் இதழ் 

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00183-5/fulltext


2.https://www.cnn.com/2021/01/27/americas/manaus-brazil-covid-19-new-variant-intl/index.html


3.https://www.cnn.com/2021/01/25/americas/brazil-manaus-covid-second-wave-intl/index.html


4.https://www.bbc.com/news/world-latin-america-55670318


அரசாணை வெளியிட்ட அரசு - ஆனாலும் போராட்டத்தை தொடரும் மாணவர்கள் - என்ன நடக்கிறது சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில்?

 


சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைப் போலவே, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி, தொடர்ந்து 51 நாட்களாக அறவழியிலும் நூதன முறையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுக்க மறுத்து பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

அதேவேளையில் மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து 51வது நாளான இன்று தமிழக அரசு சார்பில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மாறுவதாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனை அறிந்த மாணவர்கள், 'இது எங்களின் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தெளிவான விளக்கம் அந்த அரசாணையில் இல்லை. இது என்றிலிருந்து அமலாக்கப்படுகிறது என்ற தெளிவும் இல்லை. எனவே இந்த ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெளிவான விளக்கத்தை அறிவிக்கும்வரை போராட்டம் தொடரும்' என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளதால், பல்கலைக்கழக வளாகத்தில் குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது...

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


 அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அரசு ஊழியர் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய அரசு ஊழியர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அரசு ஊழியர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் முதலமைச்சர் பழனிசாமி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதும், அந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுத்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.01.2021 (வெள்ளி)...

 


🌹நாம் செய்த புண்ணியமும், தர்மமும் நாம் இடம் தெரியாத இடத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றும்.!

🌹🌹எந்நிலையிலும் நம்மை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதிப்போம் அப்போதுதான் வாழ்க்கை அழகாக இருக்கும்.!!

🌹🌹🌹கல்லால் அடிக்கும் காயங்களை விட சொல்லால் அடிக்கும் காயங்களுக்குத் தான் வலிகள் அதிகம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.அம்மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு

🍒🍒உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

🍒🍒11 ஆவது ஊதிய ஆணையை அறிக்கை கேரள முதல்வரிடம் நாளை ஒப்படைப்பு

🍒🍒ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club) - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🍒🍒சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி அறிவிக்கப்படும். - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

🍒🍒தழிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிமூப்பின் அடிப்படையில் 01.012021 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் சார்பில் தற்காலிக பெயர் பட்டியல் தயார் செய்து வெளியிடுதல் - சார்பாக - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் வெளியீடு. - நாள். 25.012021

🍒🍒117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்புவதற்காக கலந்தாய்வை மேலும் ஒரு வாரம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

நேற்றிலிருந்து ஒரு வாரத்திற்கு மருத்துவ இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த அனுமதி

🍒🍒தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

🍒🍒கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 10-ம் வகுப்பு நீங்கலாக 3 முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் நடைபெற உள்ளன. இணைய வசதி இல்லாத அல்லது தொழில்நுட்பச் சிக்கல் உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்

🍒🍒பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.

🍒🍒DGE - 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பது சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🍒🍒9, 10, 12 ஆகிய வகுப்புகளை தொடர்ந்து 11-ம் வகுப்பிற்கும் பாடத்திட்டம் குறைப்பு 

🍒🍒குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 

🍒🍒பொதுமுடக்க காலகட்டத்தில் கல்லூரி பருவத் தேர்வு நடந்ததாக அண்ணா பல்கலை சான்றிதழ்: மாணவர்கள் குழப்பம் - நாளிதழ் செய்தி 

🍒🍒தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிப்.28-ல் முனைவர் பட்ட சேர்க்கை நுழைவுத் தேர்வு.

கொரோனா தொற்று காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது தற்போது நடைபெறவுள்ளது. 

🍒🍒தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை - தனியார் கல்லூரி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு.

🍒🍒திமுக வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்கிறார் ராமதாஸ் 

- ஸ்டாலின்                                                                        

🍒🍒இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

🍒🍒வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள்

🍒🍒சர்வதேச விமானங்கள் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு 

விமான போக்குவரத்து அமைச்சகம்

🍒🍒2020ம் ஆண்டு உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்து ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் முதலிடம்.

🍒🍒5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31- நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🍒🍒3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

🍒🍒உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆறு நாளில் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

🍒🍒சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக ராதிகா சரத்குமார் அறிவிப்பு

கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் என அறிவிப்பு

🍒🍒ஆம் ஆத்மி கட்சி அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கும் 6 மாநில தேர்தல்களில் போட்டியிரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், குஜராத், இமாச்சல் மற்றும் கோவா ஆகிய மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒மக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

🍒🍒தேர்தல் நிதிக்காக பிப்ரவரி 12 முதல் 18 வரை வைகோ சுற்றுப்பயணம்

🍒🍒சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப் 2 ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.இன்று மாலை 4.30 மணிக்கு  முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

🍒🍒ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித் ஆலோசனையில் உருவான ட்ரோன் பயன்படுத்தப்படவுள்ளது.

🍒🍒மெரினா அருகே உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்வில் ஒரே வண்ணத்திலான சேலை அணிந்து பங்கேற்றுள்ள மாணவிகள்.

மாணவிகளை பங்கேற்க கட்டாயப்படுத்தவில்லை என அமைச்சர் KP அன்பழகன் விளக்கம்.

🍒🍒மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு இல்லத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் வேதா நிலையம் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.

🍒🍒ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி

24ஆம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

காமராஜர் சாலையில் ஜெயலலிதாவின்

வெண்கலச் சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

🍒🍒நம்ம CHENNAI  என்ற செல்ஃபி மையத்தை சென்னை மெரினா கடற்கரையில் திறந்து வைத்தார்-முதல்வர் பழனிசாமி

🍒🍒அ.இ.அ.தி.மு.க-லிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் கரூர் V.V. செந்தில்நாதன்.

🍒🍒நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையை  16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்

🍒🍒5 ஜி சேவையை ஐதராபாத்தில் அறிமுகம் செய்துவைத்தது ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம்

🍒🍒காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், இன்று பாஜகவில் இணைந்தார்

🍒🍒3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம்

இரண்டு இடங்களிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம், பாஜக மாநில மைய குழு கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி உறுதியான நிலையில் நட்டா மதுரையில் இருக்கும் 30ம் தேதி, ஓபிஎஸ் இபிஎஸ் மதுரையில் இருக்கிறார்கள்.

🍒🍒நாடாளுமன்றம் நோக்கி நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு; வரும் 30 ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு.

🍒🍒ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம்

பாதிக்கப்பட்டுள்ளது; பிரதமரின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் விமர்சனம்.

🍒🍒இலங்கையில் எதிர்காலத்தில் வன்முறைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சர்வதேச சமூகம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளுக்கு செவிசாய்க்க வேண்டும் - ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை.

🍒🍒அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவன் / அல்லது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

🍒🍒உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டை தென்னாப்பிரிக்க அதிபர் கூறியுள்ளார்.

🍒🍒ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுக்கு தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

11ஆவது ஊதிய ஆணையை அறிக்கை கேரளா முதல்வரிடம் நாளை(இன்று) ஒப்படைப்பு...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

  கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...