கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை நிலை எண்: 9, நாள் :02-02-2021, JACTTO GEO போராட்டம் - அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தல் - அரசாணை வெளியீடு...

 


அரசாணை நிலை எண்: 9, நாள் :02-02-2021, ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தல் - அரசாணை வெளியீடு...

>>> அரசாணை நிலை எண்: 9, நாள் :02-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர்கள் - வீடு கட்டும் முன்பணம் விண்ணப்ப படிவம்...

 


அரசு ஊழியர்கள் -  வீடு கட்டும் முன்பணம் விண்ணப்ப படிவம்... (APPLICATION FOR HOUSE BUILDING ADVANCE )

APPLICATION FOR HOUSE BUILDING ADVANCE (HBA)


1. Name of the Applicant (in block letters) _______________________________


2. Designation (Gazetted/Non Gazetted) ________________________________


3. Father’s/Husband's Name ________________________________


4. Name of Deptt./Branch _______________________________


5. Emolument on which the loan is admissible ____________________________


6. (i) Basic Pay Rs..____________________


(ii) Dearness Pay Rs.__________________


(iii) Special Pay/NPA Rs._______________


(iv) Total (i) to (iii)__________________________


Head of Account _________________________


(i) G.P Fund Accont No.__________________


(ii) Salary Bank _____________________& Account No.__________________


8. Amount of advance applied for________________________________


Recoverable in _________________instalments of Rs.____________


9. Purpose of advance now: applied for_________________________________


10. Whether any advance has been drawn previously for house


building/repairs/Extension of house under any rules/scheme if so:


i. Date of drawal of the advance ___________________________


ii Purpose for which the advance was drawn. ___________________________


iii Amount of advance drawn



>>> CLICK HERE TO DOWNLOAD APPLICATION FOR HOUSE BUILDING ADVANCE ( 12 PAGES PDF) ...



அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு விதிமுறையை வகுக்கலையாம் - அரசு தகவல்...

 


வேலைநிறுத்த போராட்ட காலத்தை முறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை...

 


இன்றைய செய்திகள் தொகுப்பு... 04.02.2021 (வியாழன்)...

 


🌹நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.                                                           நாமே தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும் இழப்புகளும் தான் மிஞ்சும்.!

🌹🌹அடிச்சா தான் வலிக்கும்னு இல்ல நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட நடிச்சாக் கூட வலிக்கத் தான் செய்கிறது.!!

🌹🌹🌹யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது.ஏனெனில் இன்று நாம் பலம் மிக்கவராக இருக்கலாம் .

ஆனால் காலம் நம்மை விட பலம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்- அறிவுரை வழங்குதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

👉வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை

👉இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு

👉மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்.

📕📘சித்தா மருத்துவ படிப்புதரவரிசை வெளியீடு

📕📘தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

📕📘தினமும் 12 கி.மீ. நடந்து சென்று உணவு வழங்கிய குன்னூர் அங்கன்வாடி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது

📕📘ஸ்ட்ரைக் காலத்தை முறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

📕📘DSE - அரசு வழங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) எந்தவொரு குறைபாடும் இன்றி கண்டிப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

📕📘கலைச் சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சொல்லின் தாய் விருது: தமிழக அரசு அறிவிப்பு

📕📘சான்றிதழ் சரிபார்க்கப்பட்டும் பணி நியமன ஆணை வழங்காததால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வீட்டை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.

📕📘வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு.

📕📘SMC TRAINING & SCHOOL SAFETY AND SECURITY TRAINING EXTENDED UPTO 15-02-2021

📕📘G.O 9 - JACTTO - GEO வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் இரத்து - அரசாணை வெளியீடு

📕📘சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள்  மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது 

📕📘வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு

📕📘அகில இந்திய அளவில் சிஏ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சேலம் மாணவர் இசக்கிராஜ் சாதனை படைத்துள்ளார்

📕📘பள்ளிக் கல்வி – ஆதிதிராவிடர் மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 

📕📘பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் 

📕📘ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

📕📘முதுகலை பட்டதாரி (பொருளியல்)  ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

📕📘மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ம் தேதி வரை www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

📕📘அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்த புதிய தலைமைச்செயலர் தலைமையில் ஆலோசனை என தகவல்.

📕📘தர்மபுரி மாவட்டம் ரஜினி ரசிகர் மன்றம் துணை பொது செயலாளர் கௌசல்யா கிருபாகரன் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.                                                📕📘வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் - விவசாய போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ்

📕📘நடைமுறை சிக்கலின் காரணமாக திருவாரூர் - காரைக்குடி இடையேயான ரயில் சேவை தற்போது தொடங்குவதற்கான சூழல் இல்லை" -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்_

📕📘அதிமுக சட்டம் பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலே மட்டும் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும்.-டிடிவி

📕📘அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி

நிர்வாகத் தலைவராக  நியமனம் செய்யப்படுவார் என அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது

📕📘தமிழகத்தின் தஞ்சாவூர்,நெய்வேலி,வேலூர், இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு .

📕📘பெரும்பாலும் சர்வாதிகாரிகளின் பெயர்கள் 'M' எனும் எழுத்தில் ஆரம்பிப்பது ஏன் ? - ராகுல் காந்தி.

📕📘அமைச்சர் காமராஜ் பூரண குணம் அடைந்துள்ளார். நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 95 சதவீத நுரையீரல் பாதி போடு அனுமதிக்கப்பட்ட காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளார் - விஜயபாஸ்கர்.

📕📘குடிமக்கள் தேசிய பதிவு  என்ற பெயரில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் NRC-ஐ  செயல்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

- மம்தா பானர்ஜி

📕📘விவசாயிகள் விவகாரம்: 

பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனை

விவசாயிகள் பிரச்சினை காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பி வரக் கூடிய நிலையில் ஆலோசனை.

📕📘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொது செயலாளராக ராதிகா சரத்குமார் நியமனம்.

📕📘உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு. 

விஜய் ஹசாரே போட்டியில் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார்.

📕📘வரும் 11ம் தேதி கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் மநீம பொதுக்குழுக் கூட்டம்; பொதுக்குழு உறுப்பினர்கள் 650 பேருக்கு அழைப்பு, தேர்தல், கூட்டணி தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு.

📕📘உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது 

இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும்

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் 

- சச்சின்

📕📘கோவையில்  மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து  நடந்த போராட்டத்தில் சட்டநகல்களை எரிக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கிய வயதான தொழிற்சங்க நிர்வாகி நெஞ்சுவலிப்பதாக கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

📕📘80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு போட

விண்ணப்பித்தால் அனுமதி - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

சத்யபிரதா சாகு தகவல்.

📕📘நாடு முழுவதும் அடுத்த மாதம் வரை தடுப்பூசிக்கான செலவை

ஏற்றது மத்திய அரசு - 82 சதவீத தொகையை பி.எம். கேர்ஸ்

நிதியம் வழங்கும் என அறிவிப்பு.

📕📘விமானப்படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயில் 83 தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்து.

📕📘நாட்டின் பாதுகாப்பில் இனியும் பிற நாடுகளை சார்ந்திருக்க

முடியாது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்.

📕📘இங்கிலாந்தில் புதிதாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

📕📘தனது அண்டை நாடுகளிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுவது கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

📕📘அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு - வெள்ளை மாளிகை கண்டனம்.

📕📘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு.

📕📘ஐசிசி புதிதாக அறிவித்துள்ள 'மாதத்தின் சிறந்த வீரா் விருது' இந்தியாவின் விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் உள்பட 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

📕📘இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து சவூதிக்குள் நுழைய தடை

📕📘பெங்களூரில் சசிகலாவை சந்திக்க சென்ற கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம்.

📕📘தனது பிறந்தநாளையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்றார் OP.ரவீந்தரநாத்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய (04-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 


மேஷம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


பரணி : தனவரவுகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆதாயமான நாள். 

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

மனதில் மாற்றமான சிந்தனைகள் தோன்றும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.


ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகையால் சுபச்செலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளும், ஆதரவுகளும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : சுபச்செலவுகள் உண்டாகும். 


திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திமமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதியான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் எண்ணிய விதத்தில் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் : நிம்மதியான நாள்.


அஸ்தம் : தனவரவுகள் மேம்படும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சுவாதி : குழப்பமான நாள்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : சோர்வு நீங்கும்.


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கேட்டை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். வாரிசுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வங்கி தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


பூராடம் : மனம் மகிழ்வீர்கள்.


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : சுபிட்சம் ஏற்படும்.


திருவோணம் : ஆதரவான நாள்.


அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகள் எதிர்பார்த்தபடி அமையும். பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் கூட காலதாமதமாக நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : மனவருத்தங்கள் நேரிடும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...