கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அதிகளவிலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணியிடங்கள்:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. மேலும் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் ஏராளமானோர் வேலையிழந்தனர். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்த நிர்பந்தித்து, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டில் வழக்கமானதை விட அதிகளவிலான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.


எனவே பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் பொழுது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் – மாணவர் விகிதம் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில்  கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்ட பின்னரே ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு(6, 7, 8th Standard) குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (Reduced Syllabus) வெளியீடு...

 


6 TO 8th Std - Reduced New Syllabus 2021 Published...

தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


>>> 6 - 8 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் - குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...


>>> 6th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here...


>>> 7th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here...


>>> 8th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here...


இன்றைய (09-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 


மேஷம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நன்மையளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் திடீரென குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : சாதகமான நாள்.


பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.


கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

உத்தியோகம் தொடர்பான முடிவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பமும், காலதாமதமும் உண்டாகும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக கிடைக்கும். வாக்குவன்மையால் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய எடுத்த முயற்சிகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


திருவாதிரை : முயற்சிகள் மேம்படும்.


புனர்பூசம் : தடைகள் அகலும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

அரசியல் துறைகளில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான மனக்கவலைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.


பூரம் : தாமதங்கள் குறையும்.


உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். தனவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகள் தொடர்பான எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பழுப்பு



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : மாற்றமான நாள்.


விசாகம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

புதிய ஒப்பந்தங்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். உறவினர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல்களும், செலவுகளும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை கவனத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : லாபம் மேம்படும்.


அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.


கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நிம்மதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் மற்றும் மனைகளின் மூலம் லாபம் உண்டாகும். தொழில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : ஆதரவு கிடைக்கும்.


பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. தொழில் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.


திருவோணம் : குழப்பங்கள் அகலும்.


அவிட்டம் : இழுபறிகள் நீங்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். உறவினர்களின் ஆதரவினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : இன்னல்கள் குறையும்.


சதயம் : நட்பு கிடைக்கும்.


பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 09, 2021


தை 27 - செவ்வாய்

மாணவர்கள் எதிர்பார்த்த உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் எண்ணிய செயல்கள் நிறைவேறும். அரசாங்கத்தின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவின் மூலம் நன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


ரேவதி : மேன்மை உண்டாகும்.

---------------------------------------

இன்றைய (08-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் உரையாடும் பொழுது சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பொறுப்புகளும், உயர்வுகளும் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : உயர்வான நாள்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளில் சற்று தள்ளி இருந்து ஆலோசனைகளை கூறுவது நன்மையளிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களின் மூலம் விரயங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : அலைச்சல்கள் மேம்படும்.


மிருகசீரிஷம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உடைமைகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். மாணவர்கள் பயணங்களின்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் மூலம் தேவையற்ற இன்னல்கள் ஏற்பட்டு மறையும். தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும். பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : நெருக்கடிகள் குறையும்.


உத்திரம் : மந்தமான நாள்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சிறு இடையூறுகளுக்கு பின்பு கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பயணங்களின்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : கவனம் வேண்டும்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : அனுகூலமான நாள்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : நன்மதிப்பு மேம்படும்.


விசாகம் : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவாறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்பட்டால் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தடைபட்டு வந்த முதலீடுகள் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். பிறமொழி மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திமமான சூழ்நிலைகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வும், செயல்பாடுகளில் பொறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : சோர்வு உண்டாகும்.


திருவோணம் : பொறுப்புகள் குறையும்.


அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். புதிய செயல்பாடுகளில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் : ஆதரவு மேம்படும்.


சதயம் : மனமகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.


ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------

ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல்...

 தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களின் செயல்முறைகள்

ஓ.மு.எண். 01470 / அ 2 / 2015, நாள் 27-04-2015


பொருள்

தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 கீழ் திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பார் சில தகவல்கள் கோரியது - தகவல்கள் வழங்குதல் - சார்பாக.


பார்வை

திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பாரது மனு நாள் 06-04-2015 


பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி தங்களது மனு பரிசீலிக்கப்பட்டதில் தங்களால் கோரப்பட்ட நான்கு வினாக்களுக்கு சார்பாக கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்படுகிறது. 

  • ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் அவர்கள் பெறுகின்ற சம்பள ஏற்ற முறையில் உள்ள தர ஊதியத்தின் அடிப்படையில், இறங்கு வரிசையில் எழுத வேண்டும். 
  • ஒரு குறிப்பிட்ட பணியில் / பதவியில் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் (மு.ப. /பி.ப.) பணியில் சேர்ந்திருந்தால் அவர்களது பெயர்கள் பிறந்த தேதி மற்றும் அகர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும். 
  • ஒரே நாளில் இருவர் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் முதலிலும், வயதில் இளைவர் அவர்களுக்கு அடுத்தும் எழுத வேண்டும். 
  • இருவருக்கும் பிறந்த தேதி ஒன்றாகவே இருக்குமேயானால் அவர்களது பெயர்கள் அகர வரிசை அடிப்படையில் எழுதப்படும். 
  • மேலும் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படுவதற்கு பாடம் சம்மந்தமாக முன்னுரிமை ஏதும் வழங்கப்படுவதில்லை. 

மேற்கண்ட தகவல்கள் தங்களால் ஆட்சேபிக்கப்படுமேயானால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்துக்கொள்ளலாம்.



9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக் கல்வித்துறை முடிவு...

 


9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாகவும், கரோனா முன்னெச்சரிக்கை காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா ஊரடங்கை அடுத்து, 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்குப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அவற்றைப் பள்ளியில் மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 25 பேர் மட்டுமே உட்கார வைக்கப்படுகின்றனர். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்படும். அனைவரும் வீட்டில் இருந்து கட்டாயம் குடிநீர், சாப்பாடு எடுத்துவர வேண்டும். உணவுப் பொருள் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது. பிறரைத் தொட்டுப் பேசக் கூடாது. கைகுலுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் இட நெருக்கடியைத் தவிர்க்க காலை, பிற்பகல் என ஷிஃப்ட் முறையில் வகுப்புகளைப் பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சுழற்சி முறையில் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச விருதுகள்: ஆசிரியர்கள், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...

 


சுமார் ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச ஆசிரியர், மாணவர் விருதுகளுக்கான அறிவிப்பை வர்க்கி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-04-2021...

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி குரூப்' நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சன்னி வர்க்கி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2010-ம் ஆண்டில் சன்னி வர்க்கி, லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையும், கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் விருதுக்கு 10 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.4 கோடி) பரிசுத் தொகையும், மாணவர் விருதுக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36.5 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. 16 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பகுதி நேரமாகப் படிப்பவர்களும், ஆன்லைன் வழியாகக் கற்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். சர்வதேச மாணவர் பரிசுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களின் கல்விச் சாதனை, சக மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள், இலக்கை அடைய அவர்கள் முரண்பாடுகளை எவ்வாறு சமாளிக்கின்றனர், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆசிரியர் விருது கற்பித்தல் நடைமுறைகள், உள்ளூரில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் விதம், கற்றல் விளைவுகளை அடைவது, வகுப்பறைக்கு அப்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது, குழந்தைகளை உலகளாவிய குடிமக்களாக மாற்றுவது, கற்பித்தல் முறைமைகளைப் படைப்பாற்றலுடன் மேம்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 2020-ம் ஆண்டில் இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலேவுக்கு (32), பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதற்காக ரூ.7.4 கோடி பரிசுத் தொகையுடன் சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

>>> Global Teacher Prize...

>>> Global Student Prize...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister Anbil Mahes paid tribute to murdered teacher Ramani and condoled with her family.

  தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது க...