கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2021 தேர்வு - கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்...


>>>  NMMS 2021 தேர்வு - கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்...

 


சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.


 கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். இதனால் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்நிலையில் செய்முறைத் தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதில் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 வழிகாட்டு நெறிமுறைகள் 


 * ஆய்வகங்களில் 1% சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளிக்கப்பட வேண்டும். அதே கரைசலை எடுத்துப் பள்ளி வளாகம், பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 


 * பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். 


 * வெப்பப் பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள் போன்றவை பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


 * கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். * நுழைவுவாயில் மற்றும் பள்ளிக்குள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 


 * அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை அணிந்திருப்பதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். 


 * பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில் கேட்டுகள், வகுப்பறைக் கதவுகள் உட்பட பகுதிகளை தேவையின்றித் தொடுதல் கூடாது. 


 * அனைத்துவித ஆய்வகங்களிலும் ஒரு மாணவர் பயன்படுத்திய உபகரணங்களைச் சுத்தம் செய்யாமல் அடுத்தவர்களுக்கு வழங்கக் கூடாது. இவ்வாறு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பயிற்சி - ‘ஸ்மார்ட்’ வகுப்பறை பள்ளிகள் கணக்கெடுப்பு...



 மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்கு ஆடியோ, வீடியோ வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பள்ளிகள் தேவைப்படும்.


 எனவே ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் சட்டசபை தொகுதிகள் வாரியாக அப்பயிற்சியளிக்க பள்ளிகளில் தேவையான ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள அது தொடர்பான விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் கணக்கெடுத்து அப்பட்டியலை தயார் செய்கின்றனர்

17-02-2021 முதல் 20-02-2021 வரை 4 நாட்கள் Online ICT பயிற்சி - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் & மாவட்ட வாரியான ஆசிரியர்கள் பட்டியல்...


 Online teacher Development Programme on ICT facilities-Level 2- schedule for 4 days from 17.2.21 to 20.2.21 regarding SPD Proceedings &  District wise Willing Government teachers ...


>>> Click here to Download SPD Proceedings and District wise Training Schedule...


>>> Click here to Download District wise Willing Government teachers of Primary /Middle  School...


‘நிஸ்தா’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி: மத்திய கல்வி அமைச்சகம் இலக்கு...



 அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, கற்பிக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்பத்தை கையாளுவதை கற்றுக்கொள்ளவும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்கான தேசிய முயற்சி (நிஸ்தா) என்ற திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது.


இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு (உயர்கல்வி, மேல்நிலை) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், நிஸ்தா திட்டம் மூலம் நாடு முழுவதும் 56 லட்சம்ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கஇலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:


நிஸ்தா திட்டத்தின்கீழ் 2021-22கல்வி ஆண்டில் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜூலையில் தொடங்கஉள்ளது. கரோனா பரவல் காலகட்டத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும்”- தனியார் பள்ளிகள் கோரிக்கை...

 


தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் பேசிய இளங்கோவன், கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை, பகுதிநேர ஊதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது என கூறினார். மேலும், தனியார் பள்ளிகள் ஒற்றுமை இன்றி போட்டிப் போட்டுக் கொண்டு பள்ளி கட்டணத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் வாங்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.


இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, சங்கத்தின் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்...


 தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியது. கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கவில்லை என ஆசிரியர்கள் தரப்பிலும் முறையாக கல்வி கற்க முடியவில்லை என மாணவர்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்ததால், பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.


அதன் படி, பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் சூழலில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை, உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...