கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The India Toy Fair - 2021 குறித்த முழுமையான விளக்கம்...



நாள்: 27th February to 2nd March 2021..


Organized by:

Department of school Education and Literacy,

Ministry of education

Government of India...


Themes: 

1. Atmanirbhar Bharat ( Self- Reliant India)

 2. Vocal to Local


📌 Virtual Platform வழியாக நடத்தப்படும் இக்கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 


📌 NCERT, SCERT, CBSE சார்பாக பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் IIT, காந்திநகர், NID and Children University, Ahmadabad மற்றும் இந்திய பொம்மை நிறுவனங்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.


📌 Play Based Learning , Activity Based Learning, Indoor and Outdoor Play, Use of Puzzles and Games to promote Critical Thinking குறித்த அமர்வுகள் இடம் பெறுகின்றன.


📌 Craft Demonstrations, Competitions, Quizzes, Virtual Tours, Product Lunches சார்ந்த செயல்பாடுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.


📌 பிப்ரவரி 27, 28, மார்ச் 1, 2  தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கு பெற கீழ்கண்ட இணைய முகவரியில் பதிவு செய்யலாம். https://theindiatoyfair.in/


📌 இக்கண்காட்சியினை Swayam Prabhae Vidya Channel வழியாகவும் நேரலையாக கண்டுகளிக்கலாம்.


•📌 விருப்பப்பட்ட ஆசிரியர்கள் Toys/ games/ puzzles/puppets/ activities/board games/electronic games போன்றவை வழியாக தாங்கள் வகுப்பறையில் கற்பித்த நிகழ்வுகளை 1 (அ) 2 நிமிட காணொலி காட்சி (Video ) ஆக எடுத்து அதனை கீழ்கண்ட இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.


https://www.mygov.in/task/my-favorate-indian-toy-video-contest/?target=inapp&type=task&nid=300431


தேர்தல் 2021 – அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி வருகைப் பதிவேட்டுடன் ஆஜராக உத்தரவு - CEO Proceedings...

 


அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் வருகைப்பதிவேட்டுடனும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டுடனும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்களின் தவறாமல் ஆஜராக தெரிவித்தல் சார்பாக.

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு...

 


மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை எண்: 48, நாள்: 25-02-2021 வெளியீடு...

>>> அரசாணை எண்: 48, நாள்: 25-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.02.2021 (சனி)...

 


🌹சிலருக்கு நாம் கொடுக்கும்போது நல்லவர்கள்

அதையே திரும்ப கேட்கும்போது கெட்டவர்கள்

அது பாசம் என்றாலும் சரி 

பணமென்றாலும் சரி.!

🌹🌹அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிருந்து பெறவும்கூடாது.

பிறருக்கு கொடுக்கவும் கூடாது.             ஏனெனில் இரண்டுமே வேதனையைத் தரும்.!!

🌹🌹🌹காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை.

ஆனால் காயப்படுத்தி விட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்- சுனில் அரோரா அறிவிப்பு.

👉வேட்புமனு தாக்கல் தொடக்கம் -  10.03.21

👉வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21

👉வேட்புமனு  பரிசீலனை - 20.03.21

👉வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21 

👉தேர்தல் நாள் : 06.04.21

👉வாக்கு எண்ணிக்கை : 02.05.21

🎀🎀தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.       

🎀🎀தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது என அனைத்துத் துறை செயலர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

🎀🎀சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்

🎀🎀அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🎀🎀GOVT LETTER-7000/2020-11 DATE-25.1.2021-மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வெளியீடு

🎀🎀தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு நாளை 28-02-2021(ஞாயிற்றுக்கிழமை)அன்று திட்டமிட்டப்படி நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

🎀🎀கருணை அடிப்படையில் பணி நியமனம் 02.02.2016 முதல் 31.12.2019 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப் படுத்துதல் - ஆணை வெளியீடு.

🎀🎀ஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு

🎀🎀பள்ளி மான்யம் 31-03-2021க்குள் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறையில் படி செலவினம் மேற்கொள்ள உத்தரவு.

🎀🎀நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

🎀🎀தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற, சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது

🎀🎀கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

🎀🎀தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

🎀🎀ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

🎀🎀பிளஸ் 2 தேர்வுக்கு இன்று முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்

🎀🎀SHAALA SIDDHI முடிக்காதவர்கள் விரைவாக முடித்துக்கொள்ளவும் - Last Date: Feb.28

🎀🎀மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது.

கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

🎀🎀3 days training for BT teachers - Proceedings - 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🎀🎀10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🎀🎀 The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு

🎀🎀மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்

🎀🎀ஆஸ்கர் விருது பொது பிரிவில் 366 படங்களில் சூரரைப் போற்று நீடிக்கிறது. 

சிறந்த நடிகர், நடிகை, படம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி. 

இதற்கான வாக்கு பதிவு மார்ச் 5 - 10 வரை நடைபெறுகிறது. மார்ச் 15 இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

1000 படங்கள் போட்டியிட்டன.

🎀🎀திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

🎀🎀மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை நிறுவனங்களை முடிந்தவரை தனியார்மயம் ஆக்குவதே எங்கள் நோக்கம்

- பிரதமர் நரேந்திர மோடி

🎀🎀வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே;  6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.

🎀🎀வாக்குப்பதிவு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு. 

🎀🎀80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குமுறையை பயன்படுத்தலாம். 

- சுனில் அரோரா

🎀🎀தமிழகத்தில் அதிக தேர்தல் செலவுகள் நடைபெறும் என்பதால் முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகிறது

- சுனில் அரோரா

🎀🎀குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை 

ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

🎀🎀ஒரு சட்டமன்ற தொகுதிக்கு அதிகபட்சமாக ரூ.30.8 லட்சம் மட்டுமே தேர்தல் செலவுக்கு அனுமதி

 - சுனில் அரோரா

🎀🎀தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்

🎀🎀மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும்  எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

- சுனில் அரோரா.

🎀🎀பழ.கருப்பையாவுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

🎀🎀மறைந்த மூத்த கம்யூனிஸ்ட்  தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.

🎀🎀வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டமசோதா நிறைவேற்றியமைக்காக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் மருத்துவர் ராமதாசு

🎀🎀"நான் நாட்டின் ஒரே பெண் முதல்வர், பாஜகவின் செயல்களுக்கு நான் ஒருபோதும் பயப்பட மாட்டேன்".

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

🎀🎀சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது  தனித்து போட்டியா என்று விரைவில் அறிவிக்கப்படும் 

-சென்னையில் கமல்ஹாசன் பேட்டி

🎀🎀அதிமுக- பா.ம.க இடையே இன்றே தொகுதி பங்கீடு இறுதி ஆக வாய்ப்பு.

🎀🎀தமிழகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம். 

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு கூடுதல் இயக்குனராக சாந்திமலர் நியமனம்.

🎀🎀அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

🎀🎀சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி - சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதி ஆகியுள்ளது.

விஜயகாந்த், கமலும் கூட்டணிக்கு வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு.

🎀🎀வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு அகில இந்திய பார்வார்டு பிளாக் எதிர்ப்பு. 

மசோதாவை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவிப்பு.

🎀🎀திருச்சியில் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடும், மற்றும் வரும் 7 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக் குழு கூட்டமும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு

🎀🎀கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் தொகுதி பங்கீடு குழு அறிவிப்பு                                                      

🎀🎀1598 சிறப்பாசிரியர்கள் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியீடு-ஆசிரியர் தேர்வு வாரியம்

👉1) Physical Education Teacher - 801

👉2) Art Master - 365

👉3) Music Teacher - 91

👉4) Craft  (Sewing) -341

Total Post - 1598

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

பள்ளிக் கல்வி - முறைசாரா கல்வி (Non Formal Education) திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களே இணைத்தன்மை வழங்கலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 பள்ளிக் கல்வி - முறைசாரா கல்வி (Non Formal Education) - National Institute of Open Schooling - NIOS திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களே இணைத்தன்மை வழங்கலாம்...

 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 943/ கே/ இ2/2016, நாள்: 26.02.2021, 

Government Letter No: 14188/ERT/2014-12, School Education Department, Dated: 27-02-2018, 

School Education Commissioner Letter : Rc.No.000050/A2/2021, Dated: 03.02.2021. 


>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 943/ கே/ இ2/2016, நாள்: 26.02.2021, அரசுக் கடிதம் எண்: 14188/ERT/2014-12, பள்ளிக் கல்வித் துறை நாள்: 27-02-2018 மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 000050/A2/2021, நாள்: 03.02.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய (27-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எண்ணிய காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் தனவரவுகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : இன்னல்கள் குறையும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தாய்மாமனின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

வெளியூர் தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிக்கான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.


திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.


புனர்பூசம் : கலகலப்பான நாள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நண்பர்களின் உதவிகள் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : தனவரவுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்கள் அவரவர்களின் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கேளிக்கைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த சில குழப்பங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : வெற்றி கிடைக்கும்.


அஸ்தம் : ஏற்ற, இறக்கமான நாள்.


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதில் இனம்புரியாத சிறு சிறு கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


சுவாதி : இடமாற்றம் சாதகமாகும்.


விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கான அரசு உதவிகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.


கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூராடம் : ஆர்வம் ஏற்படும்.


உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஞாபகத்தன்மை குறைந்து காணப்படும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். கேளிக்கைகள் தொடர்பான விஷயங்களால் சேமிப்புகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.


திருவோணம் : சேமிப்புகள் குறையும்.


அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

எந்தவொரு செயலையும் துணிச்சலோடு செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற உயர்வுகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் மனதை தெளிவுப்படுத்தும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான விபரங்கள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 27, 2021


மாசி 15 - சனி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.


ரேவதி : புரிதல் மேம்படும்.

-------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...