கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..?

 


தற்போது ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன.. யுபிஐ, பேடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட பல முறைகளில் மக்கள் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றனர். ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் மூலம் சில நொடிகளில் இதைச் செய்ய முடியும் என்பதால் ஒருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்ற நாங்கள் ஒரு வங்கியைப் பார்க்க வேண்டியதில்லை. இருப்பினும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வங்கி வசதிகளை எளிதாக்கியுள்ள நிலையில், இதில் பல சிக்கல்களும் இருக்க தான் செய்கின்றன..


உதாரணமாக, வேறொருவரின் கணக்கிற்கு தவறுதலாக பணத்தை மாற்றினால், பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவீர்கள்? அந்த தொகையை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்த வங்கிக்கு அதிகாரம் உள்ளதா? சரி, பயனர்கள் அதைத் தொடர அனுமதிக்காவிட்டால், வங்கிகளால் அதைத் திருப்ப முடியாது. “புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால், பயனாளியின் ஒப்புதல் இல்லாமல் வங்கி அதன் முடிவில் இருந்து அதை மாற்ற முடியாது. வங்கி ஒரு வசதியாளராக மட்டுமே செயல்பட முடியும் என்று கூறப்படுகிறது..உங்கள் பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?


உடனடியாக உங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவையை அழைத்து முழு விஷயத்தையும் விளக்குங்கள். பரிவர்த்தனை, கணக்கு எண் மற்றும் பணம் தவறாக மாற்றப்பட்ட கணக்கு ஆகியவற்றின் சரியான தேதி மற்றும் நேரத்தை நீங்கள் நிர்வாகிக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் பணத்தை மாற்றிய வங்கிக் கணக்குக்கு 5-6 வணிக நாட்களுக்குள் பணம் தானாகவே திருப்பித் தரப்படும்.  இல்லையென்றால், நீங்கள் உங்கள் வங்கியை அணுகி தவறான பரிவர்த்தனை குறித்து மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வங்கி பயனாளியின் விவரங்களை சரிபார்க்கும், அதே கிளையில் நபர் ஒரு கணக்கை வைத்திருந்தால், பணத்தை திருப்பித் தருமாறு வங்கி அவரிடம் கோரலாம்.   பயனாளி உங்கள் கணக்கில் பணத்தை மீண்டும் செலுத்த மறுத்தால் என்ன செய்வது..? இந்த வழக்கில், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு விஷயத்தை விரிவாகக் கூறுங்கள்.  அவர் அல்லது அவள் உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தால் சட்ட வழியைத் தேர்வுசெய்க. உங்கள் வங்கியும் உங்கள் பயனாளியின் வங்கிகளும் வேறுபட்டவை மற்றும் வெவ்வேறு நகரங்களில் இருந்தால் நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும். உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க பயனாளி ஒப்புக்கொண்டால் என்ன நடக்கும்..?


ஒரு பயனாளி பரிவர்த்தனையை மாற்ற ஒப்புக்கொண்டால், உங்கள் பணத்தை திரும்பப் பெற 8-10 வேலை நாட்கள் ஆகும். இல்லையெனில், நீங்கள் சரியான வங்கி அறிக்கை, முகவரி மற்றும் ஐடி ஆதாரம் போன்றவற்றைக் கொண்டு பரிவர்த்தனையை நிரூபிக்க வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ,மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு சுகாதாரத் துறை செயலாளர் தகவல்...

 கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. இதற்கிடையில், தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை பள்ளியில் 57 மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:


கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை முடியும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்பவர்களாக இருந்தாலும் தனி அறை, கழிப்பறை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டால் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. தனி அறை, கழிப்பறை வசதிகள் இல்லாதவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


தமிழகத்தில், மேற்கு மாம்பலம், புரசைவாக்கம், வேப்பேரி, சோழவரம், ஆவடி ஆகிய பகுதிகளில், சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூடிய கூட்டதால் தொற்று அதிகம் பரவி உள்ளது. பல இடங்களில், முகக்கவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை.


தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கள் தொண்டர்களை காக்கவும், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், அரசியல் கட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுவதையும், தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


அரசியல் கட்சி தலைவர்களின் பங்களிப்பு இருந்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினை இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. பெற்றோரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார்.

`பள்ளி மாணவி சொன்ன பொய்... வெட்டப்பட்ட ஆசிரியர் தலை!'- உலகையே அதிரவைக்கும் பிரான்ஸ் அரசியல்...


நன்றி : விகடன்...

ஒரு பள்ளி மாணவி தன் தந்தையிடம் சொன்ன விஷயங்களில் இருந்து உருவான தொடர் நிகழ்வுகள் இவையெல்லாம். இந்நிலையில் பிரான்ஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.


பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் அருகில் ஒரு நடுநிலை பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர் சாமுவேல் பேடி(Samuel Paty). வயது 47. 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளியில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். 


கருத்து சுதந்திரம் பற்றிய அந்த வகுப்பில் அதற்கு எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு புகைப்படத்தை வகுப்பில் காட்டினார் எனவும், இஸ்லாம் மதத்தினர் இறைத்தூதராக மதிக்கும் முகமது நபிகளை பற்றிய கேலி சித்திரம் அது எனவும்,


அதை வகுப்பில் காட்டுவதற்கு முன் இஸ்லாம் மத மாணவர்களை அவர் வகுப்பை விட்டு வெளியேற சொல்லியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்ததாகவும் தன் தந்தையிடம் முறையிடுகிறார் ஒரு 13 வயது மாணவி. 


கோபம் கொண்ட அந்த மாணவியின் தந்தை ஆசிரியர் சாமுவேல் பேடி மீது வழக்கு தொடர்கிறார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஒரு பிரசாரத்தை முன்னெடுக்கிறார். பலர் ஆசிரியர் முன்வைத்த கருத்து சுதந்திரத்தை ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள். மறுபுறம் ஆசிரியருக்கு எதிரான எதிர்ப்பலையும் வேகமெடுக்கிறது.


இந்தச் செய்தியை இணையம் மூலம் அறிந்துக் கொண்ட அப்துல்லாஹ் அன்சோரவ் எனும் 18 வயது இளைஞன் கொதித்தெழுகிறான். தன் மதத்தை அவமதித்தார் என்ற கோபத்தில் ஆசிரியர் சாமுவேல் பேடி மீது கோபம் கொள்கிறான். ஆசிரியரை அடையாளம் காட்ட அந்தப் பள்ளி மாணவர்கள் இருவரை உடன் அழைத்து சென்றவன், ஆசிரியரைக் கண்டதும் அவன் கொண்டு சென்ற நீண்ட கத்தியால் சாமுவேல் பேடியின் தலையை வெட்டி கொலை செய்கிறான். இதனை தொடர்ந்து அப்துல்லாஹ் அன்சோரவ்-ஐ சுட்டு கொல்கிறது பிரான்ஸ் போலீஸ் படை. அடையாளம் காட்ட சென்ற இரு மாணவர்களின் மீதும் வழக்கு பாய்கிறது. இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என விசாரணையை தொடங்குகிறது போலீஸ். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. இறந்த ஆசிரியருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதைக் கொடுத்து கௌரவிக்கிறது அந்நாட்டு அரசு.


பிரான்ஸ் அரசு, இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இஸ்லாமிய பிரிவினைவாத தீவிரவாதிகளின் சதி என்ற நிலைப்பாட்டை எடுக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை இறுக்குகிறது. இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி ஒன்று ஆறு மாதங்கள் மூடப்பட்டது. மத தீவிரவாதத்திற்கு எதிரான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



இஸ்லாம் மதத்தைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுகிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் அவரது கருத்துக்கு எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றன. பிரெஞ்சு பொருட்களை வாங்குவதில்லை, பயன்படுத்துவதில்லை என பல நாடுகள் அறிவிக்கின்றன. துருக்கியிலிருந்து கடும் எதிர்ப்பு எழவே, அந்நாட்டிலிருக்கும் பிரான்ஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்படுகிறார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளிக்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர். ஆனால், இஸ்லாமியர்களை, அவர்களின் மத உணர்வுகளை புறக்கணிப்பதாக அந்நாட்டிற்கு நெருக்கடிகள் வலுக்கின்றன.


ஒரு பள்ளி மாணவி தன் தந்தையிடம் சொன்ன விஷயங்களில் இருந்து உருவான தொடர் நிகழ்வுகள் இவையெல்லாம். இந்நிலையில் பிரான்ஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார் அந்த மாணவி. தான் சொன்னதெல்லாம் பொய் எனவும், குறிப்பிட்ட தினத்தன்று தான் வகுப்பறையிலேயே இல்லை எனவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் சரியாக வராததால் அதற்கு முந்தைய தினமே பள்ளியிலிருந்து தான் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதை தன் தந்தையிடம் சொல்ல பயந்து, வேறு கதை சொல்லி சமாளித்ததாகவும் கூறியிருக்கிறார்.


தற்போது பள்ளி மாணவி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மாணவியின் தந்தை தீவிரவாத செயலுக்கு துணை போனதாகச் சந்தேகித்து அவரை கைது செய்திருக்கிறது பிரான்ஸ் அரசு.


அந்தப் பெண் சொன்னது பொய்யாகவே இருந்தாலும், அதை தொடர்ந்த இணையவாசிகளின், அந்தப் பெண்ணின் தந்தையின், அரசின், கொலை செய்த சிறுவனின் இன்னும் பலரின் எதிர்வினைகள் எல்லாம் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். அவை ஒரு தனி மனிதன், ஒரு வீடு, ஒரு பள்ளி, ஒரு நாடு, ஒரு சமூகம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான பாடங்கள்!

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கான வாக்கு குறித்து ஆசிரியர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்...

 


A copy of the Judgement issued by the Chennai High Court in the case filed by the Teachers' Union regarding the voting for Teachers & Government employees involved in the election process ...

W.P.No.5320 of 2021, Dated: 10-03-2021...


>>> Click here to Download - Judgement Copy...

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) அறிந்து கொள்வது எப்படி?

கீழ்க்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.elections.tn.gov.in/blo/



தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மாவட்டம், உங்கள் சட்டமன்றத் தொகுதி, பாகம் எண் (PART NUMBER) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Submit பட்டனை அழுத்துங்கள்.


தற்போது உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும்.

பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு : மத்திய அரசு அறிவிப்பு...

 




மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கோவிட் - 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என்ற யூகத்திற்கு உரிய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு முறையில் (விருப்பத்தின் அடிப்படையில்) வாக்களிக்கும் வசதி- தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்...


 Voting facility by Postal Ballots (optional) for the disabled, senior citizens over 80 years of age and those who are suspected of being infected or infected with Covid 19 - The Chief Electoral Officer (CEO) of Tamil Nadu ...

>>> தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் செய்தி வெளியீடு(Press Release) எண்: 189, நாள்: 14-03-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...