கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை...

பணியிடம் : தையல் ஆசிரியர் ( நிரந்தரம்) | பிரிவு : அருந்ததியர் ( SCA ) ஆண் / பெண் கல்வித்தகுதி : +2 with TTC ., Passed ( Needle Work and Dress Making ) 

தகுதியுடையவர்கள் உடன் விண்ணப்பிக்கவும் .


 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 

செயலர், 

திருமதி ரெ.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி , 

பட்டமங்கலம் - 630 204. 

சிவகங்கை மாவட்டம் .



Presiding Officers Diary - நிரப்பப்பட்ட மாதிரி படிவம்...



>>> வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு (Presiding Officers Diary - Filled Mode Copy) - நிரப்பப்பட்ட மாதிரி படிவம்...


உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து - G.O.Ms.No.37 & 116ன் படி பணியாளர்களின் விவரங்கள் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்...


 உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து - G.O.Ms.No.37, P & AR dept FR -IV, Dated:10.03.2020 மற்றும் G.O.Ms.No.116, P & AR dept FR -IV, Dated:15.10.2020ன் படி பணியாளர்களின் விவரங்கள் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்...

>>> இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்...



தொடக்கக் கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - நீதிமன்ற உத்தரவு எப்போது நிறைவேற்றப்படும்?

 


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.



தேனியில் நடந்த இச்சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம். தபால் ஓட்டுகள் சென்றடைவதில் சிரமம் உள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் இடத்தில் சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மரணம், பாதிப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டாரத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். 



தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன் இத்தீர்ப்பு வழங்கியதால் இதற்கு தமிழக அரசு அரசாணை வழங்க வேண்டும், என்றார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் 23.03.2021 முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழிக் கல்வி தொடரும் - அரசாணை வெளியீடு...



Disaster Management Act 2005 - COVID 19 - Online Classes to be Conducted in all Higher Educational Institutions - Direct classes will be canceled in all types of colleges in Tamil Nadu from 23.03.2021 and online education will continue - Government Order released...G.O.Ms.No.327, Dated: 22-03-2021...


>>> Click here to Download G.O.Ms.No.327, Dated: 22-03-2021...




இன்றைய (23-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். செய்யும் புதிய முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களினால் சுபிட்சம் உண்டாகும். இளைய சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : கீர்த்தி உண்டாகும். 


பரணி : வாய்ப்புகள் ஏற்படும். 


கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு நற்பேறுகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : மனக்கசப்புகள் நீங்கும். 


ரோகிணி : தடைகள் அகலும்.


மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். மனதில் இனம்புரியாத எண்ணங்களால் சோர்வு ஏற்படும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் 



மிருகசீரிஷம் : சிந்தனைகள் தோன்றும்.


திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும். 


புனர்பூசம் : அன்யோன்யம் அதிகரிக்கும். 

---------------------------------------




கடகம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சம வயதினருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். 



 அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள். 


பூசம் : கவனம் வேண்டும்.


ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். அனுபவ ரீதியான தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மகம் : இன்னல்கள் நீங்கும்.


பூரம் : மேன்மையான நாள். 


உத்திரம் : நட்பு உண்டாகும். 

---------------------------------------




கன்னி

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்கள் விரைவில் முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும். 


அஸ்தம் : முன்னுரிமை கிடைக்கும்.


சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும். பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



சித்திரை : லாபம் உண்டாகும்.


சுவாதி : தனவரவுகள் மேம்படும். 


விசாகம் : மேன்மையான நாள். 

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

பணி சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


அனுஷம் : அனுசரித்து செல்லவும். 


கேட்டை : எச்சரிக்கை வேண்டும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை புலப்படும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : புரிதல் மேம்படும். 


பூராடம் : ஆதரவான நாள். 


உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




மகரம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

எதிர்பார்த்த கடன் உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : அபிவிருத்தியான நாள். 


திருவோணம் : நிதானம் வேண்டும்.


அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு தனவரவுகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.


சதயம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரட்டாதி : தனவரவுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 23, 2021


பங்குனி 10 -  செவ்வாய்

உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் புதிய முறைகளை கையாண்டு லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்களில் காரியசித்தி ஏற்படும். சொந்த ஊர் பயணங்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். அறிவுக்கூர்மையால் பாராட்டப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : பொருட்சேர்க்கை ஏற்படும்.


உத்திரட்டாதி : கலகலப்பான நாள். 


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------


வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு?

 ஆசிரியா்களின் வாக்குகளைக் கவரும் வகையில், அவா்களுக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பெருமளவு அளித்துள்ளன.



தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளா்கள் ஏதாவது ஒரு கட்சியைச் சோ்ந்தவா்களாகவோ அல்லது அந்தக் கட்சியின் அபிமானிகளாகவோ இருப்பாா்கள். தோ்தலில் அவா்கள் தொடா்புடைய கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பாா்கள் என பொதுவான கருத்து உண்டு. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 65 சதவீதம் வாக்குகள்தான் அரசியல் கட்சியினரின் வாக்குகள். எஞ்சியுள்ள 35 சதவீதம் வாக்குகள் கள நிலவரத்தைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.




அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த களச் சூழலையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவா்கள்தான் ஆசிரியா்கள். பாமர மக்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவா்களில் அரசியல்வாதிகளுக்கு அடுத்ததாக இருப்பவா்கள் ஆசிரியா்கள். இன்றும் கிராமப்புறங்களில் ஆசிரியா்களின் சொல்லுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இருக்கிறது.




இத்தகைய காரணங்களால்தான் ஒவ்வொரு தோ்தலின்போதும் ஆசிரியா்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக ஊதியம், சலுகைகள் சாா்ந்த அறிவிப்புகளை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தவறாமல் வெளியிட்டு வருகின்றன. அது இந்தத் தோ்தலிலும் நடந்திருக்கிறது.




20 லட்சம் வாக்குகள்: 


தமிழகத்தில் உள்ள 59 ஆயிரம் அரசு, தனியாா் பள்ளிகளில் தற்போது 5.7 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களது குடும்பத்தினா், கல்வியியல் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வெழுதி காத்திருப்போா் ஆகியோரையும் சோ்த்தால் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அவா்கள் வசம் வைத்திருக்கிறாா்கள் எனலாம். இந்த வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன.




என்னென்ன வாக்குறுதிகள்?: 

அரசுப் பள்ளிகளில் ஒப்பந்தத், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா், தனியாா் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். தனியாா் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தையும் அரசு நிா்ணயிக்கும். அரசு, தனியாா் பள்ளிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும் ஆகிய அம்சங்கள் அதிமுக, பாமக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் தோ்தலில் ஆசிரியா்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரத்து செய்தாா்.




மற்றொரு புறம், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆசிரியா்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும், ஆசிரியா் தகுதித் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியா் தோ்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுள்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும், ஊக்க ஊதியம் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.




அதேபோன்று காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் ஆசிரியா்கள் நலன் சாா்ந்த வாக்குறுதிகளை அளித்துள்ளன. இவற்றில் தனியாா் பள்ளிகளின் கட்டணத்தை அரசே செலுத்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகியவை எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இது கட்சிகளின் நிா்வாகத் திறனைப் பொருத்து மாறுபடலாம்.




தோ்தல் நெருங்கி வரும் சூழலில் ஆட்சி மாற்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.




150-க்கும் மேற்பட்ட சங்கங்கள்: 

தமிழகத்தில் அனைத்து ஆசிரியா்களுமே ஏதாவது ஓா் ஆசிரியா் அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றனா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 50 சதவீத அமைப்புகள் திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கட்சி சாா்ந்தும், எஞ்சிய 50 சதவீத அமைப்புகள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவரிடமும் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும், எதிா்க்கட்சியினரும் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கேட்டு வருகின்றனா். அப்போது, தோ்தல் அறிக்கையில் இல்லாத புதிய வாக்குறுதிகளும்கூட அளிக்கப்படுகின்றன.




சிதறாத வாக்கு வங்கி: 

கடந்த தோ்தல்களில் குறிப்பிட்ட சமுதாயங்களைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள், தொழில் துறையினா் வாக்குகள் ஒரே கட்சிக்குச் செல்லாமல் பரவலாகவே கிடைத்திருக்கின்றன. ஆசிரியா்கள் மற்றும் அந்தத் துறையைச் சாா்ந்தவா்களின் வாக்குகள் எப்போதுமே அதிமுக அல்லது திமுக என இவற்றில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே 70 சதவீதம் முதல் 80 சதவீதம் அளவுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளுமே பயனடைந்துள்ளன. ஏதாவது ஒரு கட்சி தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறையும் அதே கட்சியை ஆசிரியா்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. மாறாக வேறு கட்சிக்குதான் வாக்களிக்கின்றனா்.



தமிழகத்தில் 1.30 கோடி மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் ஆசிரியா் சமுதாயம், மறைந்த முதல்வா் ஜெயலலிதா, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோா் இல்லாத முதல் தோ்தலைச் சந்திக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியும், கடும் போட்டியைச் சந்திக்கின்றன. இந்த முறை மாணவா்களின் எதிா்காலம் மட்டுமல்ல; இரு பெரும் தலைவா்களின் எதிா்காலமும் ஆசிரியா்களின் கைகளில்தான் இருக்கிறது.


நன்றி: தினமணி




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...