கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தற்காப்புக்கலை பயிற்சி - தொகையை மீண்டும் செலுத்த தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...

 தற்காப்புக்கலை பயிற்சி - தொகையை மீண்டும் செலுத்த தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...


ந.க.எண்.2048/ஒபக/பெண்கல்வி/2020 நாள். .03.2021 பொருள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் - 6,7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் டெண் குழந்தைகளுக்கு 2020-21ம் கல்வியாண்டில் தற்காப்பு கலை பயிற்சி (Self defence Training for Girls) மாவட்டத்திலிருந்து வட்டார வள மையத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை மீண்டும் மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் திரும்ப செலுத்துதல் - சார்ந்து. 


பார்வை 

1. மாநில திட்ட இயக்குநர் (ஒபக) அவர்களின் கடித ந.சு.எண்: 395/C5/ தற்காப்பு கலை பயிற்சி/ஒபக/2020 நாள்: 14.12.2020. 


2. மாநிலத்திட்ட இயக்குநர் (ஒபக) சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 395/CS/SS/2020 Dated: 23.02.2021 

3. இவ்வலுவலக கடித ந.க.எண்:19/ஒபக/பெண்கல்வி/2021 நாள். 20.01.21 மற்றும் 16.03.21 4. மாநிலத்திட்ட இயக்குநர் (ஒபக), சென்னை-6 அவர்களின் மின்னஞ்சல் நாள்: 19.03.2021 


பார்வை 1 மற்றும் 2ல் காண் மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை அவர்களின் கடிதத்தின் படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21ம் கல்வியாண்டில் தற்காப்பு கலை பயிற்சி (Self defence Training - கராத்தே, ஜீடோ, டேக்வேண்டோ, சிலம்பம்) தருமபுரி மாவட்டத்தில் உள்ள 317 அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் 3 KGBV உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு கீழ்கண்டவாறு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

>>> தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அடுத்த தேர்தலில் 'ரிமோட் ஓட்டிங்' முறை அறிமுகம்...

 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார். 



டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். 


Remote Voting எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். 


 இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. 


 தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும். அந்த மையத்தில், 'பயோமெட்ரிக்' சாதனங்களும், 'வெப் கேமரா'வும் இருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ”தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தொழில்பழகுநர் வேலை”…

 தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) தற்போது நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் (Apprentice) பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்


பணி: தொழில்பழகுநர் (எலக்ட்ரீசியன்)


காலியிடங்கள்: 4


பயிற்சியிடம்: கரூர்


கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி


பயிற்சி காலம்: 23 மாதங்கள்


உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.6,000 – 7000 வரை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடத்திலேயே இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு 26.03.2021 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

 


>>> தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கல்வி டிவியில் பாடம் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், கல்வி 'டிவி'யில், பாட வகுப்புகளை அதிகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கொரோனா தாக்கம் காரணமாக, 2020 மார்ச், 25 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச், 10 முதல் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டன. அதன்பின், நிலைமை சீரானதும், 10 மாதங்கள் கழித்து, ஜன., 19ல், பிளஸ் 2 வகுப்பு; பிப்., 8ல் மற்ற வகுப்புகளும் துவங்கின. இந்நிலையில், தேர்தல் காரணமாகவும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததாலும், 22-03-2021 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2க்கு, மே, 3ல் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.




அதேபோல், பள்ளிகள் மூடப்பட்டாலும், 'ஆன்லைன்' வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியாக, மீதம் உள்ள பாடங்களை நடத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தவும், பாட வகுப்புகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசிகள் 8 முதல் 10 மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும் - எய்ம்ஸ்...

 கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க இந்தியாவில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் இணைந்து கோவாக்ஸின் தடுப்பு மருந்தையும், சீரம் நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்காவும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளன.


இந்தத் தடுப்பு மருந்துகளை முதியோர்களும், 45 வயது முதல் 59 வயதுள்ள இணைநோய்கள் இருப்போரும் இலவசமாக செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனனத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களை எய்ம்ஸ் மருத்துவனை இயக்குனர் ரன்தீப் குலேரியா நேற்று விளக்கினார். 


இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம். முதன்மையானது, மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள என்ன செய்துவிடப்போகிறது கொரோனா எனும் மெத்தனப்போக்கான மனநிலைதான். எனவே மக்கள் அவசியமற்ற பயணங்களை இன்னும் கொஞ்ச காலம் தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகள் 8 முதல் 10 மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும். ஒருவேளை இன்னும் அதிகமும் இருக்கலாம். இரு தடுப்பூசிகளிலும் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. இரு தடுப்பூசிகளும் சமமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.


நோய் பாதிப்பில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் 10 மாதங்கள் வரை பாதுகாப்பு வழங்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா உறுதியளித்துள்ளார்.



இந்த கருத்தை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பாலும் ஆமோதித்தார். இதுகுறித்து பேசிய அவர், “60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயாளர்களிடமே அதிக உயிரிழப்பு காணப்படுகிறது. எனவே இந்த பிரிவினர் தடுப்பூசி போடுவதை தாமதிக்கக்கூடாது. குறைவான அளவே தடுப்பூசிகள் கிடைப்பதால்தான் அனைவருக்கும் செலுத்த முடியவில்லை. பெரும்பாலான நாடுகளில் முன்னுரிமை அளிக்கப்பட்ட வயதினருக்கு மேல் கொரோனா தடுப்பூசி வழங்க முடியாமல் தடுமாறுகிறார்கள்” என்று கூறினார்.

ஜப்பானில் கல்வித்துறையை சேர்ந்த அரசு பணியாளர்கள் பணி நேரம் முடிவதற்கு 2 நிமிடம் முன்பாகவே வீட்டிற்கு சென்றதால் ஊதியக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...