கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு பரவுது கொரானா - கல்வித்துறை பாடம் கற்பது எப்போது?

 


தபால் வாக்கு விண்ணப்பத்தில் 99.7 % ஏற்பு ஆணையம் தகவல் - மாபெரும் அளவில் நடக்கும் தேர்தல் பணியில் அரிய சில தவறுகள் அவமதிப்பு அல்ல - ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கை நீதி மன்றம் முடித்துவைப்பு...

 


B.E, B.Tech படித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) வேலை வாய்ப்பு : ஊதியம் 50,000- விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-04-2021...

 



>>> Click here to Download Notification...

01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாகவும் அனுப்பலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர்...

 இராமநாதபுரம் மாவட்டம் 


செய்தி வெளியீடு எண்: 64, நாள்: 29-03-2021

வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்கள் தகவல் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வருகின்ற 31.03.2021 அன்று மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இராமநாதபுரம் இன்பாண்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் (ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சி நடைபெற்ற இடங்கள்) நடைபெறும்.


அதேபோல, திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முன்னதாக சி.கே.மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கமுதியில் உள்ள தனியார் பள்ளியிலும் பயிற்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவாடானை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இராமநாதபுரம் நகரிலுள்ள ஸ்வார்ட்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மற்றும் புனித அந்திரேயா மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இராமநாதபுரம் நகரிலுள்ள செய்யதம்மாள் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலும் நடைபெறும். சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காலை மாலை என இரு அமர்வுகளாக (Sessions) பிரித்து பயிற்சி அளித்திடவும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம், அறை எண், பயிற்சி நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் உத்தரவு வழங்கப்படும்.


தபால் வாக்கு கோரிய தேர்தல் பணியாளர்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 31.03.2021 மற்றும் 05.04.2021 ஆகிய இரு நாட்களிலும் பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரடியாக செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார். 


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்.

தேர்தல் வகுப்பில் பங்கேற்ற ஆசிரியை கொரோனாவால் இறப்பு - தேர்தல் வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை...

 திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மார்ச், 18ல் சின்னாளப்பட்டி தனியார் பள்ளியில் நடந்தது.


2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.மார்ச், 26ல் இதே ஆசிரியர்களை பிரித்து, மாவட்டத்தின் மற்ற, ஆறு தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இந்நிலையில், முதல் கட்ட வகுப்பில் பங்கேற்ற, 53 வயதுடைய, உதவி பெறும் பள்ளி ஆசிரியை ஒருவர், கொரோனா பாதிப்பால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, சான்று சமர்ப்பிக்கும்படி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலியான ஆசிரியை மார்ச், 5ல் பெங்களூரு சென்று வந்துள்ளார். 'மார்ச், 11ல் அரசு மருத்துவமனை பரிசோதனையில், 'நெகட்டிவ்' என வந்ததால், தேர்தல் வகுப்பில் பங்கேற்றுள்ளார்.'பாதிப்பு தொடர்ந்ததால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மார்ச், 25ல் நடந்த சோதனையில் கொரோனா உறுதியானது' என்றார்.

ஊக்க ஊதியம் பெற மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா ?

 10-03-2020க்கு முன்பாக ஊக்க ஊதியம் பெற துறை முன் அனுமதி பெற்று உயர்கல்வி முடித்து இருந்து பல்வேறு காரணங்களால் ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்டு நமது பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில்  மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு பூ.ந.நரேஷ் ஐயா அவர்கள் ஊக்க ஊதியம் சார்ந்து கூறும்போது...


 உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் நிதித் துறையின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.


இதில் பள்ளிக்கல்வி துறையின் வேலை நிறைவுபெற்றுவிட்டது. நிதித்துறைசார்ந்த முடிவு எடுப்பது அரசு மட்டுமே என்று கூறி உள்ளார்.


மேலும் அவர் கூறும்போது, மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்காவிட்டால் உயர்கல்வி படிப்புக்கு ஊக்க ஊதியம் பெற முடியாமல் போய்விடும் என்று ஆசிரியர்கள் அச்சப் பட வேண்டாம். அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தபால் வாக்கு ஊடகங்களில் வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பம் - வேறு ஆசிரியை உட்பட 3 பேர் கைது...

 தபால் வாக்குப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறு ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவரது தபால் வாக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த தபால் வாக்குச் சீட்டு முகநூல், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சமீரனுக்கு சமூக ஊடகங்களில் வெளியான தபால் வாக்கு புகைப்பட ஆதாரத்துடன் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்தார்.


இதையடுத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமிக்குத் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி தபால் வாக்கு ரகசியம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, அதற்கான ஆணையை வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க, பள்ளித் தாளாளருக்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி உத்தரவிட்டார்.


இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதில், “சுரண்டை ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் முறையாகத் தபால் வாக்கைப் பெறாத நிலையில், அவரது தபால் வாக்கை முறைகேடாக வெளி நபருக்கு வழங்கி, தபால் வாக்கின் ரகசியத்தை முகநூலில் பதிவிடச் செய்த அதிகாரிகள் மீதும், முகநூலில் பதிவிட்ட நபர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தேர்தல் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சமூக வலைத்தளத்தில் பரவியது ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் தபால் வாக்கு அல்ல என்பதும், அது வெள்ளக்கால் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் கிருஷ்ணவேணி (50) என்பவருடைய தபால் வாக்கு என்பதும் தெரியவந்தது.


தேர்தல் பயிற்சி வகுப்புக்குச் சென்ற ஆசிரியை கிருஷ்ணவேணி, தபால் வாக்குப் படிவத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதைத் தனது மகனிடம் காட்டி இதுதான் தபால் வாக்குப் படிவம் என்றும், அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வாக்களித்தபின் தபால் வாக்குச் சீட்டு படிவத்தை கிருஷ்ணவேணியின் கணவர் கணேஷ் பாண்டியனின் செல்போனில் அவரது மகன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ கணேஷ் பாண்டியனின் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஒரு குழுவுக்குப் பகிரப்பட்டுள்ளது.


அதைத் தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் முகநூலில் பகிர்ந்துள்ளார். இது தெரியவந்ததும் ஆசிரியர் கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேஷ் பாண்டியன் (50), தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் மீதும் தென்காசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


இந்நிலையில் ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளை சஸ்பெண்ட் செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆசிரியர் கிருஷ்ணவேணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...