கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு...?

 இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர்ந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் முன் போல உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.




இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கு பெற்றனர். அந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பேசும் போது, பொதுமக்கள் சரியான வழிகாட்டுதல் முறையை கடைபிடிக்காமல் இருப்பது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும்.




கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்துகள் செலுத்த கூடிய அனைவரும் தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 31.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று வரை 54,78,720 தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.




கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் மட்டும் இதுவரை 2,58,98,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள், சுவாசக்கருவிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் 846 பகுதிகள் கொரோனா பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.  செய்தி வெளியீட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


>>> தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலாளர்...

தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு - ஆசிரியர்கள் கோரிக்கை...

 


அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்- பேரிடர் மேலாண்மை ஆணையம்...



>>> அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்- பேரிடர் மேலாண்மை ஆணையம்...


இன்றைய (05-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 05, 2021



பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில செலவுகளை செய்து மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 05, 2021



வியாபாரம் தொடர்பான புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீட்டை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரோகிணி : மாற்றங்கள் பிறக்கும்.


மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 05, 2021



உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் உண்டாகும். திட்டமிட்ட சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உடனிருப்பவர்களிடம் பகையை மறந்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் உண்டாகும்.


திருவாதிரை : நிதானத்துடன் செயல்படவும்.


புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 05, 2021



குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : பாராட்டுகள் கிடைக்கும். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 05, 2021



மனதில் தோன்றும் செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : உற்சாகம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 05, 2021



வியாபாரத்தில் பழைய சரக்குகளை அலைச்சல்களுக்கு பின்பு விற்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கற்ற கலைகளால் எதிர்பாராத லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.


அஸ்தம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.


சித்திரை : லாபம் உண்டாகும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 05, 2021



உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : ஆதாயம் உண்டாகும்.


சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.


விசாகம் : அனுகூலமான நாள். 

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 05, 2021



அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் ஞாபகமறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய விஷயங்களுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : காரியசித்தி உண்டாகும்.


அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும்.


கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 05, 2021



புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி அடைவீர்கள். அண்டை, அயலாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 05, 2021



எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முன்னேற்றமான புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : திருப்திகரமான நாள்.


அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 05, 2021



நண்பர்களின் உதவிகளால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இடைவெளிகள் குறையும். வியாபாரம் தொடர்பான முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


சதயம் : பொறுப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 05, 2021



பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தங்கள் ஏற்படும். சிலருக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : லாபம் ஏற்படும்.


உத்திரட்டாதி : பணவரவுகள் மேம்படும்.


ரேவதி : குழப்பங்கள் அகலும்.

---------------------------------------


தமிழ்நாடு அரசு பேராசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து – உயர் கல்வித்துறை உத்தரவு...

 தற்போது அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மீது தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேராசிரியர்கள் தற்காலிக பணி நீக்க காலங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.



இது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டோரின் பணி பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5198/ சி2/ 2019, நாள்: 01-04-2021...


வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலர்களாக (PRO) நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பதிவு...வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலர்களாக (PRO) நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பதிவு...

 நீங்கள் 2 அல்லது 3 பயிற்சிக்கூட்டங்களிலே இதுவரை கலந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானப் பணிகளைத் தமிழில் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தித் தருகிறோம்.


இதன்படி, உங்கள் பணிகளை வரிசையாக மேற்கொண்டால் பதட்டமின்றியும் வெற்றிகரமாகவும் அமையும்.



1) உங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், அதை மறந்து ஒரு தேர்தல் அலுவலராக நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.


 


நீங்கள் நேர்மையாகப் பணியாற்றுவது மிக முக்கியம்.. அதேபோல் நீங்கள் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறீர்கள் என்ற தோற்றம் பிறர் பார்வையில் எழும்புவது அதைவிட மிக முக்கியம்.


 


2) உங்களுக்கான வாக்குப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன், உங்கள் சக குழுவினரை அடையாளம் கண்டு கொண்டு, அந்த நொடியிலிருந்து ஒரே குழுவாக இயங்க ஆரம்பியுங்கள்.


 


3) தேர்தலுக்கு முதல்நாள் 1 மணிக்குள் முக மலர்ச்சியுடன் வாக்குப்பதிவு மையத்தைச் சென்றடைந்து, உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள App ல் உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்..


 


4) 05.04.21 அன்று 2 மணிக்கு எல்லா அலுவலர்களும் உங்கள் மையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, Appல் செய்தி அனுப்புங்கள்.


 


5) உங்கள் மையத்திற்குள் அரசியல் அடையாளங்கள், தலைவர்களின் படங்கள், வாசகங்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.



6) மையத்திலிருந்து 100 அடி மற்றும் 200 அடித் தொலைவில் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.


 


7) சக அலுவலர்களுடன் இணைந்து வாக்குப்பதிவு மையத்தை வாக்காளர்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் வடிவமையுங்கள். அலுவலர்கள், ஏஜெண்டுகள் அமர வேண்டிய இடத்தை முடிவு செய்யுங்கள்.


 


8 ) வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டு, அதனைச் சரி பாருங்கள். பேட்டரியை On செய்தும் Off செய்தும் இயக்கிப் பாருங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை #எப்படிஇணைப்பதுஎன்பதைஇத்துடன்இணைக்கப்பட்டுள்ள_வீடியோவைப் பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்..


 


VVPAT என்ற வாக்களிப்பதை உறுதி செய்யும் அச்சு எந்திரத்தின் மீது நேரிடையாக ஒளி எதுவும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். VVPAT - பின்பக்க பட்டன் Off position ல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


 


9) உங்களுக்கான மெட்டல் சீலைத் தனியாக எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.


தேர்தலுக்குப் பிறகு வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்க வேண்டிய படிவம் 17 C போதுமான அளவில் இருக்கிறதா என்பதைச் சரிபாருங்கள்..


உங்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்களோ அத்தனை எண்ணிக்கையில் அந்தப் படிவம் கைவசம் இருப்பது மிக முக்கியம்.


தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தப் படிவம் போதுமான அளவில் நிச்சயம் வழங்கப்படாது.


எனவே இப்பொழுதே போதுமான அளவில் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

   


 


10) உங்கள் மையத்திற்கான ஏஜெண்டுகளுக்கான நியமனக்கடிதம் வந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, அவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயார் செய்து, இரண்டையும் ஒரு கவரிலிட்டு தனியாக வையுங்கள். அவர்களைத் தொடர்பு கொண்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவிற்கு வரச் சொல்லி நினைவுபடுத்திவிடுங்கள்..



11) அடையாளமிடப்பட்ட வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு வாக்காளர்பட்டியல் பெறப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து எத்தனை வாக்காளர்கள்? ஆண்.. பெண்.. எத்தனை பேர் என்பதை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (பெரும்பாலான பேர் இதைச் சரிபார்க்க தவறிவிடுவர். வாக்காளர் பட்டியலில் எல்லா பக்கங்களும் வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். பின் அடிக்கிறபொழுது ஏதேனும் ஒரு தாள் தவறுதலாக விடப்பட்டிருந்தால்.. மறுநாள் மிகவும் சிரமப்படுவீர்கள்)



உங்கள் நிலையப் பகுதிக்குள் பிரபலமானவர்கள் எவரும் வாக்காளர்களாக இருக்கின்றார்களா என்பதை வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாசித்து தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்..



ஏனெனில் பிரபலஸ்தர்கள் வாக்களிக்க வரும் பொழுது பின்னாலேயே மீடியாக்கள்மீடியாக்கள் வரும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.. அவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதை எவரும் புகைப்படம் எடுக்க அனுமதித்துவிடாதீர்கள்..


 


12) Tender votes 


Challenged votes (ஐயத்திற்குரிய வாக்கு) என்பது பற்றி தெளிவாகிக் கொள்ளுங்கள்.


 


வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையைக் கையில் கொண்டு வந்திருக்கின்றார் என்பதற்காக அவரை வாக்களிக்க அனுமதிக்கவேகூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.


 


13) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள போஸ்டர்களை உரிய இடத்தில் ஒட்டி வையுங்கள்.


 


14) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அலுவலரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.


 


15) 06.04.21 அன்று காலை 5 மணிக்கே ஆயத்தமாகுங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து, ஏஜெண்டுகளை உள்ளே அனுமதித்து, அடையாள வில்லை அவர்களுக்கு வழங்கி, 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுங்கள்.


 


Clear


Ballot


Close


Total


Result


Clear


 


என்ற வரிசையில் இயந்திரத்தை இயக்குங்கள்.


 


குறைந்தபட்சம் 50 மாதிரி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.. அதற்கான நேரமிருக்குமா என்று பலரும் கவலைப்படுவதைப் பார்க்கிறோம்..


ஒரு வாக்குப்பதிவிற்கு 10 நொடிகள்தான்.. எனில் 50 பதிவிற்கு 500 நொடிகள்.. அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 10 நிமிடங்கள் வரைதான் ஆகும்..


அதன் பிறகு சீல் வைப்பதற்கு தனியே 10 நிமிடங்களே அதிகம்..


உங்களுக்கோ 1 மணி நேர அவகாசம் இருக்கிறது..


 


எனவே அது பற்றி கவலைப்படாதிருங்கள்.. பதட்டமும் அடையாதீர்கள்..


 


VVPAT டிரேயில் உள்ள சிலிப்புகளை வெளியே எடுத்து அதில் Mock poll ballot sheet என்ற ரப்பர் முத்திரையைப் பதிவு செய்து, அதையும் சீலிட்டு அதற்குரிய பையில் பத்திரப்படுத்தி.. அதை ஒரு டப்பாவில் அடைத்து சீல் வைத்து, முகவர்களிடம் கையெழுத்து பெற்று, பத்திரமாக வைத்திடுங்கள்..


 


#மிகமுக்கியம்..


 


Mock poll முடிந்த உடன் அனைத்தும் சரிபார்த்தல் முடிந்த பின்னர் மறுபடியும் Total பட்டனை அழுத்தவும். Total vote 0 என உள்ளதா என சரி பார்த்து விட்டு பின் polling ஆரம்பிக்கவும்.. இது மிக முக்கியம். ஏனெனில் நிறைய இடங்களில் mock poll ஓட்டை clear பண்ணாமல் polling ஆரம்பித்து விட்டு சிரமப்படுகின்றனர்.. (எக்காரணத்தை முன்னிட்டும் Close பட்டனை தொட்டுவிடாதீர்கள்)


 


Mock poll certificate ல் வந்திருக்கும் முகவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.


 


எந்திரத்தை சீல் செய்யுங்கள்.


 


Green seal


Special tag


Strip seal


Address tag


 


எல்லாவற்றிலும் நீங்களும் கையெழுத்திட்டு, முகவர்களிடமும் கையெழுத்து பெற்று அதன்பின்னர் பொருத்துங்கள்.


 


6.30 மணிக்கு Mock Poll Completed என App ல் பதிவு செய்யுங்கள்.


 


16) சரியாக 7 மணிக்கு வாக்காளர் ரகசியம் பேணுவது சார்ந்த உறுதிமொழி எடுத்து வாக்குப்பதிவைத் துவக்குங்கள். VVPAT மற்றும் Control unit யை On செய்து கொள்ளுங்கள்..


 


17) 7 மணிக்கு தேர்தல் துவங்கிவிட்டது என்பதை App ல் பதிவிடுங்கள்..


 


18) அதன்பிறகு கீழ்க்கண்ட நேரங்களில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்யுங்கள்.


 


ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை Evm total மற்றும் வாக்காளர் பட்டியலில் tick செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும்


 


9 மணி : _ _ _


11மணி: _ _ _


1 மணி : _ _ _


3 மணி : _ _ _


3.30. : _ _ _


4. : _ _ _


4.30. : _ _ _


5. : _ _ _


5.30. : _ _ _


6. : _ _ _


6.30. : _


7.00. : _


 


வாக்குப்பதிவை முடிக்க வேண்டியநேரம் இது.


 


அவ்வப்பொழுது வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியே சூழ்நிலையைக் கவனியுங்கள்..


  

மாலை 7 மணிக்கு, வரிசையில் வாக்காளர்கள் நின்றால், வரிசையில் நிற்கும் கடைசி நபரிடமிருந்து வரிசை எண்ணிடப்பட்ட டோக்கனை வழங்குங்கள். அவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதித்து விட்டு வாக்குப்பதிவை நிறுத்துங்கள்.


 


இயந்திரத்தில் CLOSE பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். முன்னதாக TOTAL சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


 


19) முதியோர்கள், கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதி செய்து கொடுங்கள்.


 


20) BATTERY யை OFF செய்யுங்கள். சீல் வையுங்கள். இணைப்புகளைத் துண்டியுங்கள்.


 


21) Agent களுக்கு வாக்குப்பதிவு கணக்குச் சீட்டு வழங்குங்கள்.


 


22) எல்லா நிகழ்வுகளையும் PROCEEDING OFFICER DIARYல் அவ்வப்பொழுது பதிவு செய்து வாருங்கள். அதுதான் பின்னால் பிரச்சனைகள் எதுவும் எழும்பினால் உங்களைக் காப்பாற்றும்.


 


7.00 மணிக்கு கீழ்க்கண்ட பதிவுகளை அனுப்புங்கள்.


 


VM _ _ _


VF _ _ _


VT _ _ _


 


23) எல்லாப் படிவங்களையும் தயார் செய்துவிட்டு, மண்டல அலுவலர் வந்ததும் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். (மெட்டல் சீல் மிக முக்கியம்)



24) உங்களோடு பணியாற்ற வந்திருக்கும் பெண் அலுவலர்களுக்கும் / பெண் காவலர்களுக்கும் நீங்கள்தான் மூத்த சகோதரர் என்பதை மனதில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்ல போதுமான வசதிகளும் பாதுகாப்பும் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்..


அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்.


எல்லாத் தேவைகளையும் குறிப்பால் உணர்ந்து உதவி செய்யுங்கள்..


அவர்கள் நம் சகோதரிகள்..


 


25) முதல்நாளே தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தைக் கணக்கிட்டு, உங்கள் கைப்பணத்திலிருந்து கவர் தயார் செய்து பிரித்து வைத்துவிட்டீர்கள் என்றால்.. தேர்தல் முடிந்தபிறகு சில்லறைக்கு என்ன செய்வது .. எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்ற கவலை தோன்றாமல் இருக்கும்..


அவ்வளவுதான்.. பதட்டமில்லாமல் இயங்குங்கள்..


எந்த முறைகேட்டையும் அனுமதிக்காதிருங்கள்..


எல்லா பணிகளும் நிறைவு பெற்ற பிறகு,


Agent களுக்கும் சக பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி கை குலுக்கி சந்தோஷமாய் வெளியே வாருங்கள்.

All the best..

தேர்தல் - வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான நேர வாரியான முக்கியக் குறிப்புகள்...

 


>>> தேர்தல் - வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான நேர வாரியான முக்கியக் குறிப்புகள் 1...


>>> தேர்தல் - வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான நேர வாரியான முக்கியக் குறிப்புகள் 2...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...