கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 09, 2021



தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : முதலீடுகள் உண்டாகும்.


பரணி : லாபகரமான நாள்.


கிருத்திகை : செல்வாக்கு உயரும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 09, 2021




சுயதொழில் புரிபவர்கள் தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.


ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 09, 2021




மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மேம்படும். கௌரவப் பதவிகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். நிர்வாகத்திறமை மற்றும் அனுசரித்து செல்லும் குணத்தினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : ஆர்வம் மேம்படும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 09, 2021




பணி தொடர்பான உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் கூட பிரச்சனைகளாக உருவெடுக்கக்கூடும் என்பதால் நிதானம் வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளால் மனவருத்தங்கள் நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : நிதானம் தேவை.


ஆயில்யம் : மனவருத்தங்கள் நேரிடும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 09, 2021




உடல் சோர்வினால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத லாபகரமான சூழல் உண்டாகும். வாக்குவாதங்களின் மூலம் சில கசப்புகள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், சாமர்த்தியமும் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : காலதாமதம் ஏற்படும்.


பூரம் : லாபகரமான நாள்.


உத்திரம் : சாமர்த்தியம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 09, 2021




ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் மூலம் உயர்கல்வி தொடர்பான கவலைகள் குறையும். மனைவியிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மருந்துப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் நண்பர்களின் உதவிகளால் லாபம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : கவலைகள் குறையும்.


அஸ்தம் : உதவிகரமான நாள்.


சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 09, 2021




விருப்பமானவர்களுக்காக சில உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உங்களின் மீது இருந்துவந்த சில தவறான குற்றச்சாட்டுகள் நீங்கி நற்பெயர் உண்டாகும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சொத்துப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : நற்பெயர் உண்டாகும்.


சுவாதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.


விசாகம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 09, 2021




பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் பொழுது மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும், மேன்மையும் உண்டாகும். திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : நன்மை உண்டாகும்.


அனுஷம் : தெளிவு கிடைக்கும்.


கேட்டை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 09, 2021




உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : உறவு மேம்படும்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : மந்தமான நாள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 09, 2021




நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எந்த வேலையிலும் முழு கவனத்துடன் செயல்படவும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது கவனத்துடன் ஈடுபடவும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : காரியங்கள் ஈடேறும்.


திருவோணம் : தன்னம்பிக்கை மேம்படும்.


அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 09, 2021




உறவினர்களிடமிருந்து வரும் சுபச்செய்திகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான எண்ணங்கள் மேம்படும். உடல் தோற்றப்பொலிவு மற்றும் அதற்குண்டான பயிற்சிகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : விழிப்புணர்வு அதிகரிக்கும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 09, 2021




மனதில் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான சில செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்த்த பணவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களினால் சுபவிரயங்கள் உண்டாகும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : குழப்பமான நாள்.


உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.


ரேவதி : சுபவிரயங்கள் உண்டாகும்.

---------------------------------------


2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...



 CEO's Transfer Order -  தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசாணை (வாலாயம்) எண்.25, நாள் 07.04.2021...


ஏப்ரல் 11 முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய அரசு...

மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது. 



ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 11 முதல் பணியிடங்களிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 



இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11 முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்த தகுதியான 100க்கும் அதிகமான பயனாளிகளை கொண்ட அலுவலகம் அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தை அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 8.7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை...

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 



கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . 

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 

ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்றப் பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 14-ல் என்இஎஸ்டி(NEST) தேர்வு : மே 20-ல் ஹால் டிக்கெட் வெளியீடு...

 தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு, ஜூன் 14-ம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் மே 20-ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 



தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்குத் தேசிய நுழைவுத் தேர்வு (என்இஎஸ்டி) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான என்இஎஸ்டி தேர்வு எழுத விண்ணப்பப்பதிவு https://www.nestexam.in/ என்ற இணையதளத்தில் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30 என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் என்இஎஸ்டி தேர்வு ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என்று அத்தேர்வை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட நாட்டின் 90 முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. ஹால்டிக்கெட் மே 20-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.4.2021...

 மத்திய ரயில்வே அமைச்சகத் தின் கீழ் செயல்படும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்

சிவில் இன்ஜினியர் பிரிவில் சிவில் இன்ஜினியர் 60, எஸ் அண்டு டி 14 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன. 



கல்வித்தகுதி

சிவில் இன்ஜினியர் பதவிக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். எஸ் அண்டு டி பிரிவுக்கு எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / இ.இ.இ., / இ.சி.இ. / இன்ஸ்ட்ருமென்டேசன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 


வயது: 1.3.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


முகவரி

DGM/HRM, Ircon International Ltd., Ltd., 

C4, C4, District Centre, Saket, 

New Delhi 110017. 

கடைசி தேதி: 

விண்ணப்பிக்க 18.4.2021. 

விண்ணப்பம் சென்று சேர 28.4.2021. 


மேலும் விவரங்களுக்கு: 

>>> இங்கே சொடுக்கவும்...


மாணவர்களுக்காக ஆன்லைனில் கோடைகால பயிற்சி முகாம் - அஞ்சல் துறை நடத்துகிறது...

 குழந்தைகளின் மத்தியில் தபால்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காக விதைக்க, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் சார்பில், வரும் மே மாதத்தில் ஆன்லைன் மூலம், கோடைகால முகாம் நடத்தப்பட உள்ளது.



இந்த முகாமின் ஒரு பகுதியாக, சிறப்பு தபால் தலையை பொழுதுபோக்காக சேகரிப்பதை அறிமுகம் செய்தல், கடிதம் எழுதும் பயிற்சிகள், தபால் நிலையத்துக்கு களப்பயணம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ரூ.250 கட்டணமாக செலுத்தி இந்த முகாமில் சேரலாம். 


நுழைவுக் கட்டணத்தை, காசோலை மற்றும் டிமான்ட் டிராப்ட் மூலம், 


தலைமை அஞ்சலக அதிகாரி, 

அண்ணா சாலை தலைமை அலுவலகம், 

சென்னை 600002 


என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இம்முகாம் 4 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதி மே 5 முதல் 7-ம் தேதி வரையிலும், 2-ம் தொகுப்பு மே 11 முதல் 13 வரையிலும், 3-வது தொகுதி மே 19 முதல் 21 வரையிலும், 4-ம் தொகுதி மே 26 முதல் 28-ம் தேதி வரையிலும் காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரையில் நடைபெறும். பங்கேற்பாளருக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும். அண்ணா சாலை தலைமை அஞ்சலக, தலைமை அஞ்சலக அதிகாரி சு.குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதை தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...